புதுக்கோட்டையில் ஒரு காரின் டயர் வெடித்ததால் பயங்கரம்.. 6 கார்கள் அடுத்தடுத்து மோதி 5 பேர் சாவு
Recommended Video
புதுக்கோட்டை: திருச்சி புதுக்கோட்டை தேசிய நெடுஞ்சாலையில் அதிவேகமாக வந்த ஒரு காரின் டயர் வெடித்ததால் அடுத்தடுத்து 6 கார்கள் மோதி 5 பேர் பலியாகினர்.
திருச்சியில் இருந்து புதுக்கோட்டை நோக்கி இனோவா கார் ஒன்று தேசிய நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்தது. நார்த்தாமலை அருகே வரும்போது, டயர் வெடித்ததாக கூறப்பபடுகிறது

இதில், டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து, சாலையில் அங்கும் இங்கும் ஓடி கவிழ்ந்தது. இந்நிலையில் புதுக்கோட்டையில் இருந்து திருச்சிக்கும் திருச்சியில் இருந்து புதுக்கோட்டைக்கும் அதிவேகத்தில் வந்த 6 கார்கள் அடுத்தடுத்து கண் இமைக்கும் நேரத்தில் ஒன்றுடன் ஒன்று மோதின.
இந்த கோர விபத்தில், 3 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாகினர். 20-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். விபத்தில் காயமடைந்தவர்களுக்கு புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் மேலும் இரண்டு பேர் உயிரிழந்ததால் விபத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்தது.

உயிரிழந்தவர்களின் விவரம் : புதுக்கோட்டை வேங்குப்பட்டியைச் சேர்ந்த நாகரெத்தினம் (65), சிவகங்கை ஆத்தங்குடியைச் சேர்ந்த நாகலெட்சுமி (58), புதுக்கோட்டை துடையூரைச் சேர்ந்த சிதம்பரம் (40), புதுக்கோட்டை உடையாண்டிப்பட்டி ரெங்கராஜ் (30), காரைக்குடியைச் சேர்ந்த செல்வம் (41) ஆகியோர் உயிரிழந்துள்ளனர்.












Click it and Unblock the Notifications