புதுக்கோட்டை மாவட்டத்திற்கு முதல்வர் இன்று பயணம்... அமைச்சர் விஜயபாஸ்கர் தடபுடல் வரவேற்பு..!
புதுக்கோட்டை: புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டவும் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து ஆய்வு நடத்தவும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று புதுக்கோட்டை செல்கிறார்.
சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி செல்லும் அவர் அங்கிருந்து கார் மூலம் புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை செல்கிறார். அங்கு ஐடிசி நிறுவன அடிக்கல் நாட்டு நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் அவர் அதைத் தொடர்ந்து கவிநாடு கண்மாயை பார்வையிடுகிறார்.

கவிநாடு கண்மாயை பொறுத்தவரை ஆயிரம் ஏக்கர் பரப்பளவு கொண்டது. காவிரி-வைகை-குண்டாறு இணைப்புத் திட்டத்தின் முக்கிய அங்கமாக கவிநாடு கண்மாய் திகழ்கிறது. புதுக்கோட்டை மாவட்டத்தின் மிகப்பெரிய குளமான அதனை பார்வையிடுவதற்கு முன்னர் விராலிமலையில் நிறுவப்பட்டுள்ள ஜல்லிக்கட்டு காளை சிலையை திறந்து வைக்கிறார்.
சீறி வரும் ஜல்லிக்கட்டு காளையை வீரர் ஒருவர் அடக்க முயல்வது போன்று அமைக்கப்பட்டுள்ள அந்த சிலையை அமைச்சர் விஜயபாஸ்கர் நிறுவியுள்ளார். தனது சொந்த ஊரான விராலிமலையில் நிறுவி அதனை திறந்து வைக்க முதலமைச்சரை அழைத்து வந்து சொந்த ஊரில் மாஸ் காட்டியிருக்கிறார்.
விராலிமலை நிகழ்ச்சிகளை முடித்துக்கொண்டு புதுக்கோட்டை வரும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அங்கு அரசு மருத்துவமனையில் நிறுவப்பட்டுள்ள 'கேத் லேப்' வசதியை திறந்து வைக்கிறார். அதன் பின்னர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு செல்லும் அவர் அங்கிருந்தவாறு புதிய வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.
அதைத் தொடர்ந்து கொரோனா தடுப்பு பணிகள் உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துகிறார். தனது நிகழ்ச்சிகளை மாலை 5 மணிக்குள் முடித்துக்கொண்டு திருச்சி திரும்பும் முதலமைச்சர் அங்கிருந்து விமானம் மூலம் சென்னை வருகிறார்.
இதனிடையே புதுக்கோட்டை மாவட்டத்திற்கு வருகை தரும் முதலமைச்சருக்கு அமைச்சர் விஜயபாஸ்கர் தனது மாஸை காட்டும் வகையில் பிரம்மாண்ட வரவேற்பு அளிக்க ஏற்பாடு செய்திருக்கிறார்.
-
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மீண்டும் வந்த அதே வரலாற்று சிக்னல்.. தங்கம் விலை மிகப்பெரிய அளவில் சரிகிறது.. இப்போ வாங்கலாமா? -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு -
இன்னும் சில மணி நேரம் தான்.. பூமியை நோக்கி வரும் 'சூரிய புயல்'! மெகா அலர்ட் கொடுத்த நாசா












Click it and Unblock the Notifications