“எங்களுக்கு ஒரு வலி இருக்கு”.. பிரதமர் மோடியிடம் மேடையிலேயே ரங்கசாமி வைத்த மிக முக்கிய கோரிக்கை!
புதுச்சேரி: பிரதமர் மோடியிடம் மேடையிலேயே புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி மேஜர் கோரிக்கையை வைத்துள்ளார். "எத்தனை திட்டங்களை நிறைவேற்றினாலும், எங்களிடம் சிறிய வலி, கோரிக்கை உண்டு. எங்களுக்கு மாநில அந்தஸ்து, தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு தனி அதிகாரம் வேண்டும் என்பது எங்கள் கோரிக்கை." எனப் பேசியுள்ளார் ரங்கசாமி.
தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, அசாம் மற்றும் மேற்கு வங்கம் ஆகிய 5 மாநிலங்களில் வரும் ஏப்ரல் மாதம் சட்டசபை தேர்தல் நடக்கிறது. இந்த 5 மாநிலங்களிலும் பிரதமர் மோடி சுற்றுப்பயணம் மேற்கொண்டு மத்திய, மாநில அரசுகளின் நலத் திட்டங்களை தொடங்கி வைத்து வருகிறார். புதுச்சேரியில் நலத்திட்டங்களை தொடங்கி வைக்க பிரதமர் நரேந்திர மோடி நேற்று இரவு சென்னை வந்தார்.

சென்னை கிண்டியில் உள்ள, மக்கள் மாளிகையில் (லோக் பவன்) தங்கிய பிரதமர், இன்று காலை சென்னையிலிருந்து ஹெலிகாப்டர் மூலம் புதுச்சேரி லாஸ்பேட்டை விமான நிலையத்துக்கு காலை 11.30 மணிக்கு வந்தார். அவரை மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா, புதுச்சேரி ஆளுர் கைலாஷ்நாதன், முதல்மைச்சர் ரங்கசாமி, சபாநாயகர் செல்வம், பாஜக மாநில தலைவர் ராமலிங்கம், புதுச்சேரி மாநில பாஜக பொறுப்பாளர் நிர்மல்குமார் சுரானா, அமைச்சர்கள் நமச்சிவாயம், லட்சுமிநாராயணன் உள்ளிட்டோர் வரவேற்றனர்.
இதைத்தொடர்ந்து குண்டு துளைக்காத கார் மூலம் விழா நடைபெற்ற லாஸ்பேட்டை ஹெலிமேடு மைதானத்துக்கு பிரதமர் மோடி வந்தார். புதுச்சேரி லாஸ்பேட்டையில் நடந்த அரசு விழாவில் ரூ.2,700 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சி திட்டங்களை தொடங்கி வைத்தார். 74 திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.
இந்த விழாவில் புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி பேசுகையில், "தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி 5 ஆண்டு முடிவுற்ற நிலையில் எந்த திட்டங்களை கொண்டுவந்து, செயல்படுத்தியுள்ளது என்பது மக்களுக்கே தெரியும். இவை அனைத்தும் மத்திய அரசு, பிரதமர் மோடியின் உதவியால்தான் செய்ய முடிந்தது. விவசாயிகள், ஆதிதிராவிடர் மக்களுக்கு அனைத்து திட்டங்களையும் செயல்படுத்தியுள்ளோம்.
சிறந்த கல்வி அளிக்க வேண்டும் என திட்டமிட்டு செயல்பட்டுள்ளோம். சமூக பாதுகாப்புக்காக அனைத்து திட்டங்களையும் செயல்படுத்தியது தேசிய ஜனநாயக கூட்டணி. அனைத்து மக்களுக்கும் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் முதியோர், மாற்றுத்திறனாளி, மீனவர் உதவித்தொகை, வீடு கட்டும் திட்டம் என அனைத்து திட்டத்தையும் நிறைவேற்றியுள்ளது என்.டி.ஏ கூட்டணி. பிரதமர் விரும்பியபடி பெஸ்ட் புதுச்சேரி என்ற நிலைக்கு இந்த அரசு கொண்டு வந்துள்ளது.
பல திட்டங்களை கொண்டுவந்து மாநிலத்தை வளர்ச்சிக்கு கொண்டுசெல்ல பிரதமர் வந்துள்ளார். நாட்டிலேயே சிறந்த மாநிலமாக புதுச்சேரி பெயர் பெற்றுள்ளது. மற்ற மாநிலங்கள் வியந்து பாராட்டும் வகையில் புதுவை மாநில வளர்ச்சி உள்ளது. இந்த வளர்ச்சிக்கு உறுதுணையாக பிரதமர் மோடி உள்ளார். எத்தனை திட்டங்களை நிறைவேற்றினாலும், எங்களிடம் சிறிய வலி, கோரிக்கை உண்டு.
எங்களுக்கு மாநில அந்தஸ்து, தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு தனி அதிகாரம் வேண்டும் என்பது எங்கள் கோரிக்கை. பல ஆண்டுகளாக புதுச்சேரி மக்கள் விரும்பியவாறு மாநில அந்தஸ்து வேண்டும் என வலியுறுத்தி வருகிறது எங்கள் அரசு. சட்டசபையில் சுமார் 13 முறை தீர்மானம் நிறைவேற்றி அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. எவ்வளவு வளர்ச்சி பெற்றாலும், தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு, அமைச்சர்கள், அமைச்சரவைக்கு தேவையான அதிகாரம் வேண்டும் என்பது புதுச்சேரி மக்களின் நீண்டகால கோரிக்கை. பிரதமர் இந்த கோரிக்கையை ஏற்று அதை செய்து கொடுப்பார்கள் என்று நம்புகிறேன்" எனப் பேசியுள்ளார்.
-
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி!












Click it and Unblock the Notifications