புதுச்சேரி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கட்சியை இணைச்சுடுங்க.. இல்லைனா.. ஆர்டர் போட்ட அமித் ஷா! நொந்து போன "சாமி"! மொத்தமா ஆட்சிக்கே வேட்டு?

Google Oneindia Tamil News

புதுச்சேரி: புதுச்சேரிக்கு கடந்த சில தினங்களுக்கு முன் உள்துறை அமைச்சர் அமித் ஷா வந்துவிட்டு சென்றார். இந்த பயணத்தின் போது அரசியல் தொடர்பான பல முக்கியமான விஷயங்கள் விவாதிக்கப்பட்டு இருக்கின்றன.

முக்கியமாக புதுச்சேரி அரசு குறித்து துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் சில புகார்களை அமித் ஷாவிடம் அளித்ததாக கூறப்பட்டது. இதை தொடர்ந்தே அமித் ஷா புதுவை வருகை புரிந்து இருந்தார்.

புதுச்சேரியில் என்ஆர் காங்கிரசுடன் பாஜக கூட்டணி வைத்து. அதே சமயம் அங்கு ரெங்கசாமி தலைமையிலான ஆட்சியை கவிழ்த்து பாஜாகவின் முழுமையான ஆட்சியை நிலைநிறுத்த பாஜக திடடமிடுவதாகவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன.

லாக் அப் மரணங்கள் எதிரொலி.. இரவு நேரத்தில் ஸ்டேஷனில் வைத்து விசாரணை கூடாது.. தமிழக டிஜிபி உத்தரவு லாக் அப் மரணங்கள் எதிரொலி.. இரவு நேரத்தில் ஸ்டேஷனில் வைத்து விசாரணை கூடாது.. தமிழக டிஜிபி உத்தரவு

மனம் விட்டு பேசணும்

மனம் விட்டு பேசணும்

கடந்த முறை அமித் ஷா வருகையின் போதே இதில் இறுதி முடிவு எடுக்கப்படும் என்றும் ஏற்கனவே பதிவு செய்திருக்கிறோம். அமித் ஷாவும் வந்துவிட்டு சென்று விட்டார். தனது ஆட்சிக்கு சிக்கல் இருப்பதை உணர்த்த, பாண்டிச்சேரிக்கு அமித் ஷா வந்தபோது அவரிடம் தனியாக மனம் விட்டு பேச விரும்பினார் ரெங்கசாமி. அமித் ஷாவிடம் மனம் விட்டு பேசுவதன் மூலம் தனது முதலமைச்சர் பதவியையும் தனது தலைமையிலான ஆட்சியையும் தக்க வைத்துக் கொள்ளலாம் என தீர்மானித்திருந்தாராம் ரெங்கசாமி.

சந்திப்பிற்கு நோ

சந்திப்பிற்கு நோ

ஆனால், அமித் ஷா தனிப்பட்ட சந்திப்புக்கு இசைவு தெரிவிக்கவே இல்லை. அதேசமயம், அமைச்சர் நமச்சிவாயத்துடன் 20 நிமிடங்கள் தனியாக விவாதித்திருக்கிறார் அமித் ஷா. அப்போது, ஜனாதிபதி தேர்தல் வரை அமைதி காக்கவும் என அறிவுறுத்தியிருக்கிறார் அமித் ஷா. மேலும், ரெங்கசாமியின் அரசியல் நடவடிக்கைகளையும் உன்னிப்பாக கவனித்து ரிப்போர்ட் அனுப்பி வைக்கவும் என்றும் நமச்சிவாயத்துக்கு உத்தரவிடப்பட்டிருக்கிறது.

உத்தரவு

உத்தரவு

இதெல்லாம் அறிந்து மன உளைச்சலுக்கு ஆளாகி வருகிறார் ரெங்கசாமி. என்ன செய்வது என்று தெரியாமல் ரெங்கசாமி உடைந்து போய் இருக்கிறாராம். இந்த நிலையில், அரசாங்கத்தில் 25 வாரியங்கள் இருக்கிறது. இதில் 20 வாரியங்களில் தனது ஆதரவாளர்களை நியமிக்கவும், 5 வாரியங்களை பாஜகவுக்கு கொடுக்கவும் ரெங்கசாமி ஏற்கனவே முடிவு செய்திருந்தார். இதனை பாஜக ஏற்காததால் வாரிய நியமனங்கள் நடக்காமல் இழுபறியில் இருந்தபடியே இருந்து வருகிறது.

ரெங்கசாமி திட்டம்

ரெங்கசாமி திட்டம்

இந்த நிலையில், தனது ஆட்சிக்கு ஆபத்து வராமல் இருக்க வாரிய பதவிகள் அனைத்தும் பாஜகவிடமே ஒப்படைத்து விடுகிறேன். பாஜக பார்த்து ஏதேனும் வாரியங்கள் ஒதுக்கினாலும் ஓகே ; இல்லையெனிலும் ஓகே என்று சபாநாயகர் செல்வத்திடமும், அமைச்சர் நமச்சிவாயத்திடமும் சொல்லியிருக்கிறாராம் ரெங்கசாமி. எப்படியாவது பாஜகவை சமாதானம் செய்ய இந்த ஏற்பாடாம்.

அமித் ஷா கண்டிஷன்

அமித் ஷா கண்டிஷன்

இந்த தகவலை அமித் ஷாவுக்கு தெரியப்படுத்தியிருக்கிறார் நமச்சிவாயம். ஆனால், டெல்லியில் இருந்து, என்.ஆர்.காங்கிரசை பாஜகவில் இணைக்கச் சொல்லுங்கள். அவரது முதலமைச்சர் பதவிக்கு ஆபத்து வராது என்று நமச்சிவாயத்திடம் சொல்லப்பட்டதாம். இதனை ரெங்கசாமியிடம் நமச்சிவாயம் தெரிவிக்க, ஏகத்துக்கும் அப்-செட்டானாராம் ரெங்கசாமி என்று புதுச்சேரி அரசியல் வட்டாரத்தில் ஒரே பேச்சாக இருக்கிறது. பார்ப்போம் ரெங்கசாமி இந்த பிரச்சனையை எப்படி சமாளிக்கிறார் என்று.

English summary
Will Minister Amit Shah trip to Puducherry cause trouble to N Rangasamy government? புதுச்சேரிக்கு கடந்த சில தினங்களுக்கு முன் உள்துறை அமைச்சர் அமித் ஷா வந்துவிட்டு சென்றார்.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X