கொரோனாவில் அரசியல் செய்ய மாட்டேன் என மோடி வாக்குறுதி அளித்துள்ளார்.. நாராயணசாமி பேட்டி!
புதுச்சேரி: கொரோனா வைரஸ் ஒழிப்பு விவகாரத்தில் அரசியல் செய்யமாட்டேன் என பிரதமர் மோடி அனைத்து மாநில முதலமைச்சர்களிடமும் உறுதியளித்துள்ளதாக முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
Recommended Video
புதுச்சேரி சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர் நாராயணசாமி, பிரதமர் மோடி காணொளி காட்சி மூலம் அனைத்து மாநில முதலமைச்சர்களுடனும் கொரோனா தடுப்பு பணி குறித்து ஆலோசனை நடத்தினார். புதுச்சேரியில் கொரோனாவிற்காக எடுக்கப்பட்டுள்ள தடுப்பு நடவடிக்கைகள் குறித்து பிரதமர் மோடி என்னிடம் கேட்டார்.

நானும் புதுச்சேரியில் செய்யப்பட்டுள்ள கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அவரிடம் விரிவாக கூறினேன் என்றார்.
தொடர்ந்து பிரதமர் மோடியிடம் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்ததாக கூறிய முதலமைச்சர் நாராயணசாமி, புதுச்சேரி மாநிலத்திற்கு கொரோனா நிவாரண நிதியாக ரூபாய் 995 கோடியும், புதுச்சேரியில் பொருளாதாரத்தை மேம்படுத்த 4 மாதங்களுக்கான ஜிஎஸ்டி நிதி ரூபாய் 360 கோடி அளிக்கப்பட வேண்டும். ரிசர்வ் வங்கியில் வாங்கிய கடனுக்கான வட்டியை தள்ளுபடி செய்து, தவணை தொகையை கட்டுவதற்கு 6 மாதம் அவகாசம் அளிக்க வேண்டும்.

மே மாதம் 3 ஆம் தேதிக்கு பிறகு மத்திய அரசு எந்த முடிவு எடுத்தாலும், மக்களின் பொருளாதாரம் பாதிக்காமல் மத்திய அரசு பார்த்து கொள்ள வேண்டும். மேலும் 3 ஆம் தேதிக்கு பிறகு தொழிற்சாலைகள் மற்றும் கடைகளை திறப்பதற்கு மத்திய அரசு அனுமதி வழங்க வேண்டுமென பிரதமர் மோடியிடம் கோரிக்கை வைத்துள்ளேன் என்றார்.

மேலும் பிரதமர் மோடி மாநிலங்களுக்கு கொரோனா நிவாரண நிதி தருவது குறித்து எதுவும் பேசவில்லை என குற்றம்சாட்டிய முதலமைச்சர் நாராயணசாமி, கொரோனா பற்றி மட்டுமே மோடி பேசியதாகவும், அதேபோல்

தொழிற்சாலைகளில் பணிபுரிபவர்கள் ஒரு மாநிலத்தில் இருந்து மற்றொரு மாநிலத்திற்கு செல்வதற்கான சூழ்நிலையை உருவாக்க வேண்டும் என்றார்.

மேலும் பிரதமர் மோடி மாநிலங்களுக்கு கொரோனா நிவாரண நிதி தருவது குறித்து எதுவும் பேசவில்லை என குற்றம்சாட்டிய முதலமைச்சர் நாராயணசாமி, கொரோனா பற்றி மட்டுமே மோடி பேசியதாகவும்,

அதேபோல் கொரோனா வைரஸ் ஒழிப்பு விவகாரத்தில் அரசியல் செய்யமாட்டேன் என பிரதமர் மோடி அனைத்து மாநில முதலமைச்சர்களிடமும் உறுதியளித்துள்ளதாகவும், கொரோனாவை ஒழிக்க மாநில அரசுடன் மத்திய அரசு இணைந்து செயல்படும் என தெரிவித்தார் முதலமைச்சர் நாராயணசாமி.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications