எங்கே திரும்பினாலும் புதுச்சேரியில் டெங்கு.. அமைச்சர் நமச்சிவாயம் மருத்துவமனையில் அனுமதி.. என்னாச்சு
புதுச்சேரி : புதுச்சேரி உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் உடல்நலக் குறைவு காரணமாக, அங்குள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.. அங்கு டாக்டர்களின் கண்காணிப்புடன், அமைச்சருக்கு தீவிரமான சிகிச்சை நடந்து வருகிறது..
புதுச்சேரி உள்துறை அமைச்சர் நமச்சிவாயம், கடந்த சில நாட்களாகவே, காய்ச்சலால் அவதிப்பட்டுள்ளார்.. இதற்கான சிகிச்சையை அவர் எடுத்து வந்தபோதிலும், காய்ச்சல் குறையவே இல்லை.

உடல்நலம் பாதிப்பு: இதனால், நேற்றைய தினம், தனியார் மருத்துவமனையில் அமைச்சர் அனுமதிக்கப்பட்டார். அங்கு உடனடியாக அவருக்கு சிகிச்சை ஆரம்பமானது.. இன்று 2வது நாளாக தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது...
ஆனால், அமைச்சர் நமச்சிவாயம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தகவலை கேள்விப்பட்டதுமே, முதல்வர் ரங்கசாமி மற்றும் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், பாஜக நிர்வாகிகள், ஆதரவாளர்கள் அனைவருமே மருத்துவமனைக்கு திரண்டு சென்றார்கள்.. அமைச்சரின் உடல்நலம் குறித்து மருத்துவர்களிடமும், குடும்பத்தினரிடமும் நலம் விசாரித்தார்கள்.. மேலும் பலர் செல்போன் மூலமாக தொடர்பு கொண்டு, அமைச்சரின் உடல்நிலை குறித்து விசாரித்தனர்.
மருத்துவ பரிசோதனை: ஆனால், காய்ச்சல் அதிகமாக இருந்துள்ளது. அதனால்தான், மூலக்குளத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சென்ற அவருக்கு மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது.. அப்போது மருத்துவமனையிலேயே தங்கியிருந்து சிகிச்சை பெறுமாறு டாக்டர்கள் அறிவுறுத்தியிருக்கிறார்கள். அதனால்தான் நேற்றைய தினம் அமைச்சர் நமச்சிவாயம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
மருத்துவமனையிலும், ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு சோதனை செய்யப்பட்டது. அப்போது, அமைச்சர் நமச்சிவாயத்துக்கு ஏற்பட்ட பாதிப்பு சாதாரண சளி காய்ச்சல் என்பது தெரியவந்துள்ளது... இருந்தாலும், எந்தவித தொற்று நோயும் இல்லை என்று மருத்துவமனை தரப்பில் சொல்கிறார்கள்.. எனவே, ஓரிரு நாளில் அவர் நலமுடன் வீடு திரும்புவார் என்றே தெரிகிறது.
தீவிர காய்ச்சல்: ஆனால், புதுச்சேரியில் கடந்த சில நாட்களாகவே, உடல் அசதியுடன் சளி, காய்ச்சலால் நிறைய பேர் அவதிப்பட்டு வருகிறார்கள்.. நாளுக்கு நாள் காய்ச்சல் அதிகரித்து வருகிறது. டெங்கு, மலேரியா பரவி வருவதால் மருத்துவமனைகளில் கூட்டம் தற்போது அதிகமாகி கொண்டிருக்கிறது..
புதுச்சேரியில் கொசுத் தொல்லை அதிகரித்துள்ள நிலையில், கொசு மருந்து தெளிக்கும் பணியே நடக்கவில்லை. அதனால்தான், டெங்கு, சிக்குன்குனியாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.
வீடு திரும்புவார்: எதிர்க்கட்சிகள் இப்படி குற்றம்சாட்டி இருக்கும் நிலையில், புதுச்சேரி மாநில உள்துறை அமைச்சர் நமச்சிவாயமும், காய்ச்சலால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.
இந்த 2 நாட்களாக தொடர் சிகிச்சை தரப்பட்டு வருவதையடுத்து, அமைச்சரின் உடல்நிலை சீராகி வருவதாக கூறுகிறார்கள்.. எனவே, இன்றைய தினமே அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட வாய்ப்புள்ளதாகவும் தெரிகிறது.
-
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்! -
அறிவாலயத்தை உலுக்கிய ஆய்வுக்குழு! சேகர்பாபு மீது அடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்.. டென்ஷனில் ஸ்டாலின்! -
ஐடி துறையை கதறவிட்ட எலான் மஸ்க்! ஒரே ஆண்டில் கோடிங் எழுதும் வேலையை மொத்தமாக AI காலி செய்யுமாம்! -
“ஆண் உறுப்பின் சைஸை பார்ப்போம்..” பெண் டாக்டர் பேச்சால் சர்ச்சை! சவக்கிடங்கில் இதுதான் நடக்குதா? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது












Click it and Unblock the Notifications