அத்துமீறிய அருண்குமார்.. ஆசிட்டை குடித்த 17 வயசு பெண்.. புதுக்கோட்டையில் பரபரப்பு
மாணவியை திருமணம் செய்ய மறுத்த இளைஞர் போக்சோவில் கைது செய்யப்பட்டார்
Recommended Video
புதுக்கோட்டை: காதலித்து தன்னை ஏமாற்றிவிட்டதால், 17 வயசு பொண்ணு ஆசிட்டை எடுத்து குடிச்சிட்டார். உயிருக்கு ஆபத்தான நிலையில் அந்த பெண் சிகிச்சை பெற்றுவரும் நிலையில், இதற்கெல்லாம் காரணமான இளைஞரை போலீசார் போக்சோவில் கைது செய்தனர்.
புதுக்கோட்டை மாவட்டம் குளத்தூர் கள்ளர் தெருவை சேர்ந்தவர் சின்னப்பன். இவரது மகன் அருண்குமார். 21 வயசு. திருப்பூர் வெள்ளியங்காட்டி உள்ள அவரது மாமா சுப்பிரமணி வீட்டில் ஒரு வருடமாக தங்கி இருந்தார். மாமாவின் மளிகை கடையில் வேலையையும் பார்த்து வந்தார்.

அப்போது அருண்குமாருக்கும் அந்த பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. மாணவி, தனியார் கல்லூரியில் பி.காம், சி.ஏ. முதலாமாண்டு படிக்கிறார். இந்த பழக்கம் காதலானது.. காதல் எல்லை மீறியது.. "உன்னைதான் கல்யாணம் செய்து கொள்வேன்" என்று சொல்லி அந்த பெண்ணை பல இடங்களுக்கு அழைத்து சென்றுள்ளார் அருண்குமார்.
ஒரு கட்டத்தில் தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி மாணவி கேட்க, அதற்கு அருண்குமார் மறுத்துவிட்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த பெண், மனம் உடைந்து வீட்டில் இருந்த ஆசிட்டை எடுத்து குடித்துவிட்டார்.
இதை பார்த்த குடும்பத்தினர், உயிருக்கு போராடிய பெண்ணை திருப்பூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இன்னமும் ஆபத்தான நிலைமையில்தான் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த சம்பவம் குறித்து மாணவியின் பெற்றோர் திருப்பூர் தெற்கு அனைத்து மகளிர் போலீசில் புகார் தந்தனர். மகளை காதலிப்பதாக சொல்லி, கடைசியில் தற்கொலைக்கு தூண்டியதாக இளைஞர் மீது புகார் செய்தனர். மாணவிக்கு 17 வயசே ஆவதால், அருண்குமாரை போக்சோ சட்டத்தில் கைது செய்து கோவை சிறையில் போலீசார் அடைத்தனர்.












Click it and Unblock the Notifications