ஆவின் விவகாரம்.. எதிர்க்கட்சிகள் தூண்டுகிறார்களா? திமுகவால் சமாளிக்க முடியவில்லை.. சாடும் பிரேமலதா!

ஆவின் பால் விவகாரத்தை ஆளுங்கட்சியால் சமாளிக்க முடியவில்லை என்று பிரேமலதா விஜயகாந்த் விமர்சித்துள்ளார்.

Subscribe to Oneindia Tamil

புதுக்கோட்டை: ஆவின் பால் உற்பத்தியாளர் பிரச்சனையை ஆளுங்கட்சியால் சமாளிக்க முடியவில்லை என்பதால், அமைச்சர் நாசர் எதிர்க்கட்சிகள் தூண்டுவதாக பழி போடுவதாக தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். அதிமுக நான்காக உடைந்துள்ளதாக கூறிய பிரேமலதா விஜயகாந்த், பாஜகவுடன் கூட்டணியில் இருந்துகொண்டே மாற்றி மாற்றி விமர்சிப்பது ஆரோக்கியமானதல்ல என்று தெரிவித்துள்ளார்.

ஆவின் நிறுவனத்திற்கு வழங்கப்படும் பால் லிட்டருக்கு ரூ. 7 கொள்முதல் விலையை உயர்த்தி வழங்க வேண்டும் என பால் உற்பத்தியாளர் சங்கத்தினர் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

இதனை தொடர்ந்து பால்வளத்துறை அமைச்சர் நாசர், பால் உற்பத்தியாளர்கள் சங்க பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால் இன்று முதல் பால் நிறுத்தப் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இனி ஆவினுக்கு பால் வழங்கப்போவதில்லை என உற்பத்தியாளர்கள் அறிவித்துள்ளதால் ஆவின் பாலுக்கு தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

 எதிர்க்கட்சிகள் தூண்டிவிடுகிறார்களா?

எதிர்க்கட்சிகள் தூண்டிவிடுகிறார்களா?

இந்த நிலையில் புதுக்கோட்டையில் செய்தியாளர்களை சந்தித்து தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் கூறுகையில், குழந்தைகள் முதல் பெரியர்கள் வரை அனைவரும் பயன்படுத்துவது பால் தான். சென்னையில் ஏற்கனவே ஆவின் பால் தட்டுப்பாடு உள்ளது. இந்த விவகாரத்தில் எதற்காக எதிர்க்கட்சிகள் தூண்டிவிட போகிறார்கள்? இந்த பிரச்சனைளை ஆளுங்கட்சியால் சமாளிக்க முடியவில்லை. அதனால் எதிர்க்கட்சிகள் மீது பழியை போடுகிறார்கள். இதில் அமைச்சர் நாசர் உடனடியாக தீர்வு காண வேண்டும் என்று வலியுறுத்தினார்.

நீட் தேர்வு விவகாரம்

நீட் தேர்வு விவகாரம்

தொடர்ந்து, உதயநிதி ஸ்டாலினின் நீட் தேர்வு ரத்து ரகசியம் பற்றிய கேள்விக்கு, மருத்துவமனையின் ஒரு அரங்கிற்கு அனிதா பெயரை வைத்த உடன் நீட் தேர்வு பிரச்சனை முடிந்துவிட்டதாக நினைக்கிறார்கள். அதுஒரு கண் துடைப்பு நாடகம். அரசியல் செய்வதற்காகவே நீட் தேர்வை ரத்து செய்வோம் என்று கூறினார்கள். ஆனால் ஆட்சிக்கு வந்து 2 ஆண்டுகள் முடிவடைந்த பின்னரும், இதுவரை நீட் தேர்வை ரத்து செய்ய முடியவில்லை என்று விமர்சித்தார்.

ஈரோடு தேர்தல் தோல்வி

ஈரோடு தேர்தல் தோல்வி

பின்னர் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தோல்வி பற்றிய கேள்விக்கு, ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் தேமுதிக தைரியமாக களத்தில் இருந்தோம். அங்கு நடந்தது தேர்தலே கிடையாது. இதுவரை எவ்வளவு தேர்தலை சந்தித்திருக்கிறோம். ஆனால் இதுபோன்ற ஒரு தேர்தலை பார்த்ததில்லை. எந்த புகாருக்கும் தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கவில்லை. ஜனநாயகத்திற்கு எதிராக நடைபெற்ற தேர்தல் அது. நாடாளுமன்றத் தேர்தல் பற்றி முடிவு எடுக்க இன்னும் காலம் உள்ளது என்று தெரிவித்தார்.

அதிமுகவில் விரிசல்

அதிமுகவில் விரிசல்

தொடர்ந்து, அதிமுக - பாஜக இடையிலான மோதல் பற்றிய கேள்விக்கு, அதிமுகவிற்குள் பல விரிசல்கள் உள்ளது. ஏற்கனவே 4 அணிகளாக பிரிந்துள்ளார்கள். அனைவரும் ஒன்று சேர்ந்தால் தான் பலத்தை நிரூபிக்க முடியும். அதன் பின்னர் பாஜகவுடன் கூட்டணியில் இருக்கிறார்களாக என்பதை முடிவு எடுக்க வேண்டிய அதிமுக தலைமை. ஒரே கூட்டணியில் இருந்துகொண்டு ஒருவரை ஒருவரை விமர்சிப்பது ஆரோக்கியமானதல்ல என்று தெரிவித்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+