“என் கட்சி ஜெயிச்சா.. 2 புஃல் வாங்கி தரணும்!” புதுச்சேரியில் அனல் பறக்கும் பெட்டிங்!
புதுச்சேரி: சட்டமன்ற தேர்தலில் எந்த கட்சி ஜெயிக்கும்? வேட்பாளர் டெபாசிட் வாங்குவாரா? எத்தனை வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார்? என்பது குறித்து புதுச்சேரியில் பெட்டிங் சூடுபிடித்திருக்கிறது.
கிரிக்கெட்டில் எந்த அணி ஜெயிக்கும் என்பது குறித்து பெட்டிங் கட்டி பார்த்திருப்போம். ஆனால், தேர்தலில் எந்த கட்சி ஜெயிக்கும் என்பது குறித்து பெட்டிங் வைத்திருப்பது.. புதுச்சேரியில் சமீபத்திய டிரெண்டாக மாறியிருக்கிறது.

புதுச்சேரியில் கடந்த ஏப்.9ம் சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. பதிவான வாக்குகள் மே.4ம் தேதி எண்ணப்படும். இந்த முறை 91.23% வாக்குகள் பதிவாகியிருந்தன. வழக்கமாக அதிக அளவில் மக்கள் தேர்தலில் பங்கேற்கிறார்கள் எனில், அங்கு ஆட்சி மாற்றம் ஏற்படும். எனவே ஆளும் தரப்பு ஒருவித அச்சத்தில்தான் இருக்கிறது. இருப்பினும், பீகாரில் கடந்த தேர்தலில் இதேபோல வாக்குப்பதிவில் அதிக வாக்காளர்கள் பங்கேற்றிருந்தனர். அங்கு எந்த ஆட்சி மாற்றமும் ஏற்படவில்லை. எனவே எதிர்க்கட்சி தரப்பு நிம்மதியை இழந்திருக்கிறது.
இப்படியாக இந்த தேர்தலில் யார் ஆட்சியை பிடிக்கப்போகிறார்கள்? என்கிற எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது. இந்நிலையில் புதுச்சேரியில் பெட்டிங் சூடுபிடித்திருக்கிறது. பணம் இருப்பவர்கள் வசதிக்கு ஏற்றார்போல பெட்டிங் கட்டுக்கிறார்கள்.
சிலர் கார்களை பந்தயமாக வைக்கிறார்கள். "பாரு என் கட்சி ஜெயிச்சா.. நீ பந்தயம் வச்சி இருக்குற கார் எனக்கு சொந்தம். உன் கட்சி பெற்றி பெற்றால், என்னுடையதை நீ எடுத்துக்கோ" என்கிற ரேஞ்சில் பெட்டிங் போய்க்கொண்டிருக்கிறது.
ஆனால், பரவலாக பணம்தான் பெட்டிங் வைக்கப்பட்டிருக்கிறது. கட்டிய பணத்தை மூன்று மடங்கு திருப்பி எடுத்துக்கொள்ளலாம் என்று பெட்டிங் வைக்கப்பட்டிருக்கிறது. "உன் ஆளு டெபாசிட் கூட வாங்க மாட்டார் பாரு.. என்று சொல்லி ரூ.10 ஆயிரம் தொடங்கி பணம் பல்க்காக பெட்டிங் வைக்கப்படுகிறது.
இன்னும் சிலர், கார் பணத்தை தாண்டி, சரக்கை பெட்டிங்காக வைத்திருக்கிறார்கள். "என் தலைவர் ஜெயிச்சாருன்ன.. நீ மூனு புஃல் தரணும் பாத்துக்கோ" என்று பெட்டிங் எகிறியிருக்கிறது. இதனால் புதுச்சேரியல் யார் வெற்றி பெறுவார்கள் என்பது குறித்த எதிர்ப்பார்ப்பு சூடுபிடிக்க தொடங்கியிருக்கிறது.
-
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா?












Click it and Unblock the Notifications