முதல்வர் பேச்சை கூட கேட்கலையே.. பாஜக வேட்பாளர் கண்முன்னே வாழைக்காய்க்கு சண்டையிட்ட மக்கள்!
புதுச்சேரி: பிரசாரத்துக்கு வந்த பாஜக வேட்பாளர் பேசி கொண்டிருந்தபோதே அதனை கவனிக்காமல் அவரை வரவேற்பதற்காக வைக்கப்பட்டு இருந்த வாழை மரத்தில் இருந்து வாழை குலைகளை போட்டிப்போட்டு அக்குஅக்காக பிய்த்து எடுத்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
தமிழகத்தை போல் புதுச்சேரி லோக்சபா தொகுதிக்கும் வரும் 19ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. புதுச்சேரியில் தற்போது பாஜக கூட்டணி ஆட்சி நடக்கிறது. முதல்வராக ரங்கசாமி உள்ளார். இந்நிலையில் தான் புதுச்சேரி லோக்சபா தொகுதியிலும் தமிழகத்தை போல் நான்கு முனை போட்டி நிலவி வருகிறது.

புதுச்சேரி எம்பியாக தற்போது காங்கிரஸ் கட்சியின் வைத்திலிங்கம் உள்ளார். இவர் மீண்டும் திமுக கூட்டணி சார்பில் புதுச்சேரியில் களமிறங்கி உள்ளார். அதேபோல் பாஜக சார்பில் அமைச்சர் நமாச்சியம் போட்டியிடுகிறார். இதுதவிர அதிமுக சார்பில் தமிழ் வேந்தன், நாம் தமிழர் சார்பில் மேனகா போட்டியிடுகின்றனர்.
இந்நிலையில் தான் இன்று புதுச்சேரி நெட்டப்பாக்கம் பகுதியில் முதல்வர் ரங்கசாமியுடன் பாஜக வேட்பாளர் நமச்சிவாயம் தீவிர பிரசாரம் செய்தார். அப்போது அவர்களை வரவேற்க கட்சி நிர்வாகிகள் வாழை மரங்களை வரிசையாக வைத்திருந்தனர். இந்த வேளையில் புதுச்சேரி முதல்வர் ரங்சாமி, பாஜக வேட்பாளர் நமச்சிவாயத்துக்கு ஆதரவாக பேசி ஓட்டு சேகரித்தார்.
ஆனால் அங்கிருந்த பொதுமக்கள் அவரது பேச்சை கவனிக்கவில்லை. மாறாக அவர்களை வரவேற்க வைக்கப்பட்டு இருந்த வாழை மரத்தின் வாழை குலையின் மீது தான் கண்கள் இருந்தது. ஒரு கட்டத்தில் பொறுமை இழந்தவர்கள் பேச்சை முழுமையாக கேட்காமல் வாழை மரத்தில் இருந்த குலையில் இருந்து ஒவ்வொரு வாழைக்காய்களை பறிக்க தொடங்கினர். வாழைக்குலையை பறிக்க கூட்டம் கூடியதால் பொதுமக்கள் மத்தியில் போட்டி ஏற்பட்டது.
இதனால் அவர்கள் வாழைக்குலையை முழுவதுமாகவும், சிலர் வாழைக்காய்களையும் பிய்த்து எடுத்து சென்றனர். இந்த வீடியோ தற்போது இணையதளத்தில் வெளியாகி வேகமாக பரவி வருகிறது.
-
அந்த 2 லேடீஸ்..1 மாஜி தலை! பாஜக மண்ணைக் கவ்வ ‘இவர்கள்’ தான் காரணம்! அமித் ஷாவிடம் அடுக்கிய அண்ணாமலை! -
பழைய பன்னீர்செல்வமா வாங்க.. அண்ணாமலையை விடாத அமித் ஷா! பாஜக அள்ளிக் கொடுக்கும் ரெண்டு லட்டு! என்ன? -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
அண்ணாமலை முடிவால் கண்சிவந்த அமித்ஷா.. நயினாரை உடனே டெல்லி அழைத்த பாஜக மேலிடம்.. பாஜகவில் பரபரப்பு -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
பாஜக போல் வேண்டாம்.. அண்ணாமலையின் பிளான் என்ன? கிறிஸ்தவர் + இஸ்லாமியர்களையும் அரவணைத்து தனிக்கட்சி -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான் -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு












Click it and Unblock the Notifications