என்னாது.. கொடுக்காபுளி சாப்பிட்டால் கொரோனா வராதா.. புதுச்சேரியிலும் ஒரு செல்லூர் ராஜு!

Subscribe to Oneindia Tamil

புதுச்சேரி: கொடுக்காபுளி சாப்பிட்டால் கொரோனா வைரஸ் வராது என முதலமைச்சர் நாராயணசாமிக்காக தொகுதியை விட்டுகொடுத்த ஜான்குமார் கூறியுள்ளார்.

புதுச்சேரி அரசின் சமூகநலத்துறை சார்பில் மகளிர் தினவிழா தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி, முதலமைச்சர் நாராயணசாமி, அமைச்சர் கந்தசாமி ஆகியோர் கலந்துகொண்டு பல்வேறு துறைகளில் சாதனைபுரிந்த மகளிருக்கு விருதுகளை வழங்கி பாராட்டினர்.

அதேபோன்று இரவு நேரத்தில் துப்புரவு பணியை மேற்கொள்ளும் பணியாளர்களுக்கு பிரத்தியோ ஒளி பிரதிபளிப்பு உடைகளை கிரண்பேடி வழங்கி சிறப்பு செய்தார்.

புதுவை உள்ளாட்சித் தேர்தல்

புதுவை உள்ளாட்சித் தேர்தல்

விழாவில் பேசிய துணைநிலை ஆளுநர் கிரண்பேடி, புதுச்சேரியில் கடந்த 10 ஆண்டுகளாக உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படாததால் மத்திய அரசின் நிதி கிடைக்கவில்லை. ஆகவே உச்சநீதிமன்ற உத்தரவுப்படி புதுச்சேரி அரசு கட்டாயமாக உள்ளாட்சித் தேர்தலை நடத்தும் என நம்புகிறேன். உள்ளாட்சி தேர்தலில் மகளிருக்கு கொடுத்த இடஒதுக்கீட்டை பயன்படித்திக்கொள்ள வேண்டுமென வலியுறுத்தினார்.

அமைச்சர் பதவி விலகல்

அமைச்சர் பதவி விலகல்

கிரண்பேடியை தொடர்ந்து விழாவில் பேசிய சமூக நலத்துறை அமைச்சர் கந்தசாமி, ஆளுநரும் நல்லவரே. முதல்வரும் திறமையானவர்தான். ஆனால் இடையில் சில அதிகாரிகளின் தூண்டுதலால்தான் இருவருக்கும் மோதல்போக்கு ஏற்பட்டு பணிகள் அனைத்தும் முடங்கிபோய் மாநிலத்தின் வளர்ச்சி தடைபட்டுள்ளது. குறிப்பாக தனது துறையில்தான் அனைத்து வளர்ச்சிப் பணிகளும் பாதிக்கப்பட்டுள்ளது. பல்வேறு தொழிற்சாலைகள், பஞ்சாலைகள் மற்றும் அரசு சார்பு நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளதால் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.

அதிகரிக்கும் குற்றம்

அதிகரிக்கும் குற்றம்

எட்டாயிரத்திற்கும் மேற்பட்ட இளைஞர்களுக்கு உரிய வேலை கிடைக்காததால் மது உள்ளிட்ட போதைப்பழக்கத்திற்கு அடிமையாகி பல்வேறு குற்றச்சம்பவங்களில் ஈடுபடும் சூழல் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், புதுச்சேரி மாநிலத்தில் மாதந்தோறும் போடவேண்டிய இலவச அரிசிக்கான பணத்தை உடனடியாக போட வேண்டும், அரசு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டும், கூட்டுறவுத் துறையில் ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க முடியாத நிலைக்கு தீர்வு காண வேண்டும் உள்ளிட்டவைகளை ஆளுநருக்கு கோரிக்கையாக வைக்கிறேன்.

மக்களுக்காக போராடுவேன்

மக்களுக்காக போராடுவேன்

அவ்வாறு தீர்வு காணாதபட்சத்தில் 3 மாதங்களில் தனது அமைச்சர் பதவியை நான் ராஜினாமா செய்து விட்டு மக்களோடு மக்களாக நின்று அரசுக்கு எதிராக போராடுவேன் என கந்தசாமி பேசியதால் விழாவில் பரபரப்பு ஏற்பட்டது. அமைச்சர் கந்தசாமியை தொடர்ந்து விழாவில் பேசிய காமராஜ் நகர் தொகுதி காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் ஜான்குமார் ஒரு பரபரப்பான தகவலை வெளியிட்டு நிகழ்ச்சியையே வியப்பில் ஆழ்த்தினார்.

கொடுக்கா புளி சாப்பிட்டால்

கொடுக்கா புளி சாப்பிட்டால்


உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவி வருகிறது. இதனை தடுக்க எளிய வழிமுறைகள் உள்ளது. கொடுக்காபுளி அல்லது காட்டு நெல்லிக்காய் அல்லது வெங்காயத்துடன் பூண்டு சேர்த்து சாப்பிட்டால் கொரோனா வராது. அதேபோல் பழைய சோறு, பழவகைகளும் தினமும் சாப்பிட்டால் கொரோனா மட்டுமில்லை, மரணம் கூட வராது. இதுதவிர நாள்தோறும் காலையில் அரைமணிநேரம், மாலையில் அரை மணிநேரம் வெயிலில் நிற்க வேண்டும் என கூறினார்.

கொரோனாவிற்கு இதுவரை தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்காத நிலையில், கொரோனாவுக்கு வைத்தியம் கூறியுள்ள சட்டமன்ற உறுப்பினர் ஜான்குமாரை புதுச்சேரியின் செல்லூர் ராஜீ என சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+