புதுவை சிறுமி கொலை வழக்கு! அணிந்த சட்டையால் கழுத்தை நெரித்து முக்கிய குற்றவாளி தற்கொலை முயற்சி!
புதுவை: புதுவையில் 9 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்த வழக்கில் கைதாகி காலாப்பட்டு சிறையில் உள்ள முக்கிய குற்றவாளி விவேகானந்தன் இன்று, தான் அணிந்திருந்த சட்டையால் கழுத்தை நெரித்து தற்கொலை செய்து கொள்ள முயற்சித்தார்.
புதுவை காலாப்பட்டு சிறையில் ஒரே அறையில் முக்கிய குற்றவாளிகளான விவேகானந்தும் கருணாஸும் அடைக்கப்பட்டுள்ளனர். அப்போது விவேகானந்தன் தான் அணிந்திருந்த சட்டையை கழற்றி கழுத்தை நெரித்து தற்கொலை செய்து கொள்ள முயற்சித்தார். அப்போது அங்கிருந்த கருணாஸ் அதிர்ச்சி அடைந்தார்.

புதுவை காலாப்பட்டு சிறையில் ஒரே அறையில் முக்கிய குற்றவாளிகளான விவேகானந்தும் கருணாஸும் அடைக்கப்பட்டுள்ளனர். அப்போது விவேகானந்தன் தான் அணிந்திருந்த சட்டையை கழற்றி கழுத்தை நெரித்து தற்கொலை செய்து கொள்ள முயற்சித்தார். அப்போது அங்கிருந்த கருணாஸ் அதிர்ச்சி அடைந்தார்.
உடனே கருணாஸ் கத்தி கூச்சல் போட்டார். அங்கிருந்த வார்டன் உடனடியாக ஓடி வந்து விவேகானந்தனை காப்பாற்றினார். இந்த சம்பம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
9 வயது சிறுமி: புதுவையில் 9 வயது சிறுமியை ஐஸ்கிரீமை காட்டி அழைத்து சென்ற கருணாஸ், விவேகானந்தன் வீட்டில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்தார். அவரைத் தொடர்ந்து விவேகானந்தும் பிஞ்சு குழந்தையிடம் மிருகம் போல் நடந்து கொண்டனர்.
மூச்சுத்திணறி இறந்த சிறுமி: இதனால் மயங்கிய அந்த சிறுமி மூச்சுத் திணறல் ஏற்பட்டு உயிரிழந்தார். அவரை இருவரும் சேர்ந்து மூட்டை கட்டி கால்வாயில் வீசிவிட்டு ஒன்றும் தெரியாதது போல் நடந்து கொண்டனர். இந்த வழக்கில் இருவரும் கடந்த சில தினங்களுக்கு முன்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு காலாப்பட்டு சிறையில் 14 நாட்களுக்கு அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.
தனிச்சிறையில்: இருவரையும் மற்ற கைதிகளுடன் அடைத்தால் அவர்கள் பிஞ்சை வேட்டையாடிய இந்த "மிருகங்களை" தாக்கக் கூடும் என்பதால் இருவரையும் தனிச் சிறையில் அடைத்தனர். அப்போது விவேகானந்தன் தான் அணிந்திருந்த சட்டையை வைத்து கழுத்தை நெரித்து தற்கொலை முயற்சி செய்ய முயற்சித்துள்ளார்.
சப்தமிட்ட கருணாஸ்: உடனே அங்கிருந்த கருணாஸ் சப்தம் போட்டதுடன் வார்டன் ஓடி வந்து விவேகானந்தனை காப்பாற்றினார். மேலும் இப்படியெல்லாம் செய்யக் கூடாது என்றும் எச்சரித்தார். இருவரையும் 3 நாட்கள் போலீஸ் காவலில் எடுக்க நீதிமன்றத்தில் இன்று மனு தாக்கல் செய்யப்படுகிறது.
முழு பின்னணி : புதுச்சேரி முத்தியால்பேட்டை சோலை நகர் பாடசாலை வீதியைச் சேர்ந்த ஓட்டுநருக்கு 9 வயதில் ஒரு மகள் இருந்தார். அவர் அங்குள்ள பள்ளியில் 5ஆம் வகுப்பு படித்து வந்தார். கடந்த 2ஆம் தேதி சிறுமி அவரது வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்தார். இந்த நிலையில் திடீரென அந்த சிறுமியை காணவில்லை. பெற்றோரும் விளையாடிவிட்டு வீட்டுக்கு வரும் சிறுமியை இன்னும் காணவில்லை என்பதால் அக்கம்பக்கம் தேடி பார்த்துள்ளனர்.
போலீஸில் புகார்: ஆனாலும் சிறுமி கிடைக்காததால் முத்தியால்பேட்டை காவல் நிலையத்தில் சிறுமியை காணவில்லை என புகார் அளித்தனர். இதையடுத்து போலீஸார் அப்பகுதியில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் அந்த சிறுமி எங்கோ நடந்து செல்லும் காட்சிகள் பதிவாகியிருந்தன. இந்த நிலையில் 4 நாட்கள் கழித்து சிறுமியின் வீட்டுக்கு 100 மீட்டர் தொலைவில் உள்ள கால்வாயில் ஒரு மூட்டை மிதப்பதாக தகவல் கிடைத்தது.
பிரேத பரிசோதனை: இதையடுத்து போலீஸார் அங்கு சென்று பார்த்த போது அழுகிய நிலையில் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் சிறுமியின் உடல் இருந்தது. அந்த சடலத்தை தனது மகள் என சிறுமியின் தந்தை அடையாளம் காட்டினார். இதையடுத்து சிறுமியின் உடலை பிரேத பரிசோதனைக்கு கொண்டு சென்றனர்.
பாலியல் பலாத்காரம்: பிரேத பரிசோதனை அறிக்கையில் சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதும் அவருடைய பிறப்புறுப்பில் உள் காயங்கள் அதிகமாக இருப்பதும், அந்த உறுப்பில் தையல் இருப்பதாகவும் அதிர்ச்சி தகவல்கள் தெரியவந்தது. இதையடுத்து சிறுமியின் உடல் கடந்த 7 ஆம் தேதி வைத்திக்குப்பம் மயானத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது.












Click it and Unblock the Notifications