புதுச்சேரி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

புதுச்சேரிக்கு முதல்ல குடிக்க வருவாங்க! இப்போ எதுக்கு வர்றாங்க தெரியுமா? ரங்கசாமி முன் கலகல தமிழிசை!

Google Oneindia Tamil News

புதுச்சேரி : புதுச்சேரியில் மக்களை சார்ந்த விலை குறைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டதால் மது குடிக்க புதுச்சேரிக்கு வருகை தந்த அண்டை மாநிலத்தவர்கள் தற்போது பெட்ரோல் போட புதுச்சேரிக்கு வருவதாக துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்திரராஜன் கூறியுள்ளார்.

Recommended Video

    புதுச்சேரிக்கு முதல்ல குடிக்க வருவாங்க! இப்போ எதுக்கு வர்றாங்க தெரியுமா? ரங்கசாமி முன் கலகல தமிழிசை!

    மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் மற்றும் புதுச்சேரி சுகாதாரம் மற்றும் நல்வழித்துறை சார்பில் மாபெரும் சுகாதார திருவிழாவை துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன், முதல்வர் ரங்கசாமி இன்று குத்து விளக்கு ஏற்றி தொடங்கி வைத்தனர்.

    புதுச்சேரி பழைய துறைமுக வளாகத்தில் இன்று தொடங்கிய சுகாதாரத் திருவிழா மே 1ஆம் தேதி வரை மூன்று நாட்கள் நடைபெறுகிறது. திருவிழாவில் சுகாதார சிறப்பு வல்லுநர்கள், தலைமை மருத்துவர்கள் அனைவரும் பங்கு பெறுகின்றனர்.

    புதுச்சேரி மாணவர்களுக்கு குட் நியூஸ் சொன்ன அரசு... 1 முதல் 9ஆம் வகுப்பு வரை ஆல் பாஸ் புதுச்சேரி மாணவர்களுக்கு குட் நியூஸ் சொன்ன அரசு... 1 முதல் 9ஆம் வகுப்பு வரை ஆல் பாஸ்

    தமிழிசை சவுந்தரராஜன்

    தமிழிசை சவுந்தரராஜன்

    தொடர்ந்து பேசிய துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், புதுச்சேரியில் உள்ள அனைத்து மருத்துவமனைகளும் உலகத்தரம் வாய்ந்ததாக அமைந்துள்ளது என்றும் புதுச்சேரியில் இருந்து வெளி மாநிலத்திற்கு சிகிச்சை பெற செல்வதை விட புதுச்சேரிக்கு சிகிச்சை பெற வெளிமாநிலத்தவர்கள் அதிகம் வரும் நிலை தற்போது உருவாகியுள்ளது.

    கொரோனா காலம்

    கொரோனா காலம்

    கொரோனா காலத்தில் புதுச்சேரியில் செய்யப்பட்ட சிகிச்சையில் 40 சதவீதம் தமிழக நோயாளிகளுக்கும் பாரபட்சமின்றி முழுமையான சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். ஏற்கனவே மதுக்குடிக்கத்தான் புதுச்சேரிக்கு வருவார்கள் ஆனால் தற்போது பெட்ரோல் போட வெளிமாநிலத்தவர் புதுச்சேரிக்கு வருகை தருகின்றார்கள்

    விலை குறைப்பு நடவடிக்கை

    விலை குறைப்பு நடவடிக்கை

    ஏனெனில் மக்களை சார்ந்த விலை குறைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டதால் அந்தளவிற்கு நாம் முன்னேறி வருகின்றோம் என பெருமிதம் கொண்ட தமிழிசை எல்லாவற்றிற்கும் புதுச்சேரியை நோக்கி எல்லோரும் வரவேண்டிய நிலைக்கு நம்மை தயார் செய்துகொள்ள வேண்டும் எனவும் பேசினார்.

    முதல்வர் ரங்கசாமி

    முதல்வர் ரங்கசாமி

    மருத்துவ திருவிழாவில் பேசிய முதல்வர் ரங்கசாமி, 14 லட்சம் பேர் உள்ள புதுச்சேரியில் அதிக மருத்துவ கல்லூரிகள் உள்ளது என்றும் மருத்துவ கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களுக்கு உதவி தொகை வழங்கப்படுகின்றது என்றும் 276 மாணவர்கள் அரசு மூலமாக மருத்துவ படிப்பில் சேர்க்கப்பட்டு வருகின்றனர். அதிக மருத்துவ மாணவர்கள் புதுச்சேரியில் படித்து மருத்துவர்கள் ஆகின்றனர்.
    மருத்துவம் படித்து மருத்துவர்களானவர்கள் ஆராய்ச்சியிலும் ஈடுப்பட்டு, இப்போது வரும் நோய்களுக்கு மருந்துகள் கண்டுப்பிடிக்க வேண்டும் என்றார்.

    English summary
    lt Governor Tamilisai Soundararajan has said that people from neighboring states who came to Pondicherry to drink alcohol are now coming to Pondicherry to refuel.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X