லாரிக்கு அடியில் சிக்கிய கன்று.. அங்கும் இங்கும் பதறி ஓடிய பசு.. மீட்ட மக்கள்.. அவளும் தாய்தானே!
புதுக்கோட்டை: லாரிக்கு அடியில் சிக்கிக் கொண்ட கன்றுக் குட்டியை காப்பாற்ற தாய் நடத்திய பாசப் போராட்டம் குறித்த வீடியோ வைரலாகி வருகிறது.
Recommended Video
ஐந்தறிவு உள்ள ஜீவராசிகளானாலும் சரி தன் குட்டியையோ கன்றையோ, குஞ்சையோ கண்ணை இமை காப்பது போல் காக்கும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. இது மன்னர் காலத்திலேயே நிரூபிக்கப்பட்ட ஒரு உண்மையாகும்.
ஆம். சோழர் ஆட்சி காலத்தில் மனு ஆட்சியின் போது துன்பத்தில் இருக்கும் மக்கள் அங்குள்ள ஆராய்ச்சி மணியை அடித்து நீதி கேட்கலாம், உதவி கேட்கலாம்.

அரசர்
அது போன்ற ஒரு சூழலில் ஒரு தாய் பசு ஒன்று ஒரு நாள் ஆராய்ச்சி மணியை அடித்தது. மன்னருக்கு ஒன்றும் புரியவில்லை. எனினும் பசுவுக்கு அருகில் போய் நின்றார். அப்போது அந்த கன்று அந்த இடத்தில் இருந்து ஓடியது. பின்னால் அரசரும் சென்றார்.

சக்கரங்கள்
அப்போது சாலையில் கன்றுக் குட்டி ஒன்று தேரில் அடிப்பட்டு இறந்துகிடந்தது. அப்போது மன்னன் அங்கிருந்த மக்களிடம் விசாரித்ததில் மனுவின் மகன் வீதி விடங்கன் தேர் உலா சென்ற போது அவரையே அறியாமல் கன்றின் மீது சக்கரங்கள் ஏறியதில் அது இறந்தது.

போராட்டம்
இதற்கு நியாயம் கேட்கவே பசு வந்தது என்பதை அரசர் புரிந்து கொண்டார். இதையடுத்து தன் மகனையும் தேரை ஏற்றி கொன்று பசுவுக்கு நீதி வழங்கினார். இதனால் அவர் மனுநீதிச் சோழன் என்று அழைக்கப்பட்டார். அது போன்ற ஒரு பாசப் போராட்டத்தைதான் நேற்றைய தினம் ஒரு பசு நடத்தியது.

புதுக்கோட்டை
கீழ் இரண்டாம் வீதியில் கடைக்கு சரக்கு இறக்குவதற்காக லாரி ஒன்று நின்று கொண்டிருந்தது. அப்போது பசுவுடன் வந்த கன்றுக்குட்டி லாரிக்கு அடியில் சிக்கிக் கொண்டது. லாரிக்கு அடியில் சென்ற கன்று வெளியே வர முடியாமல் அவதியடைந்தது. இதற்காக அங்கும் இங்கும் ஓடியது. அங்கிருந்த பொதுமக்கள் வந்து கன்றை மீட்கும் முயற்சியில் ஈடுபட்ட போதிலும் அவர்களை நம்பாமல் அதுவாகவே காப்பாற்ற சுற்றி சுற்றி ஓடியது.

வைரல்
இதையடுத்து கம்பை வைத்து தாய் பசுவை கட்டுப்படுத்த முயற்சி நடந்த நிலையில் கன்றின் கால்களை மடக்க செய்து லாரியின் வெளியிலிருந்து இழுத்தனர். இதையடுத்து கன்றை பார்த்த மகிழ்ச்சியில் பசுவும் கன்றும் ஒன்றையொன்று தழுவி கொண்டது. இந்த வீடியோ வைரலாகி வருகிறது.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications