என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியீடு; தட்டாஞ்சாவடி, ஏனாம் தொகுதிகளில் ரங்கசாமி போட்டி!
புதுவை: புதுவையில் வேட்பு மனு தாக்கல் முடிந்த பின்பு என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியிட்டது.
புதுவை முன்னாள் முதல்வரும், என்.ஆர்.காங்கிரஸ் தலைவருமான ரங்கசாமி தட்டாஞ்சாவடி, ஏனாம் தொகுதிகளில் போட்டியிடுகிறார்.

புதுச்சேரி சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ், திமுக, இந்திய கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் ஒருபக்கம் ஓரணியாக திரண்டுள்ளன. மற்றோரு பக்கம் அதிமுக, பாஜக, என்.ஆர்.காங்கிரஸ் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்கின்றன.
இந்த கூட்டணியில் உள்ள பாஜக, அதிமுக ஏற்கனவே வேட்பாளர்கள் பட்டியலை அறிவித்து விட்டது. என்.ஆர்.காங்கிரஸ் 16 தொகுதிகளில் போட்டியிடுகிறது. ஆனால் வேட்பாளர்கள் பட்டியல் வெளியிட மிகவும் தாமதம் செய்து வந்தது.
வேட்பு மனு தாக்கல் தொடங்கி நிறைவும் பெற்று விட்டது. இந்த நிலையில் என்.ஆர்.காங்கிரஸ் 16 தொகுதிகளில் வேட்பாளர்களை அறிவித்துள்ளது. புதுவை முன்னாள் முதல்வரும், என்.ஆர்.காங்கிரஸ் தலைவருமான ரங்கசாமி தட்டாஞ்சாவடி, ஏனாம் தொகுதிகளில் போட்டியிடுகிறார்.

மீதமுள்ள தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள்:-
- திருபுவனை - கோபிகா
- ராஜ்பவன் - லட்சுமி நாராயணன்
- பாகூர் - தனவேலு
- நெட்டப்பாக்கம் - ராஜவேலு
- மாஹே - அப்துல் ரகுமான்
- காரைக்கால் வடக்கு - திருமுருகன்
- நெட்டுங்காடு(தனி) - சந்திரபிரியங்கா
- ஏம்பலம்(தனி) - லட்சுமி காந்தன்
- ஆரியங்குப்பம் - தட்க்ஷிணாமூர்த்தி
- இந்திரா நகர் - ஆறுமுகம்
- கதிர்காமம் - ரமேஷ்
- ஒழுகினசேரி - பன்னீர்செல்வம்
- வில்லியனுர் - சுகுமாரன்












Click it and Unblock the Notifications