மழை நீரை குடித்தால் செயலிழந்த கிட்னியும் தானாக சரியாகிடுமாம்! புதுவை அமைச்சர் வினோத கருத்து

Subscribe to Oneindia Tamil

புதுச்சேரி: மழை நீரை குடித்தால் செயலிழந்த சிறுநீரகம் மீண்டும் செயல்படும் என கூறிய புதுவை அமைச்சர் ஜான் குமார், மழை நீரை எப்படி பிடித்து வைப்பது என்பது குறித்தும் வீடியோ மூலம் விளக்கமளித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், "வணக்கம் நான் ஜான்குமார் பேசுகிறேன். புதுவையில் வடகிழக்கு பருவமழை தொடங்கிவிட்டது. இந்த சந்தர்ப்பத்தை நாம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

puducherry kidney rain

ஒவ்வொரு ஆண்டும் நான் பயன்படுத்துவதை உங்களுக்கு சொல்கிறேன். ஒரு பெரிய பாரல்கள் 40 வாங்கியுள்ளேன். அது ஒன்று 700 என்றார்கள். எனக்கு 28 ஆயிரம் செலவானது. "உங்ககிட்ட வசதி இருக்கு நீங்கள் வாங்கிவிட்டீங்க"ன்னு சொல்லக் கூடாது.

உங்களிடம் என்ன பாத்திரம் இருக்கிறதோ, அதில் பிடித்து வைங்க. முதலில் பெய்யும் 15 நிமிட மழை தண்ணீரை அந்த பாத்திரங்களில் பிடித்து கீழே ஊற்றிவிட வேண்டும். பருவமழை தொடங்கிவிட்டதால் பிடித்து கீழே ஊற்ற தேவையில்லை.

பேரல்களில் பிடித்து வைத்த மழை நீரை ஒரு டேங்கில் ஊற்ற வேண்டும். அப்படி ஊற்றும் போது 5 அல்லது 6 வேட்டிகளை பிடித்து அதை வடிக்கட்டி போல் பயன்படுத்த வேண்டும். மழை தண்ணீரை குடிக்கலாம். அப்படியே தேன் போல் இருக்கும்.

puducherry kidney rain

மழை தண்ணீர் உடலுக்கு ரொம்ப நல்லது. அதாவது சிறுநீரகம் செயலிழந்தவர்கள், இந்த மழை தண்ணீரை குடித்தால் கிட்னி மீண்டும் செயல்படத் தொடங்கும்.

இந்த தண்ணீரை மேலே ஒரு முறை வடிகட்டி டேங்கில் விட்டுவிட்டு அந்த நீரை தண்ணீர் கேன்களில் மீண்டும் ஒரு முறை பில்டர் செய்து பிடித்து இருட்டு அறையில் கொண்டு போய் வைத்து விட வேண்டும்.

இது போல் இருட்டு அறையில் வைத்தால் கிட்டதட்ட இந்த தண்ணீர் 5 ஆண்டுகளுக்கு கெட்டு போகாது. சூரிய வெளிச்சம் பட்டால் 15 நாட்களிலேயே பாசிபிடித்து கெட்டுவிடும்.

இருட்டு அறை இல்லாவிட்டால் கருப்பு நிற கவரில் கேன்களை போட்டு வைத்து பாதுகாக்கலாம். எனவே பொதுமக்கள் தண்ணீர் பிரச்சினைக்காக அரசாங்கத்தின் மீது குறை சொல்லாமல் நாமே நமக்கு உண்டான தண்ணீரை சுத்திகரிக்கணும். அதற்கான விஷயத்தைதான் உங்களுக்கு சொல்லி கொடுத்திருக்கிறேன்.

puducherry kidney rain

வடகிழக்கு பருவமழை காலத்தில் உங்களால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு தண்ணீரை சேகரித்து வைங்க. நீங்கள் பிடித்தது போல மீதி நீர் பூமிக்கு செல்லும் வகையில் விட்டுவிட வேண்டும். அப்போதுதான் நிலத்தடியில் மழை நீர் தேங்கி நமக்கு நல்ல நீர் கிடைக்கும். இல்லாவிட்டால் கடல் நீர் புகுந்துவிடும் என அவர் தெரிவித்துள்ளார்.

மழைநீர் சுத்தமான நீர்தான். யாரும் இல்லை என சொல்லவில்லை. அதை சேமித்துவைத்து காய்ச்சி வடிகட்டி கூட குடிக்கலாம். ஆனால் அதை குடித்தால் செயலிழந்த சிறுநீரகம் கூட தானாக செயல்படத் தொடங்கும் என சொல்வதை எந்த அறிவியல் ஆதாரமும் இல்லாமல் நம்ப முடியாது என்பதுதான் பரவலான கருத்தாக உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+