புதுச்சேரி லாட்ஜ்ஜில் சுவற்றில் தேய்ந்த "முகம்".. காதலனின் தோளில் தொங்கி கொண்டே அபூர்வா.. அடக்கடவுளே
புதுச்சேரி: புதுச்சேரி லாட்ஜ்ஜில் ரூம் எடுத்து தங்கியிருக்கிறார்கள் இளம் தம்பதியினர்.. ஆனால், அந்த பெண்ணுக்கு என்ன நடந்தது எனதெரியவில்லை.. இது தொடர்பான விசாரணையை போலீசார் நடத்தி வருகிறார்கள்.
புதுச்சேரி வம்பாகீரப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் பிரதீப்.. 27 வயதாகிறது.. இவர் ஒரு போட்டோகிராபர்.. அதே பகுதியை சேர்ந்த அபூர்வா என்ற 22 வயது பெண்ணை காதலித்து வந்தார் பிரதீப்.

காதல் ஜோடி: அபூர்வாவும், பிரதீப்பை விரும்பியதால், கடந்த வருடம் இருவருமே திருமணம் செய்து கொண்டனர்.. ஆனால், இருவருமே இதை பற்றி தங்கள் வீடுகளில் சொல்லவில்லை..
"அலைபாயுதே" படத்தில் வருவதை போல, இருவரும் பதிவு திருமணம் செய்து கொண்டு, அவரவர் வீட்டில் இருந்துள்ளனர். தங்கள் வீட்டில் முறைப்படி திருமணம் நடக்கும் வரை, அவரவர் வீட்டிலேயே, தங்கியிருப்பது என்றும் முடிவு செய்தனர்.. எனினும், அவ்வப்போது வெளியே சந்தித்து பேசியும் வந்துள்ளனர்.
அப்படித்தான், கடந்த வாரம் தம்பதி இருவரும் சந்தித்து பேச முடிவு செய்தார்கள்.. இதற்காக பிரதீப், புதுச்சேரி சுப்பராயப்பிள்ளை வீதியிலுள்ள ஒரு லாட்ஜில் கடந்த 17ம்தேதி இரவு ரூம் எடுத்தார்.. தம்பதி இருவருமே அந்த லாட்ஜில் தங்கியிருந்தனர்..
பிரதீப்: கடந்த 20ம்தேதி இரவு, அபூர்வாவை தோளில் தூக்கி சுமந்தபடி, லாட்ஜின் மாடி ரூமிலிருந்து, கீழே படிக்கட்டில் இறங்கி வந்தார் பிரதீப்.. இதைப் பார்த்த லாட்ஜ் ஊழியர் கார்த்திக் (30), பிரதீப்பிடம் என்ன நடந்தது? என்று கேட்டுள்ளார். அதற்கு பிரதீப், அபூர்வா மயங்கி விழுந்து விட்டதாக சொல்லியிருக்கிறார்.. உடனே அரசு பொது மருத்துவமனைக்கு அபூர்வாவை அனுப்பி வைத்துள்ளனர்.
ஆனால், பிரதீப் மருத்துவமனைக்கு செல்லவில்லை.. இதனால் சந்தேகமடைந்த லாட்ஜ் ஊழியர் கார்த்திக், மருத்துவமனைக்கு சென்று பார்த்துள்ளார்.. அப்போது அபூர்வாவின் முகமெல்லாம் ரத்த காயங்கள் இருந்துள்ளன..
கள்ள தொடர்பு: இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த கார்த்திக், மறுபடியும் லாட்ஜூக்கு வந்து பிரதீப்பிடம் இதுபற்றி கேட்டுள்ளார்.. அதற்கு பிரதீப், "அபூர்வா இன்னொருவருடன் தொடர்பு வைத்திருந்தார். அதனால்தான் தாக்கினேன்" என்று கூலாக சொன்னாராம்..
இதையடுத்து, நடந்த சம்பவம் குறித்து, லாட்ஜ் மேனேஜரிடம் சொன்ன கார்த்திக், பெரியகடை போலீசிலும் இதுபற்றி தகவல் தந்தார்.. இந்த புகாரின்பேரில், போலீசார் கொலை முயற்சி பிரிவில் வழக்குபதிவு செய்து, பிரதீப்பை கைது செய்தனர்..
இதனிடையே, மருத்துவமனையிலிருந்த அபூர்வா, சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.. இதனால் கொலை வழக்காக மாற்றியமைத்த போலீசார், அபூர்வாவின் உடலை போஸ்ட் மார்ட்டம் செய்து, அவரது பெற்றோரிடம் ஒப்படைத்தனர்..
