நாட்டிலேயே புதுச்சேரிதான் டாப்.. ஆண்களை ஓவர்டேக் செய்து அசத்தும் பெண்கள்.. 9 தேர்தல்களிலும் இதேதான்
புதுச்சேரி: மகளிர் சக்தி என்றால் என்ன என்பது புதுச்சேரி மொத்த நாட்டுக்கும் பாடம் எடுத்து வருகிறது என்று சொல்லலாம்.
ஆமாம்.. புதுச்சேரி யூனியன் பிரதேசத்திற்கு பொதுத் தேர்தல் நடத்தப்பட ஆரம்பித்த காலகட்டத்தில் இருந்து இதுவரை ஆண்களை விட பெண்கள் தான் அதிக அளவுக்கு அங்கு ஓட்டு போட்டு வருகின்றனர்.
இதற்கு அடிப்படைக் காரணம் அங்கு ஆண்களை விட பெண் வாக்காளர்கள் எண்ணிக்கை எப்போதுமே அதிகமாக இருந்து வருகிறது.

9 சட்டபை தேர்தல்கள்
1980 ஆம் ஆண்டு முதல் இதுவரை 9 சட்டசபை தேர்தல்களை சந்தித்துள்ளது அந்த யூனியன் பிரதேசம். இப்போது, அதாவது ஏப்ரல் 6-ஆம் தேதி நடந்து முடிந்த சட்டசபை தேர்தல் உட்பட இந்த 9 தேர்தல்களிலும் ஆண் வாக்காளர்களை விட பெண் வாக்காளர்கள் தான் அதிகளவு வாக்குகளை பதிவு செய்துள்ளனர்.

ஒரே கட்ட தேர்தல்
நடப்பு சட்டசபை தேர்தலின்போது புதுச்சேரியில் 30 சட்டசபைத் தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. மொத்தம் உள்ள 30 தொகுதிகளில் 324 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இதில் 81.64% வாக்குகள் பதிவாகின. அதிகபட்சமாக ஏனாம் தொகுதியில் 91.27 சதவிகித வாக்குகள் பதிவாகின.

வாக்காளர்கள் எண்ணிக்கை
புதுச்சேரியில், ஆண் வாக்காளர்கள் 4, 72, 736 பெண் வாக்காளர்கள் 5,30,828 மற்றும் மூன்றாம் பாலினத்தவர் 117 ஆவர். இதனால் ஆண்களைவிட பெண்களே அதிகமாக ஓட்டுப் போட்டுள்ளனர். பெண்களின் விருப்பம்தான் முடிவுகளில் எதிரொலிக்கப்போகிறது.

பணிகள்
இதுகுறித்து சில அரசியல் பார்வையாளர்களிடம் கேட்டபோது, மொத்தமே 10 லட்சம் வாக்காளர்கள் தான் இருப்பதால் இது சாத்தியப்படுகிறது. எண்ணிக்கை அதிகரிக்கும் போது ஆண் வாக்காளர்கள் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு இருக்கிறது என்கிறார்கள். குறிப்பாக, நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் ஆண் வாக்காளர்களை விட பெண் வாக்காளர்கள் அதிகம். இதற்கு காரணம், ஆண் வாக்காளர்கள் பெரும்பாலானோர் பணி நிமித்தமாக வெளிநாடுகள் அல்லது வேறு நகரங்களுக்கு செல்ல வேண்டியதாக இருக்கிறது. அதுபோன்ற சூழ்நிலைதான் புதுச்சேரியில் நிலவுகிறது என்கிறார்கள்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications