நீ கிறிஸ்தவ மதத்தை சேர்ந்தவன்! எச் ராஜா ப்ரஸ்மீட்டில் சீறிய காரைக்கால் பாஜக தலைவர்! சலசலப்பு
புதுச்சேரி: ‛‛நீ கிறிஸ்தவ மதத்தை சேர்ந்தவன். அதனால் தான் இப்படி கேள்வி கேட்கிறாய்'' என பாஜக மூத்த தலைவர் எச் ராஜாவின் ப்ரஸ்மீட்டில் காரைக்கால் மாவட்ட பாஜக தலைவர் துரை சேனாதிபதி சீறிய வீடியோ இணையதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
Recommended Video
காரைக்காலை அடுத்த காரைக்காலை அடுத்து அம்பாள் சத்திரம் கிராமம் உள்ளது. இங்குள்ள தனியார் மண்டபத்தில் பாஜக சார்பில் பிரதமர் மோடியின் சாதனைய மற்றும் கனவு திட்டங்கள் தொடர்பான கருத்தரங்கு நேற்று நடைபெற்றது.
இதில் பாஜகவின் மூத்த தலைவரும், முன்னாள் தேசிய செயலாளருமான எச் ராஜா பங்கேற்று பேசினார். கூட்டத்தில் முடிவில் எச் ராஜா பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

தமிழில் புத்தகம் வெளியாகும்
கொரோனாவால் உலக நாடுகள் தடுமாறிய நிலையில் 9 சதவீத பொருளாதார முன்னேற்றம் காணும் வகையில் பிரதமர் இந்தியாவை வழிநடத்தி வருகிறார். இதுதொடர்பான புத்தகம் உருவாக்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடியின் நிர்வாகம், சுற்றுச்சூழலை பாதுகாக்க அவர் எடுத்துள்ள நடவடிக்கைகள் தொடர்பான புத்தகம் விரைவில் தமிழில் வெளியாக உள்ளது.

உரிமைகள் பறித்தது இல்லை
இந்தியாவில் மாநிலங்களுக்கான அதிகாரம் உரிய முறையில் பிரதமர் மோடியால் வழங்கப்பட்டு வருகிறது. மாநிலங்களுக்கான அதிகாரத்தை மத்திய அரசு பறித்ததில்லை. மத்திய அரசை குறை கூட வேண்டும் என்பதற்காக துதிபாடக்கூடாது. தங்களுடைய தோல்விகளை மறைக்கவே மத்திய அரசு மீது குறைக்கூறி வருகிறார்கள். தமிழகம், புதுச்சேரியில் பா.ஜ.க. வளர்ச்சியை கண்ணால் பார்க்க முடிகிறது'' என்றார்.

சீறிய பாஜக தலைவர்
இதனை தொடர்ந்து பத்திரிகையாளர்கள் கேள்விகள் கேட்டனர். இந்த கேள்விக்கு காரைக்கால் மாவட்ட பாஜக தலைவர் துரை சேனாதிபதி பத்திரிகையாளர்களை அவமதிக்கும் வகையில் சீறினார். இதனால் சலசலப்பு ஏற்பட்டது. இதையடுத்து பத்திரிகையாளர் சந்திப்பு கூட்டம் பாதியில் முடித்து கொள்ளப்பட்டது.

கிறிஸ்தவ மதத்தை சேர்ந்தவன்
இதையடுத்து அங்கிருந்த புறப்பட்ட துரை சேனாதிபதி, ‛‛நீ கிறிஸ்தவ மதத்தை சேர்ந்தவன். அதனால் தான் இப்படி கேள்வி கேட்கிறாய்'' என தரக்குறைவாக விமர்சனம் செய்தார். இதற்கு பத்திரிகையாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில் தான் துரை சோனதிபதி பேசும் வீடியோ இணையதளங்களில் வேகமாக பரவி வருகிறது. இதற்கு பத்திரிகையாளர் உள்பட ஏராளமானவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
-
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு!












Click it and Unblock the Notifications