மேகதாது அணைக்கு எதிராக புதுச்சேரி சட்டசபையில் தீர்மானம்.. முதல்வர் ரங்கசாமி முன்மொழிந்தார்
புதுச்சேரி: மேகதாதுவில் கர்நாடக அரசு புதிய அணை கட்ட எதிர்ப்பு தெரிவித்து புதுச்சேரி சட்டசபையில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
காவிரியின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் புதிதாக அணையைக் கட்ட கர்நாடகா அரசு தொடர்ந்து முயன்று வருகிறது. இந்த அணை மட்டும் கட்டப்பட்டால் தமிழ்நாட்டிலுள்ள பல லட்ச விவசாயிகள் கடுமையாகப் பாதிக்கப்படுவார்கள்.

இந்த அணையைக் கட்ட தமிழ்நாடு அரசு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. கடந்த சில வாரங்களுக்கு முன் இது தொடர்பாகத் தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் டெல்லி சென்று, அங்கு மத்திய நீர்வளத் துறை அமைச்சரைச் சந்தித்து இது தொடர்பாக ஆலோசனை நடத்தியிருந்தார்.
இருப்பினும் கர்நாடக அரசு அணை கட்டுவது உறுதி என்றே தொடர்ந்து குறிப்பிட்டு வருகிறது. கடந்த சில வாரங்களுக்கு முன் மேகதாது விவகாரத்தில் தமிழ்நாடு அரசு அரசியல் செய்வதாகக் குற்றஞ்சாட்டிய கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை, மிக விரைவில் மேகதாதுவில் அணைக் கட்டும் பணிகள் தொடங்கப்படும் என உறுதியளித்தார்.
மேகதாதுவில் அணை கட்ட தமிழ்நாடு மட்டுமின்றி புதுச்சேரி அரசும் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இந்நிலையில், மேகதாதுவில் அணை கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து புதுச்சேரி சட்டப்பேரவையில் ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
புதுச்சேரி சட்டசபையில் தற்போது பட்ஜெட் கூட்டத்தொடர் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதத்துடன் நடைபெற்று வருகிறது. இந்தச் சூழலில் மேகதாதுவில் அணை கட்ட எதிர்ப்பு தெரிவித்து புதுச்சேரி சட்டசபையில் முதல்வர் ரங்கசாமி தீர்மானம் ஒன்றை முன்மொழிந்தார்.
அதில் "மேகதாதுவில் அணைக் கட்டினால் காரைக்காலுக்குக் கிடைக்கும் 7 டிஎம்சி தண்ணீர் கிடைக்காது. எனவே மேகதாதுவில் அணை கட்ட அனுமதிக்கக் கூடாது என மத்திய அரசுக்குக் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. காவிரி மேலாண்மை கூட்டத்தில் மேகதாது அணை குறித்த விவாதத்தை எடுத்துக் கொள்ளக் கூடாது" என்று அந்த தீர்மானத்தில் முன்மொழியப்பட்டுள்ளது. புதுச்சேரி சட்டசபையில் இந்தத் தீர்மானம் ஒருமனதாக நிறைவேறியது
-
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது!












Click it and Unblock the Notifications