தீபாவளியிலும் தீண்டாமை.. பட்டாசு வாங்கிய தலித்-பீர் பாட்டிலால் மண்டை உடைப்பு! புதுக்கோட்டையில் பகீர்
புதுக்கோட்டை: தீபாவளி பண்டிகைக்காக பட்டாசு வாங்கிக்கொண்டு பைக்கில் சென்ற இளைஞரை வழிமறித்து பீர் பாட்டில் கொண்ட தலையில் கொலைவெறியுடன் ஆதிக்க சாதியினர் தாக்கிய சம்பவம் புதுக்கோட்டையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் வேங்கைவயல் தொடங்கி தொடர்ந்து சாதி வெறி கொடூரங்கள், தீண்டாமை குற்றங்கள் அரங்கேறி வருகின்றன. அந்த வகையில் கறம்பக்குடி அருகே தீபாவளி பண்டிகை அன்று கொடூர சம்பவம் நடந்திருக்கிறது. கறம்பக்குடி அடுத்த மோலுடையான்பட்டியில் பட்டியல் சமூகத்தை சேர்ந்த பிரகாஷ் என்ற இளைஞர் பட்டாசு வாங்கிச் சென்றபோது சாதி வெறியர்கள் அவரை வழிமறித்து பாட்டிலால் மண்டையை உடைத்து இருப்பதாக இயக்குநர் பா.ரஞ்சித்தின் நீலம் பண்பாட்டு மையம் அதிர்ச்சித் தகவலை தெரிவித்து உள்ளது.

இதுகுறித்து ட்விட்டரில் அந்த அமைப்பு பதிவிட்டு உள்ளதாவது, "தீபாவளி தினத்திலும் தென் மாவட்ட மக்களின் நெஞ்சை உலுக்கும் சாதிய தீண்டாமை சம்பவங்கள். புதுக்கோட்டை மாவட்டம் ஆயிப்பட்டி, அண்ணா நகரைச் சேர்ந்த பட்டியலின இளைஞர் பிரகாஷ் பட்டாசு வாங்கி தனது இரு சக்கர வாகனத்தில் வீட்டிற்குச் சென்ற போது மோலுடையான்பட்டி, நான்கு ரோட்டில் அருகே கீழ்தொண்டைமான் கிராமத்தில் ஆதிக்க சமூகத்தை சேர்ந்த சாரதி மற்றும் அவர்களின் கூட்டாளிகள் சேர்ந்து வழிமறித்து இளைஞர் பிரகாஷை சாதிய தீண்டாமை வார்த்தையில் கொச்சையாக பேசி பீர் பாட்டிலில் 15 முறை தலையில் கொடூரமாக தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்,
இப்போக்கை வன்மையாக கண்டிக்கிறோம். புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் பிரகாஷை இரத்த வெள்ளத்தில் அனுமதிக்கப்பட்ட நிலையில் நீலம் பண்பாட்டு மையம் செயல்வீரர் முருகானந்தன் உடன் அமைப்பு தோழர்களும் நேரில் சென்று ஆறுதல் கூறியும், மாவட்ட ஆட்சியர் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் மனு அளித்தும் உள்ளார்கள், தேசிய பட்டியலின ஆணைய இயக்குநர் அவர்களுக்கும் தகவல் அளித்துள்ளோம்.
#தீபாவளி_தினத்திலும்
— நீலம் பண்பாட்டு மையம் (@Neelam_Culture) November 13, 2023
தென் மாவட்ட மக்களின் நெஞ்சை உலுக்கும் சாதிய தீண்டாமை சம்பவங்கள்.#புதுக்கோட்டைமாவட்டம்
ஆயப்பட்டி,அண்ணா நகரைச் சேர்ந்த #பட்டியலினஇளைஞர்#பிரகாஷ் பட்டாசு வாங்கி தனது இரு சக்கர வாகனத்தில் வீட்டிற்குச் சென்ற போது மோலுடையான்பட்டி ,
நான்கு ரோட்டில் அருகே… pic.twitter.com/dJ9VWFVrLq
நாளை முறையாக மனு அனுப்ப உள்ளோம். சாதி மன நோய் பிடித்த குற்றவாளிகளை SC / ST வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் கீழ் வழக்குப் பதிவு செய்து கைது செய்து உரிய நீதி வழங்கிட வேண்டும். தென் மாவட்டங்களில் தொடரும் பட்டியல் மக்களுக்கு எதிரான சாதிய தீண்டாமை வன்முறையை தடுக்க தமிழக அரசு, முதலமைச்சர் முக ஸ்டாலின், சட்ட ரீதியாக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்." என்று குறிப்பிட்டு உள்ளது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications