அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரை இறுக்கும் அமலாக்கத்துறை.. நீதிமன்றத்தில் புதிய மனு
புதுக்கோட்டை: முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் கடந்த வியாழக்கிழமை அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. இந்த நிலையில், விஜயபாஸ்கருக்கு எதிராக லஞ்ச ஒழிப்புத்துறை பதிவு செய்த கோர்ட்டில் சமர்ப்பித்த விவரங்களை கேட்டு புதுக்கோட்டை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை மனு தாக்கல் செய்துள்ளது.
அதிமுக ஆட்சியின் போது சுகாதாரத்துறை அமைச்சராக இருந்தவர் சி. விஜயபாஸ்கர். கொரோனா காலத்தின் போது பெரிதும் பேசப்பட்டவர். அதிமுகவில் மிக முக்கிய நபராக இருக்கும் விஜயபாஸ்கர் வீட்டில் நேற்று முன் தினம் காலை அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

புதுக்கோட்டை இலுப்பூரில் உள்ள அவரது வீட்டிற்கு 3 கார்களில் வந்த அமலாக்கத்துறை அதிகாரிகள் மாலை வரை சோதனை நடத்தினர். மதுரை மற்றும் சென்னையை சேர்ந்த அமலாக்கத்துறை அதிகாரிகள் விஜயபாஸ்கர் வீட்டில் சோதனை நடத்தினர். இதேபோல் சென்னையில் உள்ள அவரது வீட்டிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.
விஜயபாஸ்கர் மீது புதுக்கோட்டை நீதிமன்றத்தில் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக தொடரப்பட்ட வழக்கு தொடர்பாக அமலாக்கத்துறை இந்த சோதனையை மேற்கொண்டதாக தகவல் வெளிவந்தது. இந்த நிலையில், இதனை உறுதிப்படுத்தும் வகையில், வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்துள்ளதாக விஜயபாஸ்கர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு தொடர்ந்துள்ள, புதுக்கோட்டை முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் இந்த வழக்கின் விவரங்களை கேட்டு அமலாக்கத்துறை மனு தாக்கல் செய்துள்ளது. மேலும், அந்த வழக்கில் தங்களையும் சேர்க்க கோரி அமலாக்கத்துறை மனு தாக்கல் செய்துள்ளது.
அதிமுக வந்தால்தான் தமிழ்நாட்டை காப்பாற்ற முடியும்.. ஒரே போடாக போட்ட எடப்பாடி.. பாமக மீதும் அட்டாக்
விஜயபாஸ்கர் மீது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது. கடந்த 2021 ஆம் ஆண்டில் லஞ்ச ஒழிப்புத்துறையும் விஜயபஸ்கர் வீட்டில் சோதனை நடத்தியது. ஆர்.கே நகர் சட்டமன்ற இடைத்தேர்தலின் போது வருமான வரித்துறை அதிகாரிகள் விஜயபாஸ்கர் வீட்டில் சோதனை மேற்கொண்டு இருந்தனர்.
இந்த நிலையில்தான், தற்போது லோக்சபா தேர்தல் அறிவிக்கப்பட்டு இருக்கும் சூழலில் விஜபாஸ்கர் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். சில ஆண்டுகளுக்கு முன்பு வருமானவரித்துறை சோதனையின் போது கிடைத்த தகவல்களின் அடிப்படையில், அமலாக்கத்துறை விஜயபாஸ்கர் மீதான பிடியை இறுக்க தயாராகியுள்ளது. ஏற்கனவே, பாஜகவுடன் கூட்டணியில் இருந்து விலகியதால் அதிமுக பல பிரச்சினைகளை சந்திக்க வேண்டியிருக்கும் என அரசியல் விமர்சகர்கள் கூறி வந்த நிலையில், தற்போது அமலாக்கத்துறை சோதனை நடத்தியிருப்பது முக்கியத்துவம் பெற்றுள்ளது.
-
தமிழகத்தில் மீண்டும் திமுக ஆட்சி.. கடும் போட்டி கொடுக்கும் அதிமுக! விஜய் நிலைமை.. வெளியான புதிய கருத்து கணிப்பு -
Gold Investors: தங்கம் விலை தொடர் சரிவு! முதலீட்டாளர்களுக்கு நஷ்டம்? என்ன நடக்கிறது? -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை? -
திமுகவையே ஓவர்டேக் செய்த எடப்பாடி.. அதிமுக – பாஜக தொகுதி பங்கீட்டில் இப்படி நடந்ததே இல்லை! பின்னணி -
மதுக்கடைகள் படிப்படியாக மூடப்படும்.. 297 அறிவிப்புகள் அடங்கிய அதிமுக தேர்தல் அறிக்கையை வெளியிட்ட எடப்பாடி -
அதிமுக கூட்டணியில் தமாகவுக்கு 5 இடங்கள் ஒதுக்கீடு.. தாமரை சின்னத்தில் போட்டி.. தொகுதிகள் லிஸ்ட் -
தமிழக தேர்தல் வரலாறு: 1984க்கு பின் 2016ல் சாதித்த ஜெ.! திமுகவினர் மீது 3264 நில அபகரிப்பு வழக்குகள் -
விஜய்க்கு ஷாக்.. தமிழக வெற்றி கழகத்துக்கு செக்! 10 சதவீதத்துக்கும் கீழே ‘தவெக’ - சறுக்கிய வியூகம்? -
சென்னை தங்க பஸ்சில் நடந்த சம்பவம்.. கொஞ்சம் பொறுப்போட நடங்க! பயணிகளுக்கு நெட்டிசன்கள் அட்வைஸ் -
பாமக வரலாற்றிலேயே முதல் முறையாக.. 35 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகக் குறைவான தொகுதிகளில் போட்டி! -
தேர்தலுக்கு முன்பே.. முக்கியமான "வாரில்" தோற்ற விஜய்.. தவெக இப்பவும் சுதாரிக்கலைனா.. போச்சு! -
2026 தேர்தலே டல் அடிக்குது.. என்னதான் ஆச்சு திமுக, அதிமுகவுக்கு! 2021ல் இந்நேரம் எல்லாமே பினிஷ்!












Click it and Unblock the Notifications