Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இதெல்லாம் மேஜர் மிஸ்டேக்.. விஜய் செய்த பெரிய தவறு.. இப்படி உளறி வச்சு இருக்காரே.. கவனிச்சீங்களா!

Subscribe to Oneindia Tamil

புதுச்சேரி: புதுச்சேரியில் ரேஷன் கடைகள் குறித்து தவறான தகவல்களை விஜய் பேசி உள்ளார். பொய்யான சில தகவல்களை விஜய் பேசியதாக கடுமையான விமர்சனங்கள் வைக்கப்பட்டு வருகின்றன.

புதுவையில் பாஜக கூட்டணியில் உள்ள என்.ஆர்.காங்கிரசையும், முதலமைச்சர் ரங்கசாமியையும் விமர்சிக்காத தவெக தலைவர் விஜய் மாறாக பாஜக அரசையும், திமுகவையும் விமர்சித்து தனது பிரசாரப் பேச்சை நிறைவு செய்தார். ரங்கசாமி உடன் கூட்டணியில் இருக்கும் பாஜகவை விமர்சனம் செய்து விஜய் பேசினார்.

விஜய் தனது பேச்சில், புதுச்சேரி மக்கள் திமுகவை நம்பாதீர்கள்; அவர்கள் நம்பவைத்து ஏமாற்றி விடுவார்கள். இந்திய அளவில் ரேஷன் கடைகளே இல்லாத இடம் புதுச்சேரிதான். மாநில அந்தஸ்து புதுச்சேரிக்கு கிடைத்தால்தான் போதுமான நிதி ஆதாரம் கிடைக்கும், என்று விஜய் பேசி இருந்தார்.

TVK Vijay made a blunder mistake by taking about Ration Shops in Puducherry

விஜய் பேச்சு - உண்மை என்ன?

இந்திய அளவில் ரேஷன் கடைகளே இல்லாத இடம் புதுச்சேரிதான் என்று ரேஷன் கடைகள் தொடர்பாக விஜய் பேசியது தவறான, பொய்யான தகவல்தான். ஏனென்றால் அங்கே ரேஷன் கடைகள் செயல்படுகின்றன. புதுச்சேரியில் சுமார் எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு, கடந்த 2024 முதல் ரேஷன் கடைகள் மீண்டும் செயல்படத் தொடங்கின. பொது விநியோகத் திட்டத்தைச் சார்ந்த குடும்பங்களுக்கு இந்தக் கடைகள் மூலம் இலவச அரிசி மற்றும் சர்க்கரை மீண்டும் கிடைப்பதால், மக்கள் இந்த முடிவை மிகுந்த மகிழ்ச்சியுடன் வரவேற்றுள்ளனர்.

முன்னதாக, புதுச்சேரியில் ரேஷன் கடைகள் மூலம் இலவச அரிசி வழங்கப்பட்டு வந்தது. ஆனால், 2016-ல் முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் வழங்கப்பட்ட அரிசித்தரம் குறித்துப் பல புகார்கள் எழுந்தன. இது அப்போதைய துணைநிலை ஆளுநர் கிரண் பேடி மற்றும் மாநில அரசுக்கிடையே மோதலை உண்டாக்கியது. நிர்வாகச் சிக்கல்களுக்குப் பிறகு, ஆளுநர் அரிசி விநியோகத்தைத் தடை செய்தார். இதனால் ரேஷன் கடைகள் படிப்படியாக முடங்கின.

ரேஷன் கடைகள் மூடப்பட்டதா?

பின்னர், மத்திய அரசு நேரடி பணப் பரிமாற்றத் திட்டத்தின் கீழ் அரிசிக்கான தொகையை பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் நேரடியாக செலுத்த உத்தரவிட்டது. மஞ்சள் அட்டைதாரர்களுக்கு ஒரு கிலோ அரிசிக்கு ₹30 வீதம் 10 கிலோவுக்கு ₹300ம், சிவப்பு அட்டைதாரர்களுக்கு 20 கிலோவுக்கு ₹600ம் வழங்கப்பட்டன. 2019-க்குள் அனைத்து ரேஷன் கடைகளும் முழுமையாக மூடப்பட, மக்கள் சந்தையில் அரிசி வாங்குவதைத் தவிர வேறு வழியில்லாமல் போயினர்.

ஆனால், அரிசி விலை தொடர்ந்து உயர்ந்ததால் ஏழைக் குடும்பங்கள் பெரிதும் சிரமப்பட்டனர். ரொக்கப் பரிமாற்றம் போதுமானதல்ல எனவும், ரேஷன் கடைகளில் மீண்டும் அரிசி விநியோகம் தொடங்க வேண்டும் எனவும் மக்கள் கோரினர். இக்கோரிக்கை பொதுக்கூட்டங்கள், அரசியல் பிரச்சாரங்களில் தொடர்ச்சியாக முன்வைக்கப்பட்டது. கடந்த மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்தின்போது பொதுமக்கள் முதலமைச்சர் என். ரங்கசாமியிடம் கேள்வி எழுப்ப, ரேஷன் அரிசி விநியோகம் விரைவில் மீண்டு வரும் என அவர் உறுதியளித்தார்.

முதலமைச்சர் அளித்த வாக்குறுதிப்படி, புதுச்சேரி அரசு 2024-ல் ரேஷன் கடைகளை மீண்டும் திறந்துள்ளது. இதன் மூலம் இலவச அரிசி, சர்க்கரை விநியோகம் தொடங்கியது. மாதந்தோறும் ரேஷனை நம்பியிருக்கும் லட்சக்கணக்கான குடும்பங்களுக்கு இந்த நடவடிக்கை நிம்மதியளித்துள்ளது. அத்தியாவசிய உணவுப் பொருட்கள் எளிதாகக் கிடைக்குமென்ற பாதுகாப்பு தற்போது மக்களுக்கு ஏற்பட்டுள்ளது. எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு ரேஷன் கடைகள் மீண்டும் திறக்கப்பட்டது புதுச்சேரியின் பொது நலத் திட்டத்தில் ஒரு முக்கிய மைல்கல்லாகும்.

ஆனால் இந்த விஷயம் கூட தெரியாத விஷயம்.. புதுச்சேரியில் ரேஷன் கடைகளே இல்லை என்று கூறி உள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+