புதுக்கோட்டை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

என்ன விளையாடுறீங்களா? தச்சங்குறிச்சி ஜல்லிக்கட்டுக்கு தடை! கூட்டத்தில் காளையை அவிழ்த்து விட்ட ஓனர்!

Google Oneindia Tamil News

புதுக்கோட்டை : புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அருகே தச்சங்குறிச்சி கிராமத்தில் இன்று நடைபெற இருந்த ஜல்லிக்கட்டு போட்டிக்கு மாவட்ட ஆட்சியர் தடைவிதித்ததால் பதட்டமான சூழ்நிலை நிலவி வரும் நிலையில், காளைகளை ஒருவர் திடீரென அவிழ்த்து விட்டதால் பரபரப்பு நிலவியது. இதனால் அங்கு போலீசார் அதிக அளவில் குவிக்கப்பட்டுள்ளனர்.

தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை வந்து விட்டாலே புதுக்கோட்டை மாவட்டத்தில் அதிக அளவு ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்படும்.

இந்நிலையில் ஆண்டுதோறும் புத்தாண்டை முன்னிட்டு தமிழகத்திலேயே முதல் ஜல்லிக்கட்டு போட்டி புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அருகே உள்ள தச்சங்குறிச்சி கிராமத்தில் நடத்தப்படுவது வழக்கமாகும்.

வகுப்பறைக்கு ஒரு டி.வி; ஏ.சி; 85 லட்சத்தில் லேப்! - சிபிஎஸ்சி பள்ளிக்குச் சவால்விடும் ஸ்டாலின் அரசு! வகுப்பறைக்கு ஒரு டி.வி; ஏ.சி; 85 லட்சத்தில் லேப்! - சிபிஎஸ்சி பள்ளிக்குச் சவால்விடும் ஸ்டாலின் அரசு!

தச்சாங்குறிச்சி ஜல்லிக்கட்டு

தச்சாங்குறிச்சி ஜல்லிக்கட்டு

ஆனால் இந்தாண்டு புத்தாண்டு தினத்தன்று ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவதற்கு அனுமதி கேட்டும் தமிழக அரசும் மாவட்ட நிர்வாகமும் அனுமதி தர மறுத்துவிட்டது இதனால் தச்சங்குறிச்சி ஊர் பொதுமக்கள் பல கட்ட பேச்சுவார்த்தை நடத்தியதில் நேற்றுதான் ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவதற்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் அரசாணை வழங்கப்பட்டது. இதையடுத்து அரசாணை பெற்றுக் கொண்ட ஊர் பொதுமக்கள் தச்சங்குறிச்சியில் இன்று ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்து வந்தனர்.

திடீர் தடை

திடீர் தடை

இந்நிலையில் நேற்று இரவு மாவட்ட ஆட்சியர் மாவட்ட கண்காணிப்பாளர் ஆகியோர் தச்சங்குறிச்சி கிராமத்தில் இன்று நடக்க இருந்த ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும் இடத்தை பார்வையிட்ட போது அரசின் விதிமுறைகள் சரியாக பின்பற்றப்படவில்லை என்றும் ஜல்லிக்கட்டு போட்டி தெருவில் நடப்பதாகவும் உட்பட பல்வேறு காரணங்களை காட்டி நேற்று இரவு ஜல்லிக்கட்டு போட்டி இன்று நடத்தக் கூடாது என்று மாவட்ட ஆட்சியர் தடை விதித்தார்.

மக்கள் போராட்டம்

மக்கள் போராட்டம்

இதனால் அதிர்ச்சி அடைந்த தச்சங்குறிச்சி கிராம மக்கள் நேற்று இரவு முதல் பல கட்ட போராட்டங்களை நடத்தியதால் தச்சங்குறிச்சி கிராமத்தில் பதட்டமான சூழ்நிலை நிலவி வந்தது. இந்நிலையில் இன்று தச்சன்குறிச்சி கிராமத்தில் நடைபெற இருந்த ஜல்லிக்கட்டு போட்டிற்கு திருச்சி திண்டுக்கல் புதுக்கோட்டை, மதுரை போன்ற பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஜல்லிக்கட்டு காளைகளை ஏற்றி வரும் வாகனங்கள் தச்சங்குறிச்சி பகுதிக்கு வர முடியாத அளவிற்கு ஆங்காங்கே போலீசார் தடுப்புகள் அமைத்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்

போலீசார் குவிப்பு

போலீசார் குவிப்பு

மேலும் இன்று தச்சங்குறிச்சியில் நடைபெற இருந்த ஜல்லிக்கட்டு போட்டிக்கு மாவட்ட ஆட்சியர் தடை விதித்ததால் தச்சன் குறிச்சி கிராமத்தில் சட்ட ஒழுங்கு பிரச்சினை ஏற்படாதவாறு பெருமளவில் போலீசார் குவிக்கப்பட்டு வருகின்றனர் அதேபோல தச்சங்குறிச்சி கிராமத்தில் ஜல்லிக்கட்டு ஆர்வலர்களும் ஜல்லிக்கட்டு வீரர்களும் குவிந்து உள்ளதால் பதற்றமான சூழ்நிலை நிலவி வரும் நிலையில், காளைகளை ஒருவர் திடீரென அவிழ்த்து விட்டதால் பரபரப்பு நிலவியது.

காளை அவிழ்ப்பு

காளை அவிழ்ப்பு

ஜல்லிக்கட்டு போட்டியில் கலந்து கொள்ள தனது மாட்டை கொண்டு வந்திருந்த ஒருவர் திடீரென்று ஜல்லிக்கட்டு திடலுக்கு தனது காளையை எடுத்து வந்து ஆவேசத்துடன் அவிழ்த்து விட்டார். அப்போது ஜல்லிக்கட்டு காளை சீறி பாய்ந்து சென்ற நிலையில்,போலீசாரும் பொதுமக்களும் சிதறி ஓடினர். இதனால் அங்கு திடீர் பரபரப்பு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் உடனடியாக ஜல்லிக்கட்டு திடலுக்கு யாரும் செல்ல முடியாதபடி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும்கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட வரவழைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியிருக்கிறது.

English summary
A tense situation prevailed as the district collector banned the jallikattu competition that was to be held today in Tachangurichi village near Kandarvakottai of Pudukottai district. Due to this, the police have been concentrated there in large numbers.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X