“யாரும் கட்சியை விட்டு போகக்கூடாது என அதிமுக முந்திக்கொண்டு விருப்பமனு வாங்குகிறது”- அமைச்சர் ரகுபதி
புதுக்கோட்டை: யாரும் கட்சியை விட்டு போகக்கூடாது என்பதால் அதிமுக முந்திக்கொண்டு விருப்ப மனு வாங்குகிறது, அவர்களுக்கு ஆள் இருக்கிறார்களா என பார்க்கிறார்கள் என அமைச்சர் ரகுபதி விமர்சனம் செய்துள்ளார். அதிமுக இன்று முதல் சட்டமன்றத் தேர்தலுக்கான விருப்ப மனுக்கள் பெறுவதை அமைச்சர் ரகுபதி விமர்சித்துள்ளார்.
புதுக்கோட்டையில் இன்று அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், "தலைவர் தலைவருக்கு அடுத்தபடியாக இளந்தலைவர். எங்களின் இயக்கத்தில் 2 கோடி தொண்டர்களை இன்றைக்கு சேர்த்திருக்கிறோம். அத்தனை பேரும் உதயநிதி ஸ்டாலின் இந்த இயக்கத்திற்கு வலுவூட்டக்கூடியவர் என்ற நம்பிக்கையுடன் இருக்கிறார்கள். அவரை தலைமையாக ஏற்றுக்கொள்வதில் எந்த தவறும் கிடையாது.

சேலத்தில் 15 லட்சம் இளைஞர்களை வைத்து இளைஞர் அணி மாநாட்டை நடத்தி இருக்கிறோம். இளைஞர்கள் திமுகவில் தான் இருக்கிறார்கள் என்பதை காட்டுவதற்காக சேலத்தில் நடத்தப்பட்ட மாநாடு இது என்பதை மறந்து விடாதீர்கள். திமுக ஆட்சியில் தான் தமிழகம் இன்றைக்கு மருத்துவத்துறையிலே தலைநிமிர்ந்து நிற்கிறது." எனத் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து பேசிய அமைச்சர் ரகுபதி, அதிமுக இன்று முதல் சட்டமன்றத் தேர்தலுக்கான விருப்ப மனுக்கள் பெறுவதை விமர்சித்துள்ளார். அவர்களுக்கு ஆள் இருக்கிறார்களா என பார்க்கிறார்கள். கட்சியை விட்டு யாரும் போய் விடக்கூடாது என்பதற்காக அதிமுக முன்கூட்டியே விருப்பமான வாங்குவதாக அமைச்சர் ரகுபதி விமர்சித்துள்ளார்.
2026ல் தமிழகத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. அதிமுக சார்பில் சட்டமன்றத் தேர்தல்களில் போட்டியிட விரும்புபவர்கள் இன்று முதல் விருப்ப மனுகொடுக்கலாம் என அறிவிக்கப்பட்டு இருந்தது. சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்கள் இருக்கும் நிலையில் அதிமுக முன்னதாகவே விருப்ப மனுக்கள் பெறுகிறது.












Click it and Unblock the Notifications