முதலமைச்சர் விஜய் இன்று புதுக்கோட்டை பயணம்.. பஸ் ஸ்டாண்ட் திறப்பு, ரோடு ஷோ, 14000 பேருக்கு உதவி

Subscribe to Oneindia Tamil

புதுக்கோட்டை: புதுக்கோட்டைக்கு முதல் முறையாக இன்று அரசு முறைப் பயணம் மேற்கொள்ள இருக்கிறார் முதலமைச்சர் விஜய். முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு விஜய் முதல்முறையாக இன்று இந்த பயணம் மேற்கொள்கிறார். இதையொட்டி மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறை சார்பில் பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

தமிழகத்தில் காலியாக உள்ள விராலிமலை, கரூர், அம்பாசமுத்திரம், பெருந்துறை, திருச்சி கிழக்கு ஆகிய 5 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் விரைவில் இடைத்தேர்தல் அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Vijay Pudukkottai Tour Tamil Nadu CM Vijay Pudukkottai News

புதுக்கோட்டை

இந்த தொகுதிகளை உள்ளடக்கிய மாவட்டங்களுக்கு முதலமைச்சர் விஜய் சுற்றுப்பயணம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளார். அந்த வகையில் புதுக்கோட்டை மாவட்டத்திற்கு இன்று அவர் பயணம் மேற்கொள்கிறார்... அம்மாவட்டத்தில் பயனாளிகளுக்கு ரூ. 100 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்....

இதற்காக இன்று சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் திருச்சிக்கு செல்கிறார். அங்கிருந்து புதுக்கோட்டைக்கு ஹெலிகாப்டர் மூலமாகவோ அல்லது சாலை மார்க்கமாகவோ செல்ல திட்டமிடப்பட்டுள்ளது.

புதுக்கோட்டை ஆயுதப்படை மைதானத்தில் அமைக்கப்பட்டுள்ள ஹெலிபேட் தளத்தில் அவர் இறங்குவதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

புதுக்கோட்டை நகரில் சுமார் 4 கி.மீ. தூரம் காரில் பயணம் மேற்கொள்ளும் விஜய், வழியில் பொதுமக்களை சந்திக்கிறார். இதைத்தொடர்ந்து அரசு சார்பில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். அப்போது பல்வேறு முடிவுற்ற திட்டப் பணிகளை திறந்து வைத்து, புதிய திட்டங்களையும் தொடங்கி வைக்கிறார்.

புதிய பஸ் நிலையம் திறப்பு

புதுக்கோட்டை நகரில் ரூ.23 கோடியே 25 லட்சம் செலவில் புதிய நவீன பேருந்து நிலையம் கட்டப்பட்டுள்ளது. இந்த பேருந்து நிலையத்தை முதலமைச்சர் விஜய் திறந்து வைத்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு அர்ப்பணிக்கிறார். இதையடுத்து புதுக்கோட்டை ஆயுதப்படை மைதானத்தில் நடைபெறும் அரசு விழாவில் பங்கேற்கிறார். அங்கு 14 ஆயிரம் பயனாளிகளுக்கு ரூ.100 கோடிக்கும் அதிகமான மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்.

பிறகு, ரூ.8 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள புதிய பல்நோக்கு உள்விளையாட்டு அரங்கத்தையும் முதலமைச்சர் விஜய் திறந்து வைக்கிறார். மேலும், பல்வேறு துறைகள் சார்பில் நிறைவு செய்யப்பட்டுள்ள திட்டப் பணிகளை தொடங்கி வைப்பதுடன், புதிய திட்டங்களுக்கும் அடிக்கல் நாட்டுகிறார்.

ரோடு ஷோ

அதேபோல புதுக்கோட்டை வருகையின்போது நகரின் முக்கிய வீதிகள் வழியாக முதலமைச்சர் விஜய் ரோடு ஷோ செல்லவும் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக தவெக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பிரமாண்ட வரவேற்புக்கு ஏற்பாடுகளை செய்து வருகிறார்கள்.. விராலிமலை சட்டமன்ற தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில், விஜய்யின் இந்த ரோடு ஷோ அரசியல் வட்டாரத்திலும் கவனம் பெற்றுள்ளது.

அரசு விழாவில் பங்கேற்று நலத்திட்ட உதவிகளை வழங்கிய பிறகு புதுக்கோட்டையில் இருந்து கார் மூலம் திருச்சிக்கு செல்கிறார். அங்கிருந்து விமானம் மூலம் மீண்டும் சென்னை திரும்புகிறார்.

முதலமைச்சர் விஜய்யின் வருகையையொட்டி புதுக்கோட்டையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சுமார் 4,000 போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இன்றைய பிளான் என்ன

சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி செல்லும் முதலமைச்சர் விஜய், அங்கிருந்து சாலை மார்க்கமாக புதுக்கோட்டை செல்கிறார். அவர் பயணிக்கும் சாலை விராலிமலை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்டது என்பதால், வழியில் மக்களை சந்தித்து கோரிக்கை மனுக்களை பெறவும் திட்டமிட்டுள்ளார்.

முதலில் புதுக்கோட்டை ஆயுதப்படை மைதானத்தில் அரசு விழா நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் கடைசி நேரத்தில் நிகழ்ச்சி நடைபெறும் இடம் மாற்றப்பட்டுள்ளது. தற்போது ஆட்சியர் அலுவலகத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

மொத்தம் 14 ஆயிரம் பயனாளிகளுக்கு ரூ.100 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட உள்ளன. இதில் சுமார் 2 ஆயிரம் பயனாளிகள் நேரடியாக நிகழ்ச்சியில் பங்கேற்று உதவிகளைப் பெற உள்ளனர். முதலமைச்சர் வருகையையொட்டி புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் டிரோன்கள் பறக்க தடை விதித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். மேலும், விஜய் பயணிக்கும் சாலை உள்ளிட்ட 13 இடங்களில் செயல்படும் மதுக்கடைகளை மூடவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

அரசு விழா நிகழ்ச்சிகள் முடிந்ததும் விருந்தினர் மாளிகையில் மதிய உணவு அருந்தும் முதலமைச்சர் விஜய், பிற்பகல் 2.45 மணிக்கு திருச்சிக்கு புறப்படுகிறார். அங்கிருந்து தனி விமானம் மூலம் சென்னை திரும்புகிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+