புதுச்சேரி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சீன அதிபருக்கு எதிராக போராட்டம் நடத்த வந்த திபெத் எழுத்தாளர் கைது.. புழல் சிறையில் அடைப்பு

Google Oneindia Tamil News

புதுச்சேரி: மகாபலிபுரத்துக்கு வருகைதர உள்ள சீன அதிபர் ஷி ஜின்பிங்க்கு எதிர்ப்பு தெரிவிக்க புதுச்சேரி ஆரோவில் அருகே பதுங்கி இருந்த திபெத் நாட்டை சேர்ந்தவரை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர்.

வருகின்ற 11ம் தேதி மகாபலிபுரத்தில் நடக்க இருக்கின்ற ... பிரதமர் நரேந்திர மோடி-சீன அதிபர் ஷி ஜின்பிங்க் சந்திப்பையொட்டி சென்னை முதல் புதுச்சேரி வரை கிழக்கு கடற்கரைச் சாலைகள் கண்காணிப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

Tibetan writer arrested for planning to protest against chinese president xi jinping

3 நாள் பயணமாக இந்தியா வரும் சீன அதிபருக்கு எதிர்ப்பு தெரிவித்து, போராட்டத்தில் ஈடுபட திபெத் இளைஞர் ஒருவர் திட்டமிட்டுள்ளதாக, போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, போலீஸார் நடத்திய விசாரணையில், அந்த இளைஞர் விழுப்புரம் மாவட்டம், ஆரோவில் அருகே கோட்டக்குப்பத்துக்கு சனிக்கிழமை வந்திருப்பது தெரியவந்தது. அவர் திபெத் நாட்டைச் சேர்ந்த எழுத்தாளரும், சமூக செயல்பாட்டாளருமான டென்சின் சுண்டே(38) என்பதும் விசாரணையில் தெரியவந்தது.

மேகதாது விவகாரம்... கர்நாடகாவுக்கு மத்திய அரசு அனுமதி தரக்கூடாது...அன்புமணி கோரிக்கைமேகதாது விவகாரம்... கர்நாடகாவுக்கு மத்திய அரசு அனுமதி தரக்கூடாது...அன்புமணி கோரிக்கை

இதையடுத்து அவரை கோட்டக்குப்பம் காவல் நிலைய ஆய்வாளர் சரவணன் தலைமையிலான போலீஸார் கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் திபெத் மீதான சீனாவின் நெருக்கடியைக் கண்டித்து, சீன அதிபரின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து பதாகைகளை ஏந்தி போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீஸார் கைது செய்து சென்னை புழல் சிறையில் அடைத்தனர்.

English summary
Tibetan writer arrested for planning to protest againast chinese president xi jinping. Tibetan writer now jailed on puzhal
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X