நிச்சயித்த பெண் பேச மறுப்பு... வீடியோ காலில் லைவ்வாக தற்கொலை.. புதுச்சேரியில் சோகம்!
புதுச்சேரி: புதுச்சேரியில் திருமணம் நிச்சயிக்கப்பட்ட பெண் பேச மறுத்ததால் இளம் வழக்கறிஞர் ஒருவர் வீடியோ காலில் லைவ்வாக தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
புதுச்சேரி கனகசெட்டிகுளம் பகுதியைச் சேர்ந்தவர் விவசாயி கோதண்டம். இவரது மகன் சுரேஷ். புதுச்சேரி நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றி வருகின்றார். இவர் காலாப்பட்டு சட்ட கல்லூரியில் படித்தபோதிலிருந்து, அதே கல்லூரியில் பயின்ற கடலூரை சேர்ந்த பெண் ஒருவரை காதலித்து வந்துள்ளார்.

இதுகுறித்து தங்களது பெற்றோரிடம் தெரிவித்து திருமணம் செய்து கொள்ள இருவரும் சம்மதம் பெற்றனர். இதையடுத்து அவர்களுக்கு திருமணம் நிச்சயம் செய்யப்பட்டு வருகிற 27 ஆம் தேதி திருமணம் நடத்த ஏற்பாடுகள் நடைபெற்று வந்தது.
இந்நிலையில் திருமண அழைப்பிதழ் தேர்வு செய்வதற்காக நேற்று அந்த பெண் புதுச்சேரிக்கு வந்துள்ளார். சுரேசும் அந்த பெண்ணும் அழைப்பிதழ் விற்பனை கடைக்கு சென்று அழைப்பிதழை தேர்வு செய்துவிட்டு, பல்வேறு இடங்களுக்கு அவர்கள் சென்றுவிட்டு இரவு அந்த பெண் கடலூர் சென்றுவிட்டார்.

இதற்கிடையே சுரேஷ் அந்த பெண்ணுடன் தொலைபேசியில் தொடர்பு கொள்வதற்கு முயன்றார். ஆனால் அவர் எடுக்கவில்லை. தொடர்ச்சியாக முயற்சித்த சுரேஷ் இரவு 11 மணியளவில் அந்த பெண்ணுக்கு வீடியோ காலில் பேசியுள்ளார். அப்போது நீ என்னுடன் பேச மறுப்பதால் நான் தற்கொலை செய்து கொள்ளப்போகிறேன் என்று கூறி விட்டு, நாற்காலியில் நின்றபடி மின்விசிறியில் தூக்கு மாட்டினார். அதன்பிறகு போன் இணைப்பு துண்டிக்கப்பட்டது.
ஏதோ விளையாட்டுக்காகத்தான் சுரேஷ் இப்படி செய்கிறார் என நினைத்தார் அந்த பெண். ஆனாலும் பதட்டம் அடைந்த அவர் அந்த பகுதியை சேர்ந்த தனது நண்பர் சிவசக்தியை தொடர்பு கொண்டு விஷயத்தை கூறினார். உடனே சிவசக்தி சுரேஷ் வீட்டுக்கு சென்றார். அங்கு சுரேசின் அறை உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்தது. கதவை தட்டியும் உள்ளிருந்து எந்த பதிலும் வரவில்லை. இதனையடுத்து கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்றனர். அப்போது அவர் தூக்கில் தொங்கிக் கொண்டிருந்தார். உடனே தூக்கில் இருந்து அவரை மீட்டு கனகசெட்டிகுளம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். சுரேஷை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறினர்.

இதுகுறித்து காலாப்பட்டு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சுரேஷ் தற்கொலை குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், நிச்சயிக்கப்பட்ட பெண் பேச மறுத்ததால் தான் சுரேஷ் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணம் இருக்கிறதா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நிச்சயிக்கப்பட்ட பெண் பேச மறுத்ததால் இளம் வழக்கறிஞர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்?












Click it and Unblock the Notifications