"தமிழ்நாட்டுக்கு முன்பே புதுச்சேரியில் தவெக ஆட்சி..?” எம்ஜிஆர் பெயரை சொல்லி விஜய் சூசக பேச்சு!

Subscribe to Oneindia Tamil

புதுச்சேரி: "இந்த விஜய் தமிழ்நாட்டுக்கு மட்டும் குரல் கொடுப்பவன் அல்ல, புதுச்சேரி மக்களுக்காகவும் குரல் கொடுப்பான். அது என் கடமையும் கூட. புதுச்சேரியில் தவெக கொடி பட்டொளி வீசி பறக்கும்; நல்லதே நடக்கும்." என புதுச்சேரியில் தவெக தலைவர் விஜய் பேசியுள்ளார்.

எம்ஜிஆர் தொடங்கிய அதிமுக, தமிழ்நாட்டில் ஆட்சி அமைப்பதற்கு முன்பே புதுச்சேரியில் ஆட்சி அமைத்ததைக் குறிப்பிட்டுப் பேசியுள்ளார் விஜய். எம்ஜிஆரை ஃபாலோ செய்து வரும் விஜய், அதேபோல, தவெக புதுச்சேரியில் முதலில் ஆட்சியைப் பிடிக்கும் என சூசகமாகச் சொல்கிறாரா என்ற விவாதம் எழுந்துள்ளது.

Vijay tvk puducherry

புதுச்சேரி உப்பளம் துறைமுக வளாகத்தில் தவெக பொதுக்கூட்டம் நடைபெற்று வருகிறது. கியூஆர் கோடு பாஸ் இல்லாதவர்களும் பொதுக் கூட்ட இடத்தை நோக்கி வந்ததால் அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். அவர்கள் கலைந்து செல்லாமல் விஜய்யை பார்ப்பதற்காக நின்றிருந்ததால் அங்கு கடும் நெரிசல் ஏற்பட்டது. போலீசாரை தள்ளி அவர்கள் கூட்ட வளாகத்துக்குள் நுழைய முயன்றனர். இதனையடுத்து போலீசார் லேசான தடியடி நடத்தினர்.

இதையடுத்து சிறிது நேரம் பிரச்சார வாகனத்திலேயே அமர்ந்திருந்த தவெக தலைவர் விஜய் பின்னர், புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜுனா ஆகியோர் பேசிய பிறகு பிரச்சார வேனில் ஏறி மைக் பிடித்து பேசத் தொடங்கினார்.

விஜய் பேசுகையில், "ஒன்றிய அரசுக்குதான் தமிழ்நாடு தனி மாநிலம் புதுச்சேரி ஒரு யூனியன் பிரதேசம். நமக்கு அப்படி கிடையாது, நாம் வேறு வேறு கிடையாது, அனைவரும் ஒன்றுதான். வேறு வேறு வீட்டில், வேறு வேறு இடத்தில் இருப்பதால் நாம் சொந்தங்கள் இல்லை என்று ஆகிவிடுமா? இப்போ ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்ளும்போது அந்த பாச உணர்வு. உலகத்தில் எந்த மூலையில் நம் வகையறா இருந்தாலும் அவர்கள் எல்லோருமே நம் உறவுதான், நம் உயிர் தான்.

1977ல் எம்ஜிஆர் தமிழ்நாட்டில் ஆட்சி அமைத்தார். ஆனால், அதற்கு முன்பே 1974லேயே புதுச்சேரியில் அதிமுக ஆட்சி அமைந்தது. நமக்காக வந்தவர் எம்ஜிஆர் அவரை தமிழ்நாட்டில் மிஸ் பண்ணிடாதீங்க என நமக்கு அலர்ட் பண்ணியதே புதுச்சேரி தான். அப்படிப்பட்ட புதுச்சேரியை நம்மால் மறக்க முடியுமா?

தமிழ்நாடு போலவே புதுச்சேரி மக்களும் கிட்டத்தட்ட 30 வருடங்களாக என்னை தாங்கிப் பிடித்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த விஜய் தமிழ்நாட்டுக்கு மட்டும் குரல் கொடுப்பவன் அல்ல, புதுச்சேரி மக்களுக்காகவும் குரல் கொடுப்பான். அது என் கடமையும் கூட. புதுச்சேரியில் தவெக கொடி பட்டொளி வீசி பறக்கும்; நல்லதே நடக்கும்.. வெற்றி நிச்சயம்" எனப் பேசினார்.

மேலும், “புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கேட்டு பலமுறை சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றி அனுப்பி வைத்துக்கொண்டே இருக்கிறார்கள். 16 முறை தீர்மானம் நிறைவேற்றி அனுப்பியும் புதுச்சேரிக்கு இன்னும் மாநில அந்தஸ்தை மத்திய அரசு கொடுக்கவே இல்லை.

புதுச்சேரியில் ஒரு ஐ.டி. கம்பெனி உருவாக்க வேண்டும் என்ற எண்ணம் மத்திய அரசுக்கு இல்லை. காரைக்கால், ஏனாம், மாஹேவில் முன்னேற்றம் இல்லை, சுற்றுலா தலமான புதுவையில் பார்க்கிங் வசதி இல்லை.

ஒரு அமைச்சர் ஊழல் புகாரில் சிக்கி நீக்கப்பட்டு வேறு அமைச்சர் நியமிக்கப்பட்டு 200 நாள் ஆகியும் பதவி தரப்படவில்லை. 20 லட்சம் பேர் வாழும் புதுச்சேரி மத்திய நிதி குழுவில் இடம்பெறவில்லை. புதுச்சேரிக்கு போதிய நிதி வரத்து இல்லாததால் வெளியில் இருந்து கடன் வாங்க வேண்டி உள்ளது.

புதுச்சேரி கடனை குறைத்து பொருளாதாரத்தை வளர்க்க போதிய திட்டங்கள் வகுக்க வேண்டும். இந்திய அளவில் ரேசன் கடைகளே இல்லாத மாநிலமாக புதுச்சேரி உள்ளது. மற்ற மாநிலம் போல அரிசி, பருப்பு வழங்கும் முறையை புதுச்சேரியில் சீராக்க வேண்டும்." எனப் பேசினார் விஜய்.

முன்னதாக பேசிய தவெக தேர்தல் மேலாண்மை பிரிவு பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா, "தமிழ்நாட்டிற்கு மட்டுமில்லாமல் புதுச்சேரிக்கும் சேர்த்து மிகப்பெரிய திட்டம் வைத்திருக்கிறார் விஜய். அடுத்த 50 வருடத்திற்கு புதுச்சேரி வரலாற்றை மாற்ற காத்திருக்கிறார் விஜய். காற்று, வெள்ளத்தை எப்படி நிறுத்த முடியாதோ அப்படிதான் தவெகவை நிறுத்த முடியாது" எனப் பேசினார்.

அதற்கு முன்னதாக பேசிய தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த், "புதுச்சேரியில் தமிழக வெற்றிக் கழகத்தின் ஆட்சி கண்டிப்பாக இருக்கும். தமிழ்நாட்டின் முதலமைச்சராக 2026-ம் ஆண்டு விஜய் வருவார்" எனத் தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+