Post Office Job: தமிழ்நாடு அஞ்சல் துறையில் வேலை.. மாதம் 63,000 சம்பளம்.. 10 ஆம் வகுப்பு தகுதி தான்! விட்றாதீங்க

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாடு அஞ்சல் துறையில் காலியாக உள்ள 24 ஸ்டாஃப் கார் டிரைவர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. 10 ஆம் வகுப்பு தேர்ச்சி மற்றும் இலகுரக, கனரக வாகனங்களை ஓட்டுவதற்கான ஓட்டுநர் உரிமம் வைத்திருப்பவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணபிக்கலாம். தேர்வு செய்யப்படும் நபர்கள் சென்னை, கோவை, மதுரை, திருச்சியில் பணியமர்த்தப்படுவார்கள். தேர்வு செய்யப்படுபவர்களுக்கு மாதம் ரூ.63,200 சம்பளம் வழங்கப்படும்.

தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் ஆஃப்லைன் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும். நவம்பர் 30 ஆம் தேதி தான் கடைசி நாள் ஆகும். எனவே அதற்குள் தபால் (ஸ்பீட் போஸ்ட்) மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

Post Office Job Central Government Central Government job job employment

காலியிடங்கள் விவரம் :

சென்னை (MMS) - 15 பணியிடங்கள், திருச்சி -1, மதுரை (MMS) -1, மதுரை (ஆர்.ஓ) - 1, சேலம் மேற்கு - 3, கோவை (MMS) - 3 என மொத்தம் 24 பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன.

கல்வித்தகுதி

அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையத்தில் 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அது மட்டுமின்றி இலகுரக வாகனம் (LMV) மற்றும் கனரக வாகனம் (HMV) ஓட்டுவதற்கான ஓட்டுநர் உரிமம் வைத்திருக்க வேண்டும். மேலும் இலகுரக மற்றும் கனரக வாகனங்களை ஓட்டுவதில் குறைந்தது 3 ஆண்டுகள் அனுபவம் பெற்றிருக்க வேண்டும். மேலும் வாகனத்தின் அடிப்படை எந்திர அமைப்பு, வாகனத்தில் ஏற்படும் சிறிய பழுதுகளை சரிசெய்யத் தெரிந்திருக்க வேண்டும்.

ஹோம் கார்டு அல்லது சிவில் தன்னார்வலராக 3 ஆண்டுகள் பணியாற்றிய அனுபவம் இருந்தால் முன்னுரிமை அளிக்கப்படும்.

வயது வரம்பு

இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க உள்ள விண்ணப்பதாரர்கள் நவம்பர் 30, 2026 அன்று தேதிப்படி, 18 முதல் 27 வயதுக்குள் இருக்க வேண்டும். அரசு விதிகளின் படி வயது வரம்பில் தளர்வுகள் அளிக்கப்படும். எஸ்சி எஸ்டி பிரிவினர் என்றால் 5 ஆண்டுகளும், ஓபிசி பிரிவினர் என்றால் 3 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வுகள் அளிக்கப்படும்.

சம்பளம் எவ்வளவு?

ஸ்டாஃப் கார் டிரைவர் பணிக்கு மாதம் ரூ.19,900 முதல் ரூ.63,200 வரை சம்பளம் வழங்கப்படும். இது 7ஆவது ஊதியக்குழுவின் Level-2 ஊதிய விகிதமாகும். இதனுடன் அரசு விதிமுறைகளின்படி கூடுதல் படிகளும் வழங்கப்படும்.

தேர்வு முறை

இரண்டு கட்ட தேர்வுகளுக்கு பிறகு தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். முதல் கட்டமாக எழுத்துத் தேர்வும், (இதில், பொது அறிவு, எளிய கணிதம், பொது நுண்ணறிவு மற்றும் பகுத்தறியும் திறன் உள்ளிட்ட கேள்விகள் இருக்கும்)

இரண்டாம் கட்டமாக செய்முறைத் தேர்வு (இதில் வாகனங்களை ஓட்டும் திறன் நேரடியாகச் சோதிக்கப்படும். மேலும், வாகனங்களில் ஏற்படும் சிறிய பழுதுகளை கண்டறிந்து சரிசெய்யும் திறனும் பரிசோதிக்கப்படும்).

விண்ணப்பக் கட்டணம்

விண்ணப்ப கட்டணத்தை பொறுத்தவரை, பொதுப்பிரிவு மற்றும் OBC உள்ளிட்டோருக்கு ரூ.100 ஆகும். பெண்கள், SC மற்றும் ST பிரிவினருக்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது. கட்டணத்தை அறிவிப்புடன் வழங்கப்பட்டுள்ள செல்லான் மூலம், கணினி வசதியுள்ள அஞ்சல் அலுவலகத்தில் இ-பேமெண்ட் முறையில் செலுத்த வேண்டும்.

விண்ணப்பிப்பது எப்படி?

ஆன்லைனில் விண்ணப்பிக்க முடியாது. தபால் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும். அதிகாரப்பூர்வ இந்திய அஞ்சல் துறையில் விண்ணப்பப் படிவத்தைப் பதிவிறக்கம் செய்து அதனை முழுமையாகப் பூர்த்தி செய்ய வேண்டும்.

அதனுடன் கல்விச் சான்றிதழ், வயதுச் சான்று, சாதிச் சான்றிதழ், ஓட்டுநர் உரிமம் மற்றும் ஓட்டுநர் அனுபவச் சான்றிதழ் உள்ளிட்ட தேவையான ஆவணங்களை இணைத்து, அதனுடன் விண்ணப்பக் கட்டணம் செலுத்த வேண்டியவர்கள் அதற்கான அசல் ரசீதையும் இணைக்க வேண்டும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை ஸ்பீடு போஸ்ட் (Speed Post) மூலமாக மட்டுமே அனுப்ப வேண்டும்.

அனுப்ப வேண்டிய முகவரி:

The Senior Manager (Group-A),
Mail Motor Service,
No.37, Greams Road,
Chennai - 600 006.

விண்ணப்பம் சென்றடைய வேண்டிய கடைசி நாள் நவம்பர் 30, 2026 ஆகும். எனவே அதற்குள் சென்றடையும் படி அனுப்பிவிட வேண்டும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+