நியூ இயர் 2022-க்கு புதுவை வருகிறார் சன்னி லியோன்.. கண்டிஷன் போட்ட அரசு.. ஜஸ்ட் மிஸ்ஸில் பலர்!
புதுவை: புதுச்சேரியில் இசை நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக பாலிவுட் நடிகை சன்னிலியோன் வருகை தருகிறார். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள புதுவை அரசு சில நிபந்தனைகளை வெளியிட்டுள்ளது.
கடந்த 2020 ஆம் ஆண்டு புத்தாண்டு தொடங்கிய போதும் உற்சாகமே இல்லாமல் இருந்தது. காரணம் கொரோனா பாதிப்பு. அது போல் 2021 ஆம் ஆண்டு புத்தாண்டிலும் கொரோனா பல வெர்ஷன்களில் இருந்ததால் அதன் பாதிப்பு அனைவரையும் அச்சமடைய செய்தது.
சரி 2022 புத்தாண்டையாவது ஆட்டம் பாட்டம் கொண்டாட்டங்களுடன் கொண்டாடுவோம் என நினைத்தால் அதிலும் ஏமாற்றமே விஞ்சியது. தற்போது கொரோனாவுடன் அதன் உருமாற்றங்களான ஓமிக்ரான், டெல்மிக்ரான் உள்ளிட்டவை பரவி வருகின்றன.

ஓமிக்ரான் கேஸ்கள்
இந்தியாவில் ஓமிக்ரான் கேஸ்கள் அதிகரித்துள்ளன. இதனால் புத்தாண்டு கொண்டாட்டங்களை தவிர்க்குமாறு அந்தந்த மாநில அரசுகள் அறிவித்துள்ளது. சில அரசு இரவு நேர ஊரடங்குகளை கொண்டு வந்துள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில் தனியார் நட்சத்திர விடுதிகளில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

கடற்கரை
அது போல் டிசம்பர் 31, ஜனவரி 1 ஆகிய தேதிகளில் மக்கள் அதிகம் கூடாமல் இருக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் கடற்கரைகளுக்கு செல்லவும் பொதுமக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதே வேளையில் கொரோனா விதிமுறைகளை பின்பற்றி பொது இடங்கள் மற்றும் தனியார் விடுதிகளில் புத்தாண்டு கொண்டாட புதுவை அரசு அனுமதி அளித்துள்ளது.

சுண்ணாம்பாறு
சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் விதமாக டிசம்பர் 30, 31, ஜனவரி 1 ஆகிய தேதிகளில் சுண்ணாம்பாறு படகு குழாம், பாரடைஸ் கடற்கரை, ஓல்டு ஹார்பர் உள்ளிட்ட இடங்களில் இசை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த இசை நிகழ்ச்சியில் பிரபல பாலிவுட் நடிகை சன்னி லியோன் உள்ளிட்ட 50 க்கும் மேற்பட்ட கலைஞர்கள் கலந்து கொள்கிறார்கள்.

18 வயது
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள 2 டோஸ் தடுப்பூசி கட்டாயம் செலுத்தியிருக்க வேண்டும். மேலும் 18 வயதை அடைந்திருக்க வேண்டும். இந்த நிபந்தனைகளுக்குள்பட்டவர்கள் முன்பதிவு செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இரு தவணை தடுப்பூசி போட்டவர்கள் சன்னி லியோனை காண ஆர்வம் காட்டி வருகிறார்கள். 18 வயதுக்கு மேற்பட்டவர்களில் லேட்டாக தடுப்பூசி போட்டவர்கள் ஜனவரி 1ஆம் தேதிக்குள் அவர்களது இரண்டாவது தவணைக்கான ட்யூ வரவில்லை என்பதால் சற்று கலங்கி "ச்சே... ஜஸ்ட் மிஸ்" என மனதிற்குள் சொல்லிக் கொள்கிறார்கள். அங்கெங்க! ஒரு தவணையாவது போட்டாச்சு கொரோனா அந்தளவுக்கு பாதிக்காதுனு சந்தோஷப்பட்டா இவங்க எதுக்கெல்லாம் வருந்துறாங்க பாருங்கள்!
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு












Click it and Unblock the Notifications