புதுக்கோட்டை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

கருணாநிதிக்கு சண்முகநாதன்.. எம்ஜிஆருக்கு மாணிக்கம்.. ஜெ.வுக்கு சசிகலா.. அவ்ளோதான்.. காங் எம்பி பளீச்

Google Oneindia Tamil News

புதுக்கோட்டை: சசிகலா ஜெயலலிதாவுக்கு பின்னால் இருந்து அவருக்கு உதவிகள் செய்து இருக்கலாம். அது ஒன்றே தமிழக முதல்வராக ஆவதற்கு தகுதி கிடையாது என புதுக்கோட்டையில் திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர் பேட்டி அளித்துள்ளார்.

Recommended Video

    இரட்டை தலைமை அதிமுகவுக்கு ஒத்துவராது - Thirunavukkarasar கருத்து | Politics

    புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ராஜ கோபால தொண்டைமான் சிலைக்கு திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர் மாலை அணிவித்து மரியாதை செய்தார்.

    தமிழக அரசு அவருடைய நூற்றாண்டு விழாவை முன்னிட்டு புதுக்கோட்டையில் மணிமண்டபம் மற்றும் அருங்காட்சியம் அமைக்கப்படும் என்று உத்தரவிட்டிருந்த நிலையில் திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர் அவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார்.

    புரட்சி பயணத்தை தொடங்கிய சசிகலா.. அதிமுக கொடி கட்டிய பிரச்சார வாகனம்.. தொண்டர்களை நோக்கி கையசைப்பு! புரட்சி பயணத்தை தொடங்கிய சசிகலா.. அதிமுக கொடி கட்டிய பிரச்சார வாகனம்.. தொண்டர்களை நோக்கி கையசைப்பு!

    புதுக்கோட்டை சமஸ்தானம்

    புதுக்கோட்டை சமஸ்தானம்

    இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய திருநாவுக்கரசர் ராஜகோபால தொண்டைமான் புதுக்கோட்டை சமஸ்தானத்தை இந்தியாவுடன் 1948-ஆம் ஆண்டு இணைத்தது அன்றைய தினத்தில் புதுக்கோட்டை சமஸ்தானத்தில் உள்ள கஜானாவில் உள்ள பொருட்கள் அனைத்தையும் ஒப்படைத்துச் சென்ற பெருமை அவருக்கு உள்ளது.

    புதுக்கோட்டை உதயமானது எப்போது

    புதுக்கோட்டை உதயமானது எப்போது

    மேலும் புதுக்கோட்டை மாவட்டம் உதயமானது 99.99 ஏக்கர் பரப்பிலான தன்னுடைய அரண்மனையையும் மாவட்ட ஆட்சியர் தலத்திற்கு அவர் ஒப்படைத்தார். இந்தியாவிலேயே பெரிய பரப்பளவிலான ஆட்சியரகம் புதுக்கோட்டை ஆட்சியர் அலுவலகம்தான் என்பது குறிப்பிடத்தக்கது. புதுக்கோட்டையில் கேந்திர வித்யாலயா பள்ளி தொடங்குவதற்கு முன்னேற்பாடு பணிகள் தொடங்கிவிட்டது.

     இரட்டை தலைமை கூடாது

    இரட்டை தலைமை கூடாது

    இந்தியாவில் எந்த ஒரு அரசியல் கட்சியாக இருந்தாலும் இரட்டை தலைமை என்பது ஒத்துவராது. ஒற்றை தலைமை இருந்தால் மட்டுமே கட்சி வலுவாக இயங்க முடியும். அதன்படி அதிமுக ஒற்றை தலைமை இருந்தால் மட்டுமே அவர்கள் செயல்பட முடியும். ஆளுங்கட்சி எவ்வளவு முக்கியமோ அதைவிட எதிர்க்கட்சி பணியும் முக்கியம் அத்தகைய பணியை அதிமுக செவ்வனே செய்ய வேண்டும்.

    கண்ணியம்

    கண்ணியம்

    அரசியலிலோ உட்கட்சி பிரச்சனைகளிலும் கண்ணியம் காக்கப்பட வேண்டும். கூட்டத்தில் தண்ணீர் பாட்டில் வீசுவது அநாகரீகமான செயல்களில் ஈடுபடுவதோ கூடாது. கடந்த அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் இத்தகைய நிகழ்வுகளை அவர்கள் தடுத்திருக்கலாம் இனிவரும் காலங்களிலாவது கண்ணியத்தை கடைபிடிக்க வேண்டும் என்றார்.

    உதயகுமார் பேச்சு

    உதயகுமார் பேச்சு

    இன்று மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் உதயகுமார் ஓபிஎஸ் அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றால் திருநாவுக்கரசருக்கு என்ன நிலைமை ஏற்பட்டதோ அதே நிலைமைதான் ஏற்படும் என்று கூறியுள்ளது குறித்த கேள்விக்கு பதிலளித்த திருநாவுக்கரசர், உதயகுமார் ஏதாவது பேசவேண்டும் என்பதற்காக இந்தக் கருத்தை கூறியுள்ளார்.

    நான் நல்லாதானே இருக்கேன்

    நான் நல்லாதானே இருக்கேன்

    நான் எத்தகைய கஷ்டமும் படவில்லை. நான் எம்பி ஆக உள்ளேன் காங்கிரஸ் கட்சியில் தேசிய நிர்வாகியாக உள்ளேன். அதேபோன்று என்னுடைய மகன் அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினராக உள்ளார். ஏதாவது கருத்து கூற வேண்டும் என்பதற்காக இதுபோன்ற கருத்துக்களை உதயகுமார் கூறியுள்ளார். சசிகலா ஜெயலலிதாவுக்கு பின்னால் இருந்து அவருக்கு உதவிகள் செய்து இருக்கலாம்.

     சசிகலா யார்

    சசிகலா யார்

    கருணாநிதிக்கு சண்முகநாதன் இருந்தார் எம்ஜிஆருக்கு மாணிக்கம் இருந்தார். ஜெயலலிதாவுக்கு சசிகலா இருந்தார். அது ஒன்றே தமிழக முதல்வராக ஆவதற்கு தகுதி கிடையாது. காசு இருப்பதால் காரில் டூர் செல்லலாம் ஆனால் தொண்டர்கள் மாவட்டச் செயலாளர்களும் அவர் பின்னால் இல்லை. சசிகலாவிற்கு ஆதரவு இல்லை என்றார்

    English summary
    Congress MP S Thirunavukkarasar says that Sasikala helps Jayalalitha like PA. That alone not eligible for becoming CM.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X