புதுச்சேரி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

மணக்குள விநாயகரை தேர் போல வழிநடத்திய யானை லட்சுமி! கண்ணீர் விடும் புதுச்சேரி வாசிகள்! தமிழிசை அஞ்சலி

Google Oneindia Tamil News

புதுச்சேரி : புதுச்சேரியில் அருள்மிகு மணக்குள விநாயகரை தரிசிக்க வருபவர்களின் தோழியான லட்சுமி யானை இன்று இல்லை என்று நினைத்து வருந்துகிறேன் என யானை லட்சுமி மறைவிற்கு துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் இரங்கல் தெரிவித்துள்ளார்.

1995-ஆம் ஆண்டு ஐந்து வயதில் லட்சுமி என்ற யாணை புதுச்சேரியில் உள்ள பிரசித்திபெற்ற அருள்மிகு மணக்குள விநாயகர் கோவிலுக்கு அர்ப்பணிக்கப்பட்டது.

அன்று முதல் இன்று வரை விநாயகருக்கு சேவை செய்தும், பொதுமக்களுக்கும், பக்தர்களுக்கும் ஆசீர்வாதம் வழங்கி வந்தது. மேலும் புதுச்சேரி மக்களிடமும் பொதுமக்களிடமும் அன்பாக பழகக்கூடியது.

50 கார்கள்! ஆளுயர ரோஜாப்பூ மாலைகள்! ராமநாதபுரம் எல்லை டூ தேர்போகி! ராஜீவ் காந்திக்கு கூடிய கூட்டம்! 50 கார்கள்! ஆளுயர ரோஜாப்பூ மாலைகள்! ராமநாதபுரம் எல்லை டூ தேர்போகி! ராஜீவ் காந்திக்கு கூடிய கூட்டம்!

லட்சுமி யானை

லட்சுமி யானை

பாசத்திற்குரிய பழகுவதற்கு இனிமையான நல் உள்ளம் கொண்ட யாணை லட்சுமி வழக்கம் போல் இன்று விடியற்காலை ஈஸ்வரன் கோயில் அருகே உள்ள தனது இருப்பிடத்திலிருந்து நடை பயிற்சிக்காக வெளியே சென்றது. கல்வே காலேஜ் அருகே நடந்து சென்ற போது திடீரென யானை லட்சுமி மயங்கி கீழே விழுந்தது. மருத்துவர்களும், யானை பாகனும் பல முயற்சிகள் எடுத்தும் பலனில்லை. யானை லட்சுமி பறிதாபமாக உயிரிழந்தது.

பொதுமக்கள் அஞ்சலி

பொதுமக்கள் அஞ்சலி

தகவல் அறிந்து விரைந்து வந்த அமைச்சர் லட்சுமிநாராயணன் யானைக்கு அஞ்சலி செலுத்த கோவிலுக்கு எடுத்துச் சென்றனர். தற்போது மணக்குள விநாயகர் கோவில் எதிரே யானை லட்சுமி பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தர்ராஜன் யானை லட்சுமிக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.

மாலை அடக்கம்

மாலை அடக்கம்

மேலும் ஏராளமான பொதுமக்கள், பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று உயிரிழந்த யானை லட்சுமிக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தி வருகின்றனர். ஏராளமான பக்தர்கள் கண்ணீர்விட்டு அழுதது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. யானை லட்சுமி உயிரிழந்தது காரணமாக மணக்குள விநாயகர் கோவில் நடை சாத்தப்பட்டுள்ளது. இன்று மாலை கோவிலுக்கு சொந்தமான இடத்தில் அடக்கம் செய்யப்பட உள்ளது.

தமிழிசை சவுந்தரராஜன்

தமிழிசை சவுந்தரராஜன்

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், 'லட்சுமி இல்லாமல் கோவிலுக்கு வருவதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை, லட்சுமி உயிரிழந்தது அதிர்ச்சியான செய்தி என்றும், தங்கத்தேர் கோவிலில் வரும் போது தேர் போல வழிநடத்தி யானை லட்சுமி செல்லும், லட்சுமியின் இழப்பை எப்படி ஏற்றுக்கொள்ள முடியவில்லை எனவும், லட்சுமியின் இழப்பு ஒவ்வொரு வீட்டிலும் ஏற்பட்ட இழப்பு போன்றது. லட்சுமியை அடக்கம் செய்ய அரசு துறை நிற்கும், என்றும் யானை சரியாக பாதுகாக்கப்பட்டது, இதய அடைப்பு காரணமாக யானை லட்சுமி உயிரிழந்ததாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்' என்றார்

English summary
Deputy Governor Tamilisai Soundararajan has expressed his condolences on the death of Lakshmi the elephant, who is the friend of those who come to visit the auspicious Manakkula Vinayaka in Puducherry.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X