புதுச்சேரி பாஜகவுக்கு.. மீண்டும் தலைவரானார் சாமிநாதன்!

Subscribe to Oneindia Tamil

புதுச்சேரி: புதுச்சேரி மாநில பாரதிய ஜனதா கட்சியின் தலைவராக மீண்டும் சாமிநாதன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். புதுச்சேரியில் பாஜக ஆட்சி அமைக்கும் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது என மேலிட பார்வையாளர் மத்திய அமைச்சர் பிரகலாத் சிங்க் பட்டேல் பேச்சு.

புதுச்சேரி மாநில பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவராக சாமிநாதன் கடந்த 2015 ஆம் ஆண்டு நியமிக்கப்பட்டார். அவருடைய பதவிக்காலம் முடிந்ததால் புதியதலைவரை தேர்ந்தெடுக்க இன்று தேர்தல் நடைபெற்றது.

Saminathan has been elected as the Puducherry state BJP president

தேர்தலில் புதிய மாநில தலைவராக, சாமிநாதன் மீண்டும் தேர்வு செய்யப்பட்டதாக மேலிட தேர்தல் பார்வையாளராக வந்த மத்திய இணை அமைச்சர் பிரகலாத் சிங் பாட்டேல் அறிவித்தார். இதனையடுத்து அதற்கான சான்றிதழ் சாமிநாதனுக்கு வழங்கப்பட்டது. தொடர்ந்து புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட பாஜகவின் தலைவர் சாமிநாதனுக்கு கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தனர்.

Saminathan has been elected as the Puducherry state BJP president

நிகழ்ச்சியில் பேசிய மத்திய அமைச்சர் பிரகலாத் சிங் பாட்டேல், புதுச்சேரியில் பாஜக ஆட்சியமைக்ககூடிய சாதகமான சூழல் உள்ளது. அடுத்தாண்டு நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில் பாஜக புதுச்சேரியில் ஆட்சியமைக்கும் என நம்பிக்கை தெரிவித்தார்.

Saminathan has been elected as the Puducherry state BJP president

பாஜகவின் புதியதலைவராக பதவி நீட்டிக்கப்பட்ட சாமிநாதன் புதுச்சேரி சட்டப்பேரவையின் நியமன சட்டமன்ற உறுப்பினராகவும் பணியாற்றி வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

Saminathan has been elected as the Puducherry state BJP president
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+