ரூட்டை மாற்றிய முரசு புயல்.. சென்னைக்கு மிக அருகே வருவதால் மழை கொட்டும்.. வெதர்மேன் எச்சரிக்கை!

Subscribe to Oneindia Tamil

சென்னை: வடகிழக்கு பருவமழை தொடங்கியது முதலே தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. இதற்கிடையே இப்போது வங்கக்கடலில் உருவாகியுள்ள முரசு புயல் மெல்ல ஆந்திர கடல் பகுதியை நோக்கி நகர்ந்து வருகிறது. இந்த புயலின் திசை மாறியுள்ளதாக தெரிவித்துள்ள வெதர்மேன், இதனால் திங்கள்கிழமை சென்னையில் மழை வெளுத்து வாங்கும் என கூறியிருக்கிறார்.

வங்க கடலில் உருவாகியுள்ள முரசு புயல் நெல்லூர் - காவலி கடலோர பகுதிக்கு அருகே கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த புயல் மெல்ல ஆந்திராவை நோக்கி நகர்ந்து வரும் நிலையில், இன்று திங்கள்கிழமை சென்னையில் மழையின் அளவு அதிகரிக்கும் என்று தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.

Cyclone Murasu change its path Tamil nadu weatherman Cyclone Murasu

கொட்டும் மழை

சென்னையின் பெரும்பாலான பகுதிகளில் 100 மி.மீட்டரை கடந்து மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், வடசென்னை முதல் திருவள்ளூர் மாவட்டத்தின் கும்மிடிப்பூண்டி வரையிலான சில இடங்களில் 150 மி.மீட்டர் வரை மழை பெய்யக்கூடும் என்றும் அவர் கணித்துள்ளார்.

மாறிய பாதை

இது தொடர்பாக வெதர்மேன் தனது ட்விட்டர் பக்கத்தில், "முரசு புயல் நெல்லூர் - காவலி பகுதிக்கு அருகே கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் பாதையில் புயல் நகர்வதால், நெல்லூரை நோக்கி செல்வதற்கு முன்பாக சென்னை கடற்கரைக்கு மிக அருகில் வர வேண்டியிருக்கும். இதன் காரணமாக நாளை சென்னையில் கனமழை பெய்வதற்கான வாய்ப்பு அதிகமாகியுள்ளது.

குறிப்பாக வடசென்னை முதல் கும்மிடிப்பூண்டி வரையிலான பகுதிகளில் தீவிரமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. கடலோர பகுதிகளிலும், கடலுக்கு அருகில் அமைந்துள்ள இடங்களிலும் அதிக மழைப்பொழிவு இருக்கும். தற்போது நாம் பார்த்துக்கொண்டிருப்பது புயலின் வெளிப்புற மழைப் பகுதிகளை மட்டுமே. ஏற்கெனவே இரண்டு ரவுண்ட் மழை கடந்து சென்றுள்ளன. இன்னும் பல ரவுண்டு மழை இடைவெளிவிட்டு நகர்ந்து வரும்.

தீவிரமான மழை இருக்கும்

திங்கள்கிழமை காலை முதல் மாலை வரைதான் மிக தீவிரமான மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. அந்த நேரத்தில் முரசு புயல் சென்னை கடற்கரைக்கு மிக அருகில் நகரும். புயலின் பாதையில் ஏற்பட்டுள்ள சமீபத்திய மாற்றத்தை கருத்தில் கொண்டு, மழையின் அளவு முன்பு கணித்ததை விட அதிகமாகவே இருக்கும் என நினைக்கிறோம். சென்னையின் பெரும்பாலான பகுதிகளில் 100 மிமீட்டரை கடந்து மழை பெய்ய நல்ல வாய்ப்பு உள்ளது.

வடசென்னை முதல் திருவள்ளூர் மாவட்டத்தின் கும்மிடிப்பூண்டி வரையிலான சில இடங்களில் 150 மிமீட்டர் வரைகூட மழை பெய்யக்கூடும். மகிழ்ச்சியாக இருங்கள்! எல்லாம் நல்லபடியாக நடக்கும். முரசு தட்டட்டும், மழை வெளுத்து வாங்கட்டும்" என்று பதிவிட்டுள்ளார்.

முரசு புயல்

முரசு புமயல் மற்றும் கனமழை எச்சரிக்கை காரணமாக ஏற்கனவே சென்னையில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும், திருவள்ளூரிலும் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மழையின் தீவிரம் அதிகரிக்கும் என்பதால் காலையில் மேலும் சில மாவட்டங்களுக்கு விடுமுறை அளிக்கப்படும் என தெரிகிறது. மழை காரணமாக மாவட்ட நிர்வாகங்கள் கவனமாக இருக்கும்படியும் எச்சரிக்கை பேரிடர் மேலாண்மை துறையில் இருந்து எச்சரிக்கை சென்றுள்ளது. தமிழ்நாட்டை போலவே ஆந்திரா மற்றும் ஒடிசா மாநிலங்களிலும் தேவையான முன்னெச்சரிக்கை பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+