கஜா புயலுக்கு நிவாரணம் வழங்காத வட்டாச்சியர்.. புதுக்கோட்டையில் வாகனத்திற்கு தீ வைப்பு.. போராட்டம்!
கஜா புயலை அடுத்து சரியாக நிவாரண பணிகளை செய்யாத வாட்டாச்சியாரை கண்டித்து புதுக்கோட்டையில் மக்கள் போராட்டம் நடத்தி இருக்கிறார்கள்.
புதுக்கோட்டை: கஜா புயலை அடுத்து சரியாக நிவாரண பணிகளை செய்யாத வாட்டாச்சியாரை கண்டித்து புதுக்கோட்டையில் மக்கள் போராட்டம் நடத்தி இருக்கிறார்கள்.
கஜா புயல் தமிழகத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த புயலால் 7 மாவட்டங்களில் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இயல்பு வாழ்க்கை மொத்தமாக நசிந்து போய் உள்ளது.

இந்த புயலால் புதுக்கோட்டை மாவட்டம் மிக அதிக அளவில் சேதம் அடைந்து இருக்கிறது. அங்கு இன்னும் இயல்பு வாழ்க்கை திரும்பவில்லை. இன்னும் ஒரு வாரத்திற்கு அங்கு மின்சாரம் வருவதே சிரமம் என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில் அங்கு நிவாரண பணிகள் சரியாக நடக்கவில்லை என்றும் குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது. நிவாரண பணிகள் நடக்காத காரணத்தால் மக்கள் கடும் கோபம் கொண்டு இருக்கிறார்கள்.
இதையடுத்து புதுக்கோட்டை கொத்தமங்கலத்தில் வட்டாட்சியர் வாகனத்தை சிறைபிடித்து மக்கள் போராட்டம் நடத்தி உள்ளனர். நேற்று மாலை இந்த போராட்டம் நடந்தது.
வட்டாட்சியர் பாதுகாப்புக்கு வந்த காவல் வாகனம் மீது கல்வீசி தாக்குதல் நடத்தி உள்ளனர். இதில் காவலர் இருவர் படுகாயம் அடைந்துள்ளனர்.
இந்த போராட்டம் முற்றவே வட்டாட்சியர் வாகனம், காவல் வாகனம் உட்பட 4 வாகனங்களுக்கு தீ வைக்கப்பட்டது. இதனால் வட்டாச்சியர் வேறு வாகனம் மூலம் திரும்பி சென்றார்.
கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் கணக்கெடுப்பு நடத்தப்படவில்லை என பொதுமக்கள் குற்றச்சாட்டு வைத்து இருக்கிறார்கள். இதனால் அங்கு பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகிறது.
-
சென்னை உட்பட.. 26 மாவட்டங்களை லிஸ்ட் போட்ட வானிலை மையம்! ஆட்டம் ஆரம்பம்! கனமழை வெளுக்கப்போகுது! -
சென்னையில் மழை வெளுக்கப்போகுது.. மொத்தமா 9 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை! அடுத்த 2 மணி நேரம் உஷார் -
தவெக தலைமையில் தமிழ்நாடு சமூக நீதி முற்போக்கு கூட்டணி.. திமுகவுக்கு பிரவீன் சக்ரவர்த்தி செக்மேட் -
தமிழ்நாட்டின் முதல் சட்டமன்ற பெண் செயலாளராக சாந்தி நியமனம்.. யார் இவர்? இவருடைய பவர் என்ன? -
தமிழ்நாட்டுக்கு பெரிய அடி.. ஆந்திராவுக்கு கைமாறிய மசாகான் டாக் திட்டம்! தொழில் அமைச்சருக்கு சிக்கல்! -
மேகதாது அணை: முதல்வரானதும் டி.கே.சிவகுமார் அதிரடி! முடிவெடுக்க வேண்டியது தமிழ்நாடு இல்லை! -
தமிழகத்தில் ஒரே நேரத்தில் 60 சார் பதிவாளர் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு துறை ரெய்டு! -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு











Click it and Unblock the Notifications