லேட்டாக வந்த விஜய்! கரூர் சம்பவத்திற்கு செந்தில் பாலாஜியே காரணம்.. அமித்ஷா முன்பு நயினார் அட்டாக்
புதுக்கோட்டை: புதுக்கோட்டையில் இன்று நடந்த பாஜக பொதுக்கூட்டத்தில் பேசிய தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் விஜய் லேட்டாக வந்தார் என்றும் கூட்ட நெரிசல் சம்பவத்திற்கு செந்தில் பாலாஜியே காரணம் என்றும் பகிரங்க குற்றச்சாட்டை வைத்தார்.
புதுக்கோட்டையில் இன்று பாஜக பொதுக்கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கலந்துகொண்டுள்ளார். பாஜக தலைவர்கள் தமிழிசை சவுந்தரராஜன், பொன் ராதாகிருஷ்ணன், அண்ணாமலை, மத்திய இணை அமைச்சர் எல் முருகன், நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

அப்போது நயினார் நாகேந்திரன் பேசியதாவது:- திமுக எப்போதாவது ஜெயிக்கும் கட்சி. ஆனால் பாஜக கூட்டணி எப்போதும் ஜெயிக்கும் கட்சி. திமுக இனி எந்த காலத்திலும் ஆட்சிக்கு வர முடியாது. இன்னும் நிறைய கட்சிகள் எங்கள் கூட்டணிக்கு வருவார்கள். அமித்ஷா உருவாக்கிய கூட்டணி மாற்றத்தை உருவாக்கும் கூட்டணி. ஒடிசாவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது போலவே தமிழகத்திலும் ஆட்சி மாற்றம் உறுதி.
ஒடிசாவில் வீசிய அலைதான் தற்போது தமிழகத்திலும் மேற்கு வங்கத்திலும் வீசும். அதற்கான அச்சானி அமித் ஷா தான். தீபாவளிக்கு கூட வாழ்த்து சொல்ல மறுக்கிறார்கள். மதசார்பின்மையை கடைப்பிடிக்க மறுக்கிறார்கள். பாஜக தான் உண்மையாகவே மதசார்பின்மையை கடைப்பிடிக்கின்றனர். திமுக அமைச்சர்கள் பெண்களை மதிப்பதே கிடையாது. ஏளனமாக பேசுகிறார்கள்.
திமுக ஆட்சி அகற்றப்படும் வரை தேசிய ஜனநாயக கூட்டணியினர் அயராது உழைக்க வேண்டும். ஒரு கட்சியின் தலைவர் 12 மணிக்கு வர வேண்டும். ஆனால் அவர் 7 மணிக்கு வருகிறார். இதன் விளைவு 41 பேர் உயிரிழந்தனார். கரூர் கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தனர்.
உடனே உடற்கூராய்வு செய்யப்படுகிறது. இந்த சம்பவத்திற்கு காரணம் செந்தில் பாலாஜி தான். செந்தில் பாலாஜியை காப்பாற்றவே முதல்வர் ஸ்டாலின் ஓடோடி வருகிறார். வரும் தேர்தலில் பாஜக கூட்டணி அபார வெற்றி பெறும் . இவ்வாறு அவர் கூறினார்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா












Click it and Unblock the Notifications