குளவி கொட்டியதால் உழவர் சந்தைக்கு வந்தவர்கள் ஓட்டம்.. 12 பேர் மருத்துவமனையில் அனுமதி
புதுச்சேரி: புதுச்சேரி உழவர் சந்தைக்கு காய்கறி வாங்க வந்தவர்களை குளவி கொட்டியதால் 12 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனால் உழவர் சந்தை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
Recommended Video
கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக புதுச்சேரி மாநிலத்தில் வருகிற மே 3 ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இருந்தபோதிலும் அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் மட்டும் காலை 6 மணி முதல் மதியம் 1 மணி வரை திறந்திருக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

மேலும் பொதுமக்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்காததால், பெரிய மார்க்கெட் பகுதியில் செயல்பட்டு வந்த காய்கறி கடைகள், புதுச்சேரி புதிய பேருந்து நிலையத்திற்கு மாற்றப்பட்டு, செயல்பட்டு வருகிறது.

அதேபோல் புதுச்சேரி பழைய பஸ் நிலையம் பகுதியில் உழவர் சந்தை செயல்பட்டு வருகிறது. இங்கு புதுச்சேரி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதியை சேர்ந்த விவசாயிகளும், வியாபாரிகளும் கடை அமைத்து காய்கறி விற்பனை செய்து வருகின்றனர்.

இந்நிலையில் இன்று உழவர் சந்தை அருகிலுள்ள தாவிரவியல் பூங்காவில் இருந்து படையெடுத்து வந்த குளவிகள் காய்கறி வாங்க வருபவர்களை விரட்டி விரட்டி கொட்டின.

இதன் காரணமாக 12 பேர் பாதிக்கப்பட்டனர். இதனால் மயக்கம் அடைந்த அவர்கள் உடனடியாக புதுச்சேரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அதில் ஏழு பேர் புறநோயாளியாக சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்கள். மேலும் 5 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனிடையே சிகிச்சை பெற்று வருபவர்களை முதலமைச்சர் நாராயணசாமி நேரில் சந்தித்து உடல் நலம் விசாரித்தார். மேலும் குளவி கொட்டியதைத் தொடர்ந்து உழவர் சந்தை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications