போலீசுக்கே தண்ணி காட்டும் "எழிலரசி".. சிக்கினால் மறுபடியும் ஜெயில்தான்.. தேடுதல் வேட்டை தீவிரம்
புதுச்சேரி பெண் தாதா எழிலரசி மீண்டும் தலைமறைவாகி விட்டார்
புதுச்சேரி: எழிலரசி அக்காவை போலீசார் தேடி வருகிறார்கள்.. இந்த பெண் தாதா எங்கே இருக்கிறார் என்றே தெரியவில்லை.. இவரை புதுச்சேரி போலீசார் தேடி வருகிறார்கள்... கையில் மாட்டினால் மறுபடியும் அரெஸ்ட்தான்!!
யார் இந்த எழிலரசி? இவர் ஒரு பெண் தாதா.. புதுச்சேரி மாநிலம் முன்னாள் சபாநாயகர் விஎம் சிவகுமார் கடந்த 2017ம் ஆண்டில் கொலை செய்யப்பட்டதில் முக்கிய குற்றவாளியே எழிலரசிதான்.. இந்த வழக்கு காரைக்கால் கோர்ட்டிலும் நடந்து வருகிறது.. இதைதவிர, குண்டர் சட்டத்தில் எழிலரசி கைது செய்யப்பட்டார்.

சில மாதங்களுக்கு முன்னாடிதான் ஜெயிலில் இருந்து வெளியே வந்தார். வந்தவர், திரும்பவும் ஒரு வழக்கில் சிக்கினார்.. காரைக்காலில் வசித்து வருபவர் வெங்கடேஷ்.. இவர் மதுக்கடை ஓனர் ஆவார்.. சர்ச் வீதியில் மதுபானம் மொத்த விற்பனை செய்து வருகிறார்.
இவரிடம் வேலை பார்த்த நாகராஜ் என்பவருக்கும், வெங்கடேசுக்கும் இடையே கொடுக்கல் வாங்கலில் தகராறு இருந்து வந்துள்ளது... இதில் நாகராஜ் என்பவருக்கு எழிலரசி தான் சப்போர்ட். அதனால், தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து வெங்கடேசனை பணம் கேட்டு அடிக்கடி மிரட்டி வந்துள்ளார் என்று தெரிகிறது.. இது சம்பந்தமாகவும் புகார் தரப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.
இந்த புகாரின் பேரில் எழிலரசியின் ஆட்கள் 3 பேரையும் போலீசார் ஏற்கனவே சுற்றி வளைத்து கைது செய்தனர்... எப்படியும் தன்னையும் கைது செய்ய போலீசார் வந்துவிடுவார்கள் என்று அறிந்த எழிலரசி, வீட்டிலிருந்து எஸ்கேப் ஆன சம்பவம் எல்லாம் நடந்து முடிந்தது.. தற்போது நிபந்தனை ஜாமீனில் எழிலரசி உள்ளார்.
அதனால், புதுச்சேரி ஸ்டேஷனுக்கு தினமும் வந்து கையெழுத்து போட இவர் ஆஜர் ஆக வேண்டும்.. ஆனால் கையெழுத்து போட வராமல் காரைக்கால் பெண் தாதா எழிலரசி தலைமறைவாகியுள்ளார்... இப்போது எங்கே இருக்கிறார் என்றே தெரியவில்லை. கொலை, பணம் பறித்தல் உள்ளிட்ட எந்த கேஸையும் மிச்சம் வைக்கவில்லை எழிலரசி.
பழிக்குப்பழியாக, கொலை செய்ய சபதம் போட்டவர்.. எல்லா குற்ற வழக்குகளிலும் இவர் மீது கேஸ் உள்ளது.. அதனால் இப்போது சிக்கினார் கண்டிப்பாக மறுபடியும் கைது நடவடிக்கை உறுதி என்பதால், போலீசார் இவரை தேடி வருகிறார்கள்.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications