ஆழ்கடலில் ஆயிரம் கிலோ திருக்கை மீன்கள்.. அற்புதமாக காட்சி... எங்கு தெரியுமா? வைரல் வீடியோ
புதுச்சேரி: புதுச்சேரி கடற்கரையில் ஏழு கிலோ மீட்டருக்கு அப்பால் ஆயிரம் கிலோ திருக்கை மீன்கள் உலாவரும் காட்சியை அரவிந்த் என்பவர் படமாக்கி வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
நீலம்.. வானம் மட்டுமல்ல.. கடலும் தான்...கடலின் நிறத்தை பிரதிபலிக்கும் வானமே அவ்வளவு அழகு என்றால், மொத்த நீலத்தையும் உள்வாங்கி இருக்கும் நீளமான நீலக்கடல் எத்தனை அற்புதமானது.

அதில் வாழும் உயிரினங்கள் அதைவிட அதிசயமானது. பொதுவாக ஆழ்கடலில் வாழும் உயிரினங்களை பார்ப்பது மிக அழகாக இருக்கம். அதிலும் ஒரே நேரத்தில் ஏராளமான உயிரினங்களை பார்ப்பது என்பது அற்புதமாக இருக்கும். அந்த காட்சியை ஆழ்கடல் பயிற்சி வீரர் அரவிந்த் படமாக்கி வெளியிட்டுள்ளார்.
புதுச்சேரியில் அட்வென்சர் என்கிற ஆழ்கடல் பயிற்சி மையம் நடத்தி வருபவர் அரவிந்த். நிவர் புயல் காரணமாக கடந்த 15 நாட்களாக ஆழ்கடல் பயிற்சி செய்யாமல் நேற்று தனது வீரர்களுடன் புதுச்சேரி கடற்கரையில் இருந்து 7 கிலோமீட்டர் தூரத்தில் ஆழ்கடல் பயிற்சியில் ஈடுபட்டார்.

அப்போது புதுச்சேரி கடற்கரையில் இருந்து 7 கிலோமீட்டர் தூரத்தில் பத்துக்கும் மேற்பட்ட திருக்கை மீன்கள் உலா வருவதை கண்டறிந்த அவர் அதனை படமாக்கினர். புயல் காரணமாக மிகப்பெரிய 1000 கிலோ வரையிலான திருக்கை மீன்கள் முதன்முதலில் புதுச்சேரி கடற்கரைக்கு வருகை தந்ததாக கூறிய ஆழ்கடல் பயிற்சி வீரர் அதனை தனது கேமராவில் பதிவு செய்து அனுப்பி உள்ளார். இந்த வீடியோ பார்ப்பதற்கு அற்புதமாக உள்ளது.












Click it and Unblock the Notifications