சந்திர பிரியங்கா அப்படி என்ன பேசினார்? மொத்த புதுச்சேரி திமுக எம்எல்ஏக்களும் கொந்தளிக்க காரணம் என்ன?
புதுச்சேரி: புதிய கல்விக்கொள்கை தொடர்பான புதுச்சேரி சட்டசபையில் கட்சிகள் நேற்று சரமாரியாக மோதிக் கொண்டன. என்.ஆர்.காங்கிரஸ் எம்.எல்.ஏ. சந்திர பிரியங்கா இருக்கை மீது ஏறி நின்று ஆவேசமாக பேசியிருந்தார். முன்னதாக என்.ஆர்.காங்கிரஸ் எம்.எல்.ஏ. சந்திர பிரியங்கா பேசிய ஒரு விஷயம், தி.மு.க.-காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களையும் கொந்தளிக்க வைத்துள்ளது. இத்தனைக்கும் சந்திர பிரியங்கா கிட்டத்தட்ட திமுகவை போல் கேள்வி எழுப்பிக் கொண்டிருந்தார். அப்போது அவர் சொன்ன விஷயம் தான் கோபத்திற்கு காரணமாகியது.
நேற்று தமிழ்நாட்டில் மட்டுமல்ல, புதுச்சேரியிலும் சட்டசபை கூடியது. புதுச்சேரியில் நேற்று புதிய கல்வி கொள்கை குறித்து கடுமையான விவாதங்கள் நடந்தது. அப்போது என்.ஆர்.காங்கிரஸ் எம்.எல்.ஏ. சந்திர பிரியங்கா ஆவேசமாக பேசினார். அவரது பேச்சால் மொத்த புதுச்சேரி திமுக எம்எல்ஏக்களும் கொந்தளித்து போனார்கள்.. என்ன நடந்தது என்று பார்ப்போம்.

புதுச்சேரி சட்டசபையில் நேற்று கேள்வி-பதில் நேரத்தை எம்.எல்.ஏ.க்கள் நடத்தினார்கள். அப்போது என்.ஆர்.காங்கிரஸ் எம்.எல்.ஏ. சந்திர பிரியங்கா பேசும் போது, புதிய கல்விக் கொள்கை அமல்படுத்தப்படுவதால் இந்த கல்வியாண்டு முதல் ஆல்பாஸ் முறை ரத்து என அறிவிக்கப்பட்டுள்ளது. தொழில் சார்ந்த படிப்புகளை, இதர கலைகளை கற்றுத்தர பயிற்றுனர்கள், பயிற்சி கூடங்கள் உள்ளிட்ட கட்டமைப்புகள் அனைத்துப் பள்ளிகளிலும் உருவாக்கப்பட்டிருக்கிறதா? என்று கேள்வி எழுப்பினார்.
அப்போது புதுச்சேரி மாநில கல்வி அமைச்சர் நமச்சிவாயம் பதில் அளிக்கையில், இந்த கல்வியாண்டில் 'ஆல்பாஸ்' நடைமுறையில் எந்தவித மாற்றமும் கிடையாது. இதுவரை 52 அரசுப்பள்ளிகளில் தொழில் சார்ந்த பயிற்றுனர்கள், பயிற்சி கூடங்கள் உள்ளிட்ட கட்டமைப்புகள் உருவாக்கப்பட்டிருக்கிறது. மேலும் அடுத்த கல்வியாண்டில் 14 பள்ளிகளில் தொழில் சார்ந்த படிப்புகள் உருவாக்கப்பட இருக்கிறது. வரும் 2028-க்குள் அனைத்துப் பள்ளிகளிலும் தொழில் சார்ந்த படிப்புகள் உருவாக்கப்படும் என்று பதில் அளித்தார்.
இந்த பதிலை தொடர்ந்து என்.ஆர்.காங்கிரஸ் எம்.எல்.ஏ. சந்திர பிரியங்கா பேசும் போது, "மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய கல்விக்கொள்கையில் எனக்கு எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. ஆனால் 3, 5, 8-ம் வகுப்புகளில் பொதுத்தேர்வு என்கிறார்கள். 5-ம் வகுப்பில் தொழில் சார்ந்த பயிற்சிக்கு செல்லும் மாணவன் அதில் கிடைக்கும் வருமானத்தை பார்த்து அடுத்ததாக படிக்க வருவது சந்தேகமே? என்றார்.
அப்போது குறுக்கிட்ட திமுக எம்எல்ஏ நாஜிம், இதைத்தான் நாங்களும் சொல்கிறோம். ஆனால் நீங்கள் முரண்பட்டு பேசுகிறீர்கள் என்றார். உடனே பதிலடி கொடுத்த என்.ஆர்.காங்கிரஸ் எம்.எல்.ஏ. சந்திர பிரியங்கா.. நான் பேசும் போது யாரும் குறுக்கிட்டு பேசவேண்டாம். புதிய கல்விக்கொள்கையை நான் எதிர்க்கவில்லை. உங்கள் பேரப்பிள்ளைகள் சி.பி.எஸ்.இ. பள்ளிகளில்தான் படிக்கிறார்கள் என்று ஆவேசமாக கூறினார்.
அப்போது சந்திர பிரியங்காவின் பேச்சுக்கு மொத்த தி.முக. எம்.எல்.ஏ.க்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். உடனே சந்திர பிரியங்காவிற்கு ஆதரவாக என்.ஆர்.காங்கிரஸ், பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் ஒட்டுமொத்தமாக எழுந்து பேசத்தொடங்கினார்கள். ஒரே நேரத்தில் எல்லா எம்எல்ஏக்களும் பேசிக்கொண்டே இருந்த காரணத்தால் சட்டசபையில் கூச்சல் குழப்பம் சிறிது நேரத்திற்கு நிலவியது.
அப்போது சுயேட்சை எம்எல்ஏ நேரு, வெளிநடப்பு செய்யப்போவதாக கூறியவர்கள் (திமுக, காங்கிரஸ் எம்எல்ஏக்கள்) தொடர்ந்து பேசுகிறார்கள். அவர்களை வெளியே போக சொல்லுங்கள் என்றார். அதன் பின்னர் ஆளுங்கட்சியான என்.ஆர்.காங்.-பா.ஜனதா மற்றும் எதிர்க்கட்சியான தி.மு.க., காங்கிரஸ் இடையே கடுமையான வார்த்தை மோதல் ஏற்பட தொடங்கியது. ஒருகட்டத்தில் ஆவேசமாக மாறிய என்.ஆர்.காங்கிரஸ் பெண் எம்.எல்.ஏ.வான சந்திர பிரியங்கா தனது இருக்கையின் மீது ஏறி நின்று பேசியதால் பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து தி.மு.க. காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் வெளிநடப்பு செய்தனர்.
அதன்பின்னர் சந்திர பிரியங்கா பேசும் போது, 5-ம் வகுப்பில் பொதுத்தேர்வு நடத்தக்கூடாது என்று அரசுக்கு கோரிக்கை வைத்தார். அதற்கு கல்வி அமைச்சர் நமச்சிவாயம் இதுதொடர்பாக அதிகாரிகளுடன் கலந்து பேசி நடவடிக்கை எடுக்கிறேன் என்று உறுதி அளித்தார். இப்படியாக நேற்று விவாதங்கள் நடந்தன.
-
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
சங்கித் தனத்தை காட்டிய ரஜினி.. இதுக்கா முட்டுக் கொடுத்தோம்? பொளக்கும் நெட்டிசன்கள்! வெளுத்த இயக்குநர்! -
திமுக விட்டுக் கொடுத்துள்ளதால்.. நாங்களும் இறங்கினோம்.. மனம் திறந்த திருமாவளவன் -
தலித்துகள் என்றால் ஏளனமா? திமுக - விசிக கூட்டணி அவசியமா? தமிழன் பிரசன்னாவை நோக்கி இளைஞர்கள் கேள்வி! -
2026ல் மீண்டும் ஸ்டாலின் முதல்வர்.. 180+ இடங்களை வெல்லும் திமுக கூட்டணி.. ANS சர்வே முடிவுகள்! -
பெரம்பூரில் தனி வீடு வாங்கும் விஜய்.. 'அந்நியன்' இமேஜை உடைக்க மாஸ்டர் பிளான்.. களமிறங்கிய ப்ரோக்கர் -
15 ஆண்டுகளாக 1 சீட் கூட ஜெயிக்காத தேமுதிகவுக்கு 10 தொகுதிகளா? திமுக கூட்டணிக்குள் கொதிப்பு! -
புதுச்சேரி திமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு.. ஒரு தொகுதி விசிகவுக்கு ஒதுக்கீடு! யார் யாருக்கு சீட்? -
Election Exclusive: ரேசில் முந்திய எடப்பாடி.. சடன் ப்ரேக் போட்ட அறிவாலயம்! அதிருப்தி பங்காளிகளை சமாளிக்க புது வியூகம்! -
திமுக எங்களுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கியதில் திருப்தி இல்லை.. இருந்தாலும்! சிபிஎம் சண்முகம் பேட்டி! -
VCK: இரட்டை இலக்கம் + 2028ல் ஒரு மாநிலங்களவை! விசிக தீர்மானம்! என்ன செய்ய போகிறார் திருமாவளவன்? -
6 சீட் கேட்டு அடம் பிடிக்கும் மார்க்சிஸ்ட்.. 5ல் உறுதியாக ஸ்டாலின்! இன்று திமுகவுடன் மீண்டும் பேச்சு












Click it and Unblock the Notifications