மக்கள் திமுக பக்கம்.. அப்படியே அதிமுகவிலிருந்து டைவ் அடித்த உள்ளாட்சி வேட்பாளர்!
Recommended Video
புதுக்கோட்டை: இது செம காமெடியா இருக்கு பாருங்க. வழக்கமாக ஆளுங்கட்சிக்குத்தான் எதிர்க்கட்சியினர் அணி மாறுவார்கள். ஆனால் புதுக்கோட்டையில் ஆளுங்கட்சி வேட்பாளர் ஒருவர் திமுகவுக்கு மாறி அதிர வைத்துள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி ஒன்றியத்திற்குட்பட்ட 14வது வார்டு வேட்பாளராக அறிவிக்கப்பட்டவர் நாராயணன். இவர்தான் தற்போது திமுகவுக்கு அதிரடியாக தாவியுள்ளார்.
இந்த இடத்தில் நாம் ஒரு பிளாஷ்பேக்கை.. அல்ல அல்ல.. 2 பிளாஷ்பேக்கை பார்த்தே ஆக வேண்டும்.. வாங்க, அதுக்குள்ள போகலாம்.

அதிமுக டூ திமுக
முதல் பிளாஷ்பேக்.. சில மாதங்களுக்கு முன்பு அறந்தாங்கி அதிமுக எம்எல்ஏ ரத்தின சபாபதியின் தம்பியான பரணி கார்த்திகேயன் திமுகவுக்கு வந்து சேர்ந்தார். அவரை இழுத்து வந்ததில் முன்னாள் அமைச்சர் ரகுபதியின் பங்கு பெரியது. இது அதிமுக வட்டாரத்தை அதிர வைத்தது.

மணமேல்குடி நாராயணன்
2வது பிளாஷ்பேக்.. சில நாட்களுக்கு முன்பு நடந்தது. அதாவது மணமேல்குடி ஒன்றியத்தின் 14வது வார்டில் அதிமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டார் நாராயணன். திமுக வேட்பாளராக பரணி கார்த்திகேயனை கட்சி நிறுத்தியது.

திமுக அலை
இந்த நிலையில்தான் மக்கள் மத்தியில் திமுகவுக்கும் பரணி கார்த்திகேயனுக்கும் செல்வாக்கு இருப்பதைப் பார்த்து நாராயணன் போட்டியிடாமல் ஒதுங்க முடிவு செய்தார். தனது வேட்பு மனுவை வாபஸ் பெற 19ம் தேதி தேர்தல் அலுவலகத்திற்குச் சென்றார். ஆனால் அவரது மனுவைப் பறித்து கிழித்துப் போட்டனர் அதிமுகவினர். இதையடுத்து திமுக அதிமுகவினர் இடையே மோதலும் வெடித்தது.

திமுகவில் இணைந்தார்
இதனால் வாபஸ் பெற முடியாமல் போய் விட்டது நாராயணனால். ஆனால் தற்போது அதிரடியாக திமுகவில் வந்து சேர்ந்து விட்டார் நாராயணன். இதை அதிமுகவினர் எதிர்பார்க்கவில்லை. ரகுபதிக்கு பொன்னாடை போர்த்தி கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டு விட்டார் நாராயணன். கூடவே பரணி கார்த்திகேயனும் உடன் இருந்தார்.

மக்கள் முடிவின்படி
திமுகவில் சேர்ந்தது குறித்து நாராயணன் கூறுகையில், மக்களுடன் கலந்து பேசினேன். திமுக பக்கம்தான் இருப்பதாக சொன்னார்கள். எனவே போட்டியிட்டு தோல்வி அடைய விரும்பவில்லை. தளபதி ஸ்டாலின் தலைமையை ஏற்று திமுகவில் சேர்ந்து விட்டேன் என்று கூறினார் நாராயணன்.

முதல் விக்கெட்
முன்னாள் அமைச்சரும் புதுக்கோட்டை தெற்கு மாவட்ட பொறுப்பாளருமான ரகுபதி கூறுகையில், விஜயபாஸ்கரின் முதல் விக்கெட்டைப் பறித்து விட்டோம். இனி அடுத்தடுத்து ஒவ்வொரு விக்கெட்டாக வீழ்த்துவோம் என்றார்.
-
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications