சீனாக்காரன் என்னென்னமோ கண்டுபிடிக்கிறான்.. நாம் இன்னும் சாமியை தேடுகிறோம்.. கார்த்தி சிதம்பரம்!

Subscribe to Oneindia Tamil

புதுக்கோட்டை: நடிகர் விஜய் சினிமாவில் கேமியோ ரோல் செய்வதை போல் அரசியலில் ஈடுபட்டிருப்பதாக காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம் விமர்சித்துள்ளார். சீனா கண்டுபிடித்துள்ள AI தொழில்நுட்பம் உலகையே உலுக்கி வருவதாக கூறிய அவர், இந்தியாவில் இன்னும் சாமி இந்த மலையில் இருக்கிறதா, அந்த மலையில் இருக்கிறதா என்பதை தேடி சர்ச்சையை உருவாக்கி வருவதாக விமர்சித்துள்ளார்.

தமிழக அரசியல் களத்தில் திராவிடம் vs தமிழ் தேசியம் என்று விவாதம் நடைபெற்று வருகிறது. திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் தரப்பில் திராவிடம் குறித்து, நாம் தமிழர் கட்சியினர் தமிழ் தேசியம் குறித்தும் தீவிரமாக விவாதித்து வருகின்றனர். இந்த நிலையில் சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் தனது தொகுதியின் பல்வேறு இடங்களுக்கும் இன்று சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.

china karti chidambaram

அப்போது மக்களின் குறைகளை கேட்டறிந்த அவர், புதுக்கோட்டையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது கார்த்தி சிதம்பரம் பேசுகையில், வேங்கைவயல் விவகாரத்தில் சிபிசிஐடி தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில் சிக்கல் இருந்தால், நீதிமன்றத்தில் வாதாடி தான் சிபிஐ விசாரணைக்கு கோரிக்கை வைக்க முடியும். இந்த வழக்கில் இவ்வளவு நாட்களாக குற்றவாளிகளை கண்டுபிடிக்க முடியாமல் இருப்பது வியப்பு அளிக்கிறது.

இந்த விசாரணையில் நம்பிக்கை இல்லையென்றால், சிபிஐ விசாரணைக்கு நீதிமன்றம் மூலமாக தான் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார். தொடர்ந்து மதுரை திருப்பரங்குன்றம் விவகாரம் தொடர்பான கேள்விக்கு, இது தேவையற்ற சர்ச்சைகள். தனி மனித நம்பிக்கைகள், மத பழக்கங்கள் தான் சர்ச்சையாகிறது. சீனா AI உருவாக்கி உலகையே உலுக்கி வருகிறது.

ஆனால் நாம் இன்னும் மலை மீது இந்த சாமி இருக்கிறதா, இந்த சாமி இருக்கிறதா என்று தேடி கொண்டே இருக்கிறோம். 21ஆம் ஆண்டு நூற்றாண்டில் தேவையில்லாத விவாதங்கள் தான் நடக்கிறது. விஞ்ஞான ரீதியாக, தொழில்நுட்ப ரீதியிலான விவாதங்கள் நடக்காமல் இருப்பது வேதனை அளிக்கிறது என்று கூறினார்.

தொடர்ந்து பாஜக குறித்த கேள்விக்கு, தமிழ்நாட்டில் பாஜக தொடர்ந்து வீழ்ச்சியடைந்து கொண்டே இருக்கிறது. நாடாளுமன்றத் தேர்தலில் இருந்த குறைந்த செல்வாக்கை கூட பாஜக இழந்துவிட்டது. அந்த கட்சியை யாரும் விரும்பி கூட்டணியில் சேர்த்து கொள்வதில்லை. வலுக்கட்டாயமாக தான் கூட்டணி சேர முடியும். பாஜகவுடன் கூட்டணி வைத்தால், அந்த கட்சியின் வாக்கு வங்கியும் குறைந்துவிடும் என்று கூறினார்.

பின்னர் விஜய்-ன் பரந்தூர் பயணம் பற்றிய கேள்விக்கு, நடிகர் விஜய் பரந்தூர் வந்து விமான நிலையம் வேண்டாம் என்று கூறினார். ஆனால் வேறு எங்கு விமான நிலையம் அமைக்க வேண்டும் என்பதை சொல்லவில்லை. சினிமாவில் கேமியோ ரோல் செய்வதை போல் விஜய் அரசியலில் செயல்பட்டு கொண்டிருக்கிறார் என்று விமர்சித்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+