வாக்குமூலம்: அத்துடன் ஜெயிலிலுள்ள பிரதீப்பிடம் இதுகுறித்து விசாரித்துள்ளார்.. அதற்கு பிரதீப், "இன்னொரு ஆண் நபருடன் அபூர்வா பேசியவாறே இருந்தார்.. நான் பலமுறை சொல்லியும், அந்த ஆண் நண்பருடன் பழகி வந்ததால், ஆத்திரத்தில் அபூர்வாவை கடுமையாக தாக்கினேன்.. அபூர்வாவின் முகத்தை, லாட்ஜ் சுவற்றிலேயே தலைமுடியை பிடித்து அடித்து காயப்படுத்தினேன்" என்றாராம்.
முதல்கட்டமாக இந்த தகவல் வெளியாகியிருக்கும் நிலையில், கொலைக்கான முழு காரணமும் தெரியாததால், போலீசாரின் விசாரணை தொடர்கிறது.. இது தொடர்பாக இரு வீட்டினரின் உறவினர்கள் மற்றும் நண்பர்களிடம் விசாரணை நடத்த முடிவு செய்திருக்கிறார்களாம். அதுமட்டுமல்ல, பிரதீப்பிடம் விரிவான விசாரணை வேண்டும் என்பதால், புதுச்சேரி கோர்ட்டில் 3 நாள் காவல் விசாரணைக்கு அனுமதி கேட்டு முறையிட உள்ளதாக தெரிகிறது.
பரபரப்பு: போலீஸ் விசாரணை முடிவில்தான், அபூர்வாவை ஏன் கொன்றார்? என்று தெரியவரும். உண்மையிலேயே அபூர்வா வேறு ஆண் நண்பருடன் பழகினாரா? அல்லது விடுதியில் வேறு ஏதாவது அசம்பாவிதம் நடந்ததா? அல்லது வேறு ஏதாவது காரணமா? என்றெல்லாம் தெரியவரும் என்கிறார்கள்.
என்ன நடந்தது? : போட்டோகிராபரான பிரதீப், கிருஷ்ணகிரியில் நடந்த நிகழ்ச்சியில் போட்டோ எடுக்க சென்றபோதுதான் ஊத்தங்கரையைச் சேர்ந்த அபூர்வா பழக்கமாகியிருக்கிறார்.. இருவரும் காதலித்து கடந்த அக்டோபர் 25ம் தேதி பதிவு திருமணம் செய்து கொண்டனர். இதற்கு பிறகு, 2 பேருமே பிரதீப் வீட்டில் 4 மாதம் ஒன்றாக வசித்துள்ளார்கள்.
இதற்கு பிறகு பெற்றோர் சம்மதத்துடன் முறைப்படி திருமணம் செய்து கொள்ளலாம் என்று முடிவெடுத்துள்ளனர்.. அதன்படியே, அபூர்வாவை ஊத்தங்கரையில் உள்ள பெற்றோர் வீட்டில் விட்டு வந்தார்.
கணவர் பிரதீப்: அவ்வப்போது அபூர்வா, புதுச்சேரிக்கு வந்து கணவர் பிரதீப்பை பார்த்துவிட்டு செல்வது வழக்கமாம்.. அப்படித்தான், 17ம் தேதி புதுச்சேரி லாட்ஜூக்கு வந்துள்ளார்.. இந்த சம்பவம் 20ம் தேதி இரவு 9 மணிக்கு நடந்துள்ளதாக தெரிகிறது.
9:50 மணிக்கு, அபூர்வாவை தோளில் போட்டுக் கொண்டு, மாடியிலிருந்து படியிறங்கியபோது, ஓட்டல் ஊழியர் விசாரித்ததற்கு தவறி விழுந்து விட்டதாக சொன்னாராம்.. அதற்கு பிறகுதான், உண்மைத்தகவல் வெளியாகியிருக்கிறது.
வேறு ஆண்களுடன் பேசியதை பிரதீப் கண்டித்ததையடுத்து, தம்பதிக்குள் வாக்குவாதம் வெடித்ததாம். இதற்கு பிறகே, அபூர்வாவின் முகத்தை சுவற்றில் முட்டி மோதவிட்டும், தன்னுடைய கைகளால் அடித்தே கொன்றுள்ளதும் தெரியவந்திருக்கிறது. பிரதீப்பை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்கும் முயற்சி துரிதமாக நடந்து கொண்டிருக்கிறது.
-
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு












Click it and Unblock the Notifications