கழிவுநீர் கால்வாயில் குதித்து மூதாட்டியை காப்பாற்றிய போலீஸ்காரர்கள்! உணவும் கொடுத்து நெகிழ்ச்சி!

Subscribe to Oneindia Tamil

புதுச்சேரி: புதுவையில் கழிவுநீர் வாய்க்காலில் தவறி விழுந்த மூதாட்டியை 2 காவலர்கள் பத்திரமாக மீட்டனர். தமிழகத்தை போலவே புதுச்சேரி மாநிலத்திலும் வடகிழக்கு பருவமழை வெளுத்து வாங்கி வருகிறது. கடந்த நான்கு நாட்களாக புதுவை, காரைக்கால் பகுதியில் கனமழை பெய்து வருகிறது.

கனமழை காரணமாக புதுச்சேரி மூலக்குளம் குண்டுசாலையில் மழைநீர் வெள்ளம்போல் பெருக்கெடுத்து ஓடியது. இந்த நிலையில் புதுச்சேரி உழவர்கரை மேரி வீதியை சேர்ந்தவர் சுந்தரி (80). மூலகுளம் குண்டு சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார்.

தவறி விழுந்த மூதாட்டி

தவறி விழுந்த மூதாட்டி

மழை அதிகமானதாலும், மழைநீர் அதிகமாக சென்றதாலும் மூதாட்டி சுந்தரி சாலையோரம் ஒதுங்கி நின்று கொண்டிருந்தார். அப்போது மூதாட்டி சுந்தரி சாலையோரம் இருந்த கழிவுநீர் வாய்க்காலில் எதிர்பாராதவிதமாக சுந்தரி தவறி விழுந்தார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் புதுச்சேரி காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தனர். அங்கு இருந்து ரெட்டியார்பாளையம் போலீஸ்நிலையத்துக்கு தகவல் சென்றது.

காப்பாற்றிய காவலர்கள்

காப்பாற்றிய காவலர்கள்

இதனை தொடர்ந்து ரெட்டியார்பாளையம் போலீஸ் நிலைய காவலர்கள் ஜெயபிரகாஷ், சரவணகுமார் இருவரும் சம்பவ இடத்துக்கு மின்னல் வேகத்தில் வந்தனர். கழிவுநீர் வாய்க்காலில் மூழ்கி போராடிய மூதாட்டியை பத்திரமாக மீட்டனர். கணவர், பிள்ளைகள் இறந்து விட்ட நிலையில் மூதாட்டி உழவர்கரை பகுதியில் உள்ள வீட்டில் தனியாக வசித்து வருவது தெரியவந்தது;

உணவும் வாங்கிக்கொடுத்துள்ளனர்

உணவும் வாங்கிக்கொடுத்துள்ளனர்

இதனை தொடர்ந்து இரண்டு காவலர்களும் மூதாட்டியை கோட்டக்குப்பத்தில் உள்ள தங்கையின் மகன் வீட்டில் ஒப்படைத்தனர். அத்துடன் கடமை முடிந்து விட்டது என்று நினைக்காமல் காவலர்கள் ஜெயபிரகாஷ், சரவணகுமார் இருவரும் மூதாட்டியின் உடைகளை மாற்றியும், அவருக்கு உணவும் வாங்கிக்கொடுத்துள்ளனர்.

பலரும் பாராட்டு

பலரும் பாராட்டு

காவலர்களின் இந்த மகத்துவமான செயலை ஒருவர் தனது செல்போனில் வீடியோ மற்றும் புகைப்படம் எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. மூதாட்டியை உயிருடன் காப்பாற்றியது மட்டுமில்லாமல் உடை, உணவு வழங்கிய காவலர்களுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+