ரவுடியுடன் சகவாசம்.. கணவருக்கு விஷம் கொடுத்து கொன்று.. பிணத்தை சாக்கடையில் வீசிய மனைவி!
Recommended Video
புதுச்சேரி: புதுச்சேரியில் கணவரைக் கொன்று உடலை கால்வாயில் வீசிச் சென்ற மனைவியை போலீஸார் கைது செய்துள்ளனர்.
புதுச்சேரியில் நேற்று முன்தினம் நகரின் மையப் பகுதியில் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள 100 அடி சாலை வட்டாட்சியர் அலுவலகம் மற்றும் போக்குவரத்து துறை இயக்குநர் அலுவலகம் அருகே உள்ள வாய்க்காலில் மூட்டையில் கட்டிய நிலையில் இளைஞரின் சடலம் கிடந்தது.

அந்த உடலை கைப்பற்றிய முதலியார்பேட்டை போலீசார் கதிர்காமம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனையில், அந்த இளைஞர் மூச்சடைத்தும், தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டு இறந்தது தெரியவந்தது.

இதனையடுத்து போலீசாரின் விசாரணையில் கொலைசெய்யப்பட்ட நபர் நெல்லித்தோப்பு பகுதியை சேர்ந்த கமல் என்பது தெரியவந்தது. மேலும் போலீசார் அவரது மனைவி ஸ்டெல்லா மேல் சந்தேகப்பட்டு, அவரிடம் தீவிர விசாரணை நடத்தியதில், குடும்ப தகராறு காரணமாக தனது சகோதரி ரெஜ்ஜினா, பிரபல ரவுடி தமிழ்மணி அவனது கூட்டளி இரண்டு பேருடன் சேர்ந்து தனது கணவனை கொலை செய்து பிணத்தை மூட்டையில் கட்டி 100 அடி சாலையில் வீசியதாக ஒப்புக்கொண்டார்.

இதனையடுத்து ஸ்டெல்லாவை கைது செய்த முதலியார்பேட்டை போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புதுச்சேரி காலாப்பட்டு மத்திய சிறையில் அடைத்தார்கள்.

இந்த கொலை வழக்கில் தொடர்புடைய ஸ்டெல்லாவின் சகோதரி ரெஜ்ஜினா, ரவுடி தமிழ்மணி மற்றும் அவனது கூட்டாளி இருவர் உள்ளிட்ட நான்கு பேரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
-
தனிப்படை போலீசாருக்கு மீன் வறுவல் போட்டு கொடுத்த கொலையாளி! கடலூரில் அடுத்த நொடி நடந்த ட்விஸ்ட் -
முதல்வர் விஜய் வீடு அருகே பரபரப்பு: பனையூரில் ரத்தக் காயங்களுடன் ஆண் சடலம்.. போலீசார் தீவிர விசாரணை! -
சென்னையை அதிரவைத்த மூதாட்டி - சிறுவன் மீதான பாலியல் வன்கொடுமை.. தேசிய மகளிர் ஆணையம் அதிரடி -
சென்னை மெரினாவில் குதிரை சவாரி சென்ற 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! குதிரை ஓட்டி போக்சோவில் கைது -
கோயம்பேடு மதுபான பார் மோதலில்.. கார் ஏற்றி கொல்லப்பட்ட இலங்கை இளம்பெண்.. சென்னை வந்தது எப்படி? -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
சிறுமிகளுக்கு மது சப்ளை.. சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வந்த கோயம்பேடு பார்.. 'திடுக்' தகவல்! -
கையில் கத்தி.. பெட்ரோல் பங்க் ஊழியர்களை கொலைவெறியோடு தாக்கிய கும்பல்.. தூத்துக்குடியில் பயங்கரம்! -
அலையவிடும் ரங்கசாமி.. ஏக கடுப்பில் பாஜக எம்எல்ஏக்கள்.. இப்படி பண்ணிட்டாரே.. அமித் ஷா அப்செட்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்?












Click it and Unblock the Notifications