ஜல்லிக்கட்டு போட்டியில் மின்சாரம் பாய்ந்து 14 பேருக்கு நேர்ந்த கதி - புதுக்கோட்டை அருகே பரபரப்பு!
புதுக்கோட்டை : புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி பகுதியில் ஜல்லிக்கட்டு போட்டியின் போது எதிர்பாராவிதமாக மின் கசிவு ஏற்பட்டு 14 பேர் காயமடைந்துள்ளனர். மின்சார கசிவால் பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள கல்லாலங்குடி எனும் ஊரில் உள்ள அருள்மிகு முத்துமாரியம்மன் கோவிலில் சித்திரை திருவிழா நடைபெற்று வருகிறது. இதனை முன்னிட்டு அங்கு இன்று ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது.

ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்று வந்த நேரத்தில் எதிர்பாராத விதமாக மின்கசிவு விபத்து ஏற்பட்டுள்ளது. இதில், ஜல்லிக்கட்டு போட்டியைக் காண வந்தவர்களில் 14 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது அவர்கள் சிகிச்சைக்காக ஆலங்குடி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஜல்லிக்கட்டு நடைபெற்றபோது வாடியில் இருந்து வெளியேறி வந்த ஒரு காளை கலெக்ஷன் பாயிண்ட் அருகே மின் கம்பத்தில் இருந்து இழுத்துக் கட்டப்பட்டிருந்த கம்பியில் மோதியதில் மேலே சென்று கொண்டிருந்த உயர் மின்னழுத்தக் கம்பி ஒன்றோடு ஒன்று உரசி மின் கசிவு ஏற்பட்டது.

அப்போது பேரிகார்டில் கை வைத்தபடி நின்று ஜல்லிக்கட்டை ரசித்துக் கொண்டிருந்த 14 பேர் மின் கசிவின் காரணமாக காயமடைந்தனர். அவர்களுக்கு உடனடியாக அங்கிருந்த ஆம்புலன்சில் முதலுதவி செய்து ஆலங்குடி மருத்துவமனையில் அனுமதித்தனர்.
ஜல்லிக்கட்டு போட்டியைப் பார்க்க வந்தவர்கள் மின்சார கசிவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு!












Click it and Unblock the Notifications