குடுமியை பிடித்துக்கொண்டு.. மாறி மாறி சண்டை போட்ட மாணவிகள்.. காரணத்தை கேட்டா.. ஆடிடுவீங்க!
புதுச்சேரி: புதுச்சேரியில் இரு பள்ளி மாணவிகள் இடையே குடுமிப்பிடி சண்டை ஏற்பட்டதால் அப்பள்ளிகளுக்கு 4 நாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒருகாலத்தில் பள்ளி, கல்லூரியில் மாணவர்களுக்கு இடையே மோதல் ஏற்படுவது வாடிக்கையாக இருந்தது. ஆனால், தற்போது மாணவர்களுக்கே டஃப் கொடுக்கும் வகையில் மாணவிகளும் கோதாவில் குதித்து விட்டார்கள் போல தெரிகிறது. கடந்த சில மாதங்களாகவே சென்னை முதல் கன்னியாகுமரி வரையில் பள்ளி, கல்லூரிகளில் பயிலும் மாணவிகள் பொதுவெளயில் வைத்து சண்டையிட்டுக் கொள்வது அதிகரித்து வருகிறது.
சென்னை, நெல்லை, மதுரை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அண்மைக்காலமாக மாணவிகள் ஒருவருக்கொருவர் சண்டையிட்டுக் கொள்ளும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பெற்றோரையும், சமூக ஆர்வலர்களையும் கவலையில் ஆழ்த்தியுள்ளன. அந்த வகையில், தற்போது புதுச்சேரியில் இரு பள்ளி மாணவிகள் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.

ஒரே வகுப்பு; இரு பள்ளி மாணவிகள்
புதுச்சேரியில் உள்ள குருசுக்குப்பம் பகுதியில் சுப்பிரமணிய பாரதியார் மகளிர் மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இங்கு 1000-க்கும் மேற்பட்ட மாணவிகள் பயின்று வருகின்றனர். இதனிடையே, இப்பள்ளியில் கட்டுமானப் பணிகள் நடைபெறுவதால் இங்கு 11 மற்றும் 12-ம் வகுப்புகளில் பயிலும் மாணவிகள், அருகில் உள்ள என்கேபி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் தற்காலிகமாக அமர்த்தப்பட்டனர். அங்கு ஒரே வகுப்புகளில் இரு பள்ளி மாணவிகளுக்கும் ஒன்றாக பாடம் நடத்தப்பட்டு வந்தது.

அமரும் இடம் தொடர்பாக தகராறு
இதனிடையே, கடந்த வாரம் யார் எங்கே அமர்வது என்பதில் இரு பள்ளிகளைச் சேர்ந்த சில மாணவிகளுக்கு இடையே பிரச்சினை ஏற்பட்டது. பிறகு ஆசிரியைகள் சமானதானம் செய்து வைத்ததால் அந்த பிரச்சினை அப்போதைக்கு முடிவுக்கு வந்தது. எனினும், இரு தரப்பு மாணவிகளுக்கு இடையே அவ்வப்போது சிறு சிறு தகராறுகள் ஏற்பட்டு வந்த வண்ணம் இருந்தன.

வெடித்தது மோதல்
இந்நிலையில், இன்று காலை வழக்கம் போல பள்ளி தொடங்கி வகுப்புகள் நடைபெற்றுக் கொண்டிருந்தன. அப்போது இரு பள்ளி மாணவிகள் இடையே திடீரென மோதல் ஏற்பட்டது. இதில் மாணவிகள் இரு பிரிவுகளாக பிரிந்து கொண்டு ஒருவரையொருவர் கடுமையாக தாக்கிக் கொண்டனர். இதுகுறித்து தகவலறிந்த ஆசிரியைகள் அங்கு சென்ற போது, மாணவிகள் வகுப்பறை கதவை மூடிவிட்டு சண்டையிட்டுக் கொண்டதாக தெரிகிறது. இதையடுத்து, விஷயம் கேள்விப்பட்ட மாணவிகளின் பெற்றோர் அங்கு குவிந்தனர். பின்னர் கதவுகள் உடைக்கப்பட்டு உள்ளே சென்று பார்த்தால் மாணவிகள் காயங்களுடன் ஒருவரையொருவர் அடித்துக் கொண்டிருந்தனர். பின்னர் பெற்றோர்கள் அந்த மாணவிகளை விலக்கி விட்டனர்.

4 நாள் விடுமுறை
அப்போது மாணவிகளின் பெற்றோருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு மோதல் ஏற்படும் சூழல் உருவானது. இதனைத் தொடர்ந்து, ஆசிரியர்கள் தலையிட்டு பிரச்சினையை முடிவுக்கு கொண்டு வந்தனர். மாணவிகளின் மோதலால் பள்ளியே கலவரபூமியாக காட்சியளித்தது. இதையடுத்து, மாணவிகளை சஜக நிலைக்கு கொண்டு செல்வதற்காக பள்ளிக்கு 4 நாள் விடுமுறை அறிவிக்கப்பட்டது. மேலும், சண்டையிட்டுக் கொண்ட மாணவிகளிடம் விசாரணை நடத்தப்பட்டும் வருவதாக கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்நிலையில், மாணவிகள் மோதிக் கொண்ட காட்சி சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
-
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
சேலத்தில் விபச்சாரத்தில் தள்ளப்பட்ட 50 பெண்கள்? பல ஆபாச வீடியோக்கள்! தவெக மணிகண்டன் சிக்கியது எப்படி -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
திமுக மகளிரணி கூட்டத்திற்கு வந்து! வரவேற்க யாரும் இல்லாததால் திரும்பிச் சென்ற துரைமுருகன் -
ரூ.115 லட்சம் கோடி சொத்து இருந்து என்ன பயன்.. எலான் மஸ்க் வீட்டை பார்த்தீங்களா.. ஒரு 3BHK வீட்டை விட சிறியது? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது -
விவாகரத்து பேப்பர்களை கிழித்தெறிந்து கணவரை கட்டி பிடித்த மனைவி! கோர்ட் வாசலில் நடந்த உருக்கமான செயல் -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை












Click it and Unblock the Notifications