பாஜக எல்லாத்துக்கும் காரணம்.. அதிமுகவுக்கு இப்போ புரிஞ்சிருக்குமே.. போட்டுடைத்த கார்த்தி சிதம்பரம்
அதிமுக - பாஜக கூட்டணி முறிவு குறித்து கார்த்தி சிதம்பரம் கருத்து தெரிவித்துள்ளார்
புதுக்கோட்டை: நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாஜகவை சேர்த்து கொள்ளாமல், புத்திசாலித்தனமாக நடந்து கொண்டுள்ளது என்று கார்த்தி சிதம்பரம் எம்பி கருத்து தெரிவித்துள்ளார்.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் சூடுபிடித்து வரும் நிலையில், அனைத்து கட்சிகளும் மும்முரமாகி உள்ளன.. பல கட்சிகளில் தொகுதி பங்கீடு, பேச்சுவார்த்தைகள் இழுபறியில் உள்ளன.
இதில், திமுக, காங்கிரஸ் இடையே கடந்த ஒரு வாரமாகவே பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கிறது.. முதல்வர் ஸ்டாலின், மாவட்ட செயலாளர்களிடம் பேசி கொள்ள சொல்லிவிட்டதால், அதற்கான முன்னெடுப்புகளும் நடந்து கொண்டிருக்கிறது.

காங்கிரஸ் கட்சி
அந்த வகையில், புதுக்கோட்டை மாவட்டத்தில் மாவட்ட பொறுப்பாளரும் அமைச்சருமான எஸ்.ரகுபதி மற்றும் சிவகங்கை காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்று வந்தது... கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு புதுக்கோட்டையில் 20 இடங்கள் ஒதுக்கப்பட்டதையடுத்து, 2 கட்சிகளுக்கும் ஒரு உடன்பாடு எட்டியது.. இதற்கான ஒப்பந்தமும் கையெழுத்தான பிறகு சிவகங்கை கார்த்தி சிதம்பரம் செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார்.

கூட்டணி
அப்போது அவர் சொன்னதாவது: "புதுக்கோட்டை மாவட்டத்தில் திமுக - காங்கிரஸ் கூட்டணியில் உடன்பாடு எட்டப்பட்டிருக்கிறது.... இது எனக்கு மிகுந்த மனநிறைவை தந்துள்ளது.. மத்திய பட்ஜெட்டை நான் இன்னும் படிக்கவே இல்லை.. அதனால் படிக்காமல் அதை பற்றி கருத்து சொல்ல விரும்பவில்லை... நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை பொறுத்த வரையில் எல்லா கட்சிகளுமே அதிக இடங்களில் தேர்தலில் போட்டியிட வேண்டும் என்ற ஆசைப்படுவது இயல்புதான்.

தர்மசங்கடம்
ஆனால், கடவுளே வந்தாலும் சீட்டை கூடுதலாக கொடுக்க முடியாது... அதன் காரணமாக இப்போது கரூர் உள்பட சில இடங்களில் தர்மசங்கடமான சூழ்நிலை ஏற்பட்டிருக்கிறது... ஆனால், அதேசமயம், திமுக - காங்கிரஸ் கட்சி இடையே சுமூகமான சூழல் நிலவுகிறது... இந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக தங்களுடைய கூட்டணியில் பாஜகவை சேர்க்காமல் புத்திசாலித்தனமாக நடந்து கொண்டிருக்கிறது...

பாஜக
கடந்த காலங்களில் பாஜகவோடு கூட்டணி வைத்த காரணத்தால்தான் அதிமுக தோல்வி அடைந்தது... இதை எல்லாம் அதிமுக இப்போது புரிந்து கொண்டிருக்கும்.. பாஜகவோடு கூட்டணியில் இருப்பதால் சிறுபான்மையினர் மற்றும் தமிழர்களின் வாக்குகள் தங்கள் கட்சிக்கு வரவில்லை என்பதை அதிமுகவினர் உணர்ந்து கொண்டிருக்கிறார்கள்.. பாஜகவால் வரும் பாதகங்களை புரிந்து கொள்ள மட்டுமே இத்தேர்தல் உதவுமே தவிர இந்த தேர்தலில் அவர்களால் வெற்றி பெற முடியாது" என்றார்.












Click it and Unblock the Notifications