பெரிய ஜாம்பவான்களை எல்லாம் பார்த்துட்டோம்.. விஜய் பற்றி கேட்காதீர்கள்.. சட்டென டென்ஷனான ஆர்எஸ் பாரதி
புதுச்சேரி: 76 வருஷம் பெரிய பெரிய ஜாம்பவான்களை எல்லாம் சந்தித்த கட்சி திமுக, தயவு செய்து விஜய் பற்றி எல்லாம் கேட்காதீர்கள். விஜய் கூட்டத்தை கூட்டிவிட்டார் என்பதற்காக ஒருவர் அரசியலில் நிலைத்துவிட முடியாது. கூட்டத்தை கூட்டியும் இன்று அரசியலில் தடம் தெரியாமல் போனதற்கு பலபேர் எடுத்துக்காட்டாக உள்ளனர் என்று திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்தார்.
புதுச்சேரி, கதிர்காமம் தொகுதி திமுக சார்பில் கலைஞர் சிலை, நுாலகம், தொகுதி அலுவலகம் திறப்பு விழா நடைபெற்றன. இந்த விழாவில், திமுக அமைப்புச் செயலாளர் வழக்கறிஞர் ஆர்.எஸ்.பாரதி, புதுச்சேரி மாநில திமுக அமைப்பாளர், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் சிவா உள்ளிட்டோர் பங்கேற்று திறந்து வைத்தனர்.

இதைத்தொடர்ந்து, ஆர்.எஸ்.பாரதி செய்தியாளர்களிடம் கூறியதாவது: திமுக சார்பில் புதுச்சேரியில் ஏற்கனவே பாரூக் மரைக்காயர், எம்.டி.ராமச்சந்திரன், ஆர்.வீ.ஜானகிராமன் என 3 முதலமைச்சர்கள் இருந்துள்ளனர். நான்கு முறை ஆட்சி அமைத்துள்ள நிலையில், தற்போது 5 ஆவது முறையாக திமுக ஆட்சியமைக்க உறுப்பினர் சேர்க்கை நடைபெறவுள்ளது.
திமுக அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெறும் வகையில் பணியாற்றுகிறோம். தொகுதி பங்கீடு குறித்து உள்ளூர் தலைவர்கள் என்ன வேண்டுமானாலும் சொல்லலாம். ஆனால் அதுகுறித்து இறுதி முடிவை ராகுல் காந்தியும், ஸ்டாலினும் தான் எடுப்பார்கள். தமிழகத்தில் திமுகவுக்கு நாங்கள் தான் போட்டி என அதிமுக, தவெக போன்ற கட்சிகள் சொல்கிறார்கள்.
எங்களுக்கு யார் போட்டி என்பது தேர்தல் நேரத்தில் தான் தெரியும். தற்போதைய சூழலில் நாங்கள் வலுவாக உள்ளோம். கடந்த 2019 இல் இருந்தே எடப்பாடி பழனிசாமி எங்கள் கூட்டணியில் இருந்து பல கட்சிகள் வெளியேறும் என சொல்லிக் கொண்டு இருக்கிறார், ஆனால் தற்போது அவர் கட்சியில் இருந்தே பாதி பேர் வெளியேறிவிட்டனர். முதலில் எடப்பாடி அவர் நிலைமையை காப்பாற்றிக்கொள்ள வேண்டும் என்று கூறினார்.
விஜய் செல்லும் இடங்களில் மக்கள் அதிகளவில் கூடுவது குறித்த கேள்விக்கு, பெரிய பெரிய ஜாம்பவான்களை எல்லாம் சந்தித்த கட்சி திமுக. தயவு செய்து விஜய் பற்றி கேட்காதீர்கள். ஓபனாக சொல்கிறேன். 76 வருடங்களில் பல பேரை பார்த்துவிட்டோம். நாரயணசாமி என்று ஒருவர் இருந்தார். விவசாயக் கட்சியை நடத்தி மிகப்பெரிய கூட்டத்தை கூட்டினார்.
80களுக்குப் பிறகு அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். எம்ஜிஆர், இந்திராகாந்தி, கலைஞர் ஆகிய 3 பேரும் அவருடைய ஆரவை கேட்கச் சென்றனர். ஆனால் அந்த கட்சியே இன்று இல்லை. அதனால், கூட்டத்தை கூட்டிவிட்டார் என்பதற்காக ஒருவர் அரசியலில் நிலைத்துவிட முடியாது. கூட்டத்தை கூட்டியும் இன்று அரசியலில் தடம் தெரியாமல் போனதற்கு பலபேர் எடுத்துக்காட்டாக உள்ளனர் என்றார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
விஜய் போட்ட உத்தரவு.. 5 நாள் தான் டைம்.. வீடு கட்டுவோருக்கு மெகா குட்நியூஸ்! -
“மாவட்ட செயலாளர் தொலைந்து போக வேண்டும்”.. அதிமுகவை விட்டு வெளியேறும் முக்கிய நிர்வாகி விட்ட சாபம்! -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
திருச்சிக்கு இன்று வருகிறார் முதல்வர் விஜய்.. வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க தவெக பிரமாண்ட ஏற்பாடு -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
"போட்டோ, வீடியோக்காக ஆய்வு செய்யமாட்டேன்".. அட தவெகவில் இப்படியும் ஒரு அமைச்சரா! -
சட்டம் ஒழுங்கு குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி! நைசாக நழுவிய அமைச்சர் ஆனந்த்! -
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்! -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
மாடு பலியிட தடை.. தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வோம்! அமைச்சர் ஷாஜஹான் உறுதி












Click it and Unblock the Notifications