ராகுலின் நம்பிக்கைக்குரியவர்.. அப்ப முதல்வர் இப்போ எம்பி.. யார் இந்த புதுச்சேரி வைத்திலிங்கம்
புதுச்சேரி: நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் புதுச்சேரியில் இரண்டாவது முறையாக வைத்திலிங்கம் வெற்றி பெற்று இருக்கிறார். இந்த நிலையில் வைத்திலிங்கம் யார் என்பதை பற்றி விரிவாக பார்க்கலாம்.
புதுச்சேரி தமிழகத்தின் அருகில் உள்ள யூனியன் பிரதேசம் தான். இங்கே ஒரே ஒரு லோக்சபா தொகுதி மட்டுமே உள்ளது. அதுபோல தமிழ்நாட்டின் 39 தொகுதி மற்றும் புதுச்சேரியில் உள்ள ஒரு தொகுதி என 40 தொகுதிக்கும் சேர்த்து தான் நாடாளுமன்ற தேர்தல் நடத்தப்பட்டு வருகிறது. அதில் இரண்டாவது முறையாக புதுச்சேரியில் வைத்திலிங்கம் வெற்றி பெற்று இருக்கிறார்.

புதுச்சேரி தொகுதியில் திமுக கூட்டணியின் காங்கிரஸ் சார்பில் கடந்த 2019 ஆம் ஆண்டில் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்ட வைத்திலிங்கம் 444 981 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றிருந்தார். அதைத் தொடர்ந்து 2024 நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலிலும் போட்டியிட்ட நிலையில் 426005 வாக்குகள் பெற்று வெற்றி பெற்று இருக்கிறார்.
ராகுலின் நண்பர்.. "அந்த" விமர்சனத்தை தாண்டி விருதுநகரில் 3 முறை வெற்றி.. யார் இந்த மாணிக்கம் தாகூர்?
வைத்திலிங்கத்தின் குடும்பம் புதுச்சேரியில் பிரெஞ்சு ஆட்சிக்கு எதிராக சுதந்திர போராட்டத்தில் பெரிய அளவில் பங்களிப்பு செலுத்தி இருக்கிறார்கள். வைத்திலிங்கத்தின் தந்தை வழி தாத்தா மறைந்த வைத்திலிங்கம் செட்டியார் புதுச்சேரியில் பிரெஞ்சு ஆட்சியின் போது நெட்டப்பாக்கம் மேயராக இருந்திருக்கிறார். அதுபோல வைத்திலிங்கத்தின் தந்தை வெங்கடேசசுப ரெட்டியார் பாண்டிச்சேரியில் முதல்வராகவும் இருந்திருக்கிறார்.
வைத்திலிங்கம் 1980 இல் தான் தன்னுடைய அரசியல் வாழ்க்கையை தொடங்கி இருக்கிறார். அந்த வருடம் அவர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டபோது தோல்வி அடைந்திருக்கிறார். அதுவும் சுமார் 90 வாக்குகளின் வித்தியாசத்தில் தான் தோல்வி அடைந்தாராம். அதைத்தொடர்ந்து 1985 இல் வைத்திலிங்கம் எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டு பொதுப்பணி மற்றும் மின்துறை அமைச்சராக பொறுப்பேற்று இருக்கிறார்.
இவர் பணியில் இருக்கும் போது பாண்டிச்சேரியில் தொழில்துறையில் கடுமையான வளர்ச்சியை கண்டிருக்கிறது. அதுபோல தன்னுடைய 40 வயது பாண்டிச்சேரியில் 11 வது முதல்வராக 1991 முதல் 1996 வரை பதவி ஏற்று இருக்கிறார். புதுச்சேரியில் 16வது முதல்வராக 2008 முதல் 2011 வரையும் பணியாற்றி இருக்கிறார். அது மட்டும் அல்லாமல் புதுச்சேரியில் உள்ள இரண்டாவது இளம் முதல்வராக வைத்திலிங்கம் தான் இருந்திருக்கிறார்.
கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்காக எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்திருக்கிறார். ஆனாலும் அவர் நினைப்பது போலவே 2019 ஆம் ஆண்டில் நாடாளுமன்ற தேர்தலில் அதிக வாக்குகள் பெற்று வெற்றி பெற்று இருக்கிறார். அதை தொடர்ந்து 2024 ஆம் ஆண்டில் அவர் மீண்டும் போட்டியிட்டபோது அவர் இரண்டாவது முறையாக லோக்சபா தேர்தலில் வெற்றி பெற்று இருக்கிறார்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